Author: வர்மா
•6:47 AM

அச்சமென்பதுமடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா,வேப்பமர உச்சியிலிருந்து பேயொன்று ஆடுதென்று போன்ற பாடல்களீன் மூலம் பயம் என்பது என்னவென்றேதெரியாது. சன்னதிகோயில் கொடியேறினால் 15 நாளும் சன்னதியில்தான்.சன்னதியானின்ரை சாப்பாட்டை தவறவிமாட்டம்.கோயிலிலை நிப்பம் திடீரென யாழ்ப்பாணம் போய் படம் பாப்பம். சிலவேளை அச்சுவேலி தியேட்டரிலை படம் பாப்பம்.பள்ளிக்கூடத்திலை படிக்கேக்கை தேர் தீத்தத்துக்கு ஸ்கவுட்சா ஒழுங்காகக்கடமை செய்தனாங்கள்.

ஒருநாள் இரவு நெல்லியடி தியேட்டரிலை இரவு 9.30 மணீக்கு நெஞ்சம்மறப்பதில்லை படம்பாத்துவிட்டு நடந்து சன்னதிக்குப்போனம்.மறுபிறவி பற்றிய கதை.புறாப்பொறுக்கிதாண்டி வல்லை வெளீக்குப்போனதும்தூரத்திலை ஏதோவெளீச்சம் தெரிஞ்சுது. அய்யோ பேய் எண்டு ஒருவன்கத்தின்னான் அவ்வளவுதான்.ஆளுக்கொருபக்கமா வயல் வெளீககை ஓடத்தொடங்கினம்.ஒவ்வொருத்தரா சன்னதிக்குப் போய்ச்சேந்தம்.

சிவராத்திரியிலண்டு பருத்தித்துறை தியேட்டரிலை கெளரவம் படம் பாக்கிறதுக்கு திட்டம் போட்டம். அல்வாய் சாமணந்தறை சுடலைக்கு கிட்டப்போனதும் பெரியப்பா சுகமாக இருக்கிறியளா எனக்கேட்டபடி ஒருவன் சைக்கிளை சுடலைக்குள்ளைவிட்டான். போனவாரம்தான் அவனுடைய பெரியப்பா செத்தவர்.அதைக்கண்டு உசாரான ஒன்னொருவன் செத்துப்போன தன்னுடைய மாமாவைக்கூப்பிட்டுக்கொண்டு சுடலைக்குள் ஓடினான்.மோகன் மட்டும் தோடுடையசெவியன் எனத்தேவாரம் பாடியபடி பின்னால் ஓடிவந்தான்.

தியேட்டருக்குப்போனதும் படம்முடிய அரை மனித்தியாலம் இருக்கு என்றார்கள். அந்தக்காலத்திலை படத்தின் வசனத்தையும் பாட்டுக்களையும் வெளீயே போடுவார்கள். வசந்தமாளீகையின்கதை வசனம் இப்பவும் மனப்பாடம். மறு நாள்காலையில் மோகனத்தேடிப்போனேன்.சுகமில்லாமல்மந்திகையில் சேத்திருக்கு எண்டு தகப்பன் கூறினார்விளையாட்டு விபரீதமானதை உணர்ந்தேன்.

பாடசாலை விடுமுறைக்கு வவுனியாவுக்குப்போனேன்.உறவினர்கள் கடை வைத்திருந்தார்கள்.பெரியம்மாவின் மகன் ஒருவர் வவுனியாவில் விவசாய அதிகாரியாகக்கடமையாற்றினார்.சிலவேளைகளீல்அவருடன் பண்ணைகளுக்குப்போவேன். ஆற்றில் குளத்தில் குளீப்பது, மீன்பிடிப்பதுஎல்லாம் வித்தியாசமானஅனுபவம்.
பண்ணையொன்றில் இரவு நான்படுப்பதற்கு ஆயத்தமானபோது தம்பி உதிலை படுக்காதையுங்கோ கொஞ்சம் தள்ளீப்படுங்கோ என்று ஒருவர்கூறினார். ஏன் என்று கேட்டேன். காரணம் சொல்லாமல் வேறிடத்தில் படுக்கும்படி கூறினார். அந்த இடத்தில்தான் படுப்பேன் என்று நான் உறுதியாகக்கூறினேன்.

அந்த இடத்தில் படுத்தால் அமுக்குப்பேய்பிடிக்கும் என்றார்கள்.பேயைப்பார்கக ஆசைப்பட்டதால் அந்த இடத்தில் படுத்தேன். பேயைப்பார்க்கிற ஆர்வத்தில் கனநேரம் நித்திரை வரவில்லை.என்னை அறியாமல் உறங்கிவிட்டேன்.யாரோ அமுக்குவதுபோலிருந்தது. எழும்பமுயற்சித்தேன்.முடியவில்லை.சத்தம்போட்டேன்.சத்தம்வெளியேவரவில்லைதிடீரென எழும்பி இருந்தேன்.பின்னர்படுத்துவிட்டேன்.விடிந்த்தும் யாரிடமும் இரவு நடந்ததைச் சொல்லவில்லை.

கல்மடு பண்ணயில் ஒரு நாள் இரவு தங்கினேன். தூரத்தில் ஒருவெளிச்சம் தெரிந்தது. அது என்னவென்று கேட்டேன்... தெரியாது.எப்பவாவது ஒருநாள்தான் தெரியும்.கிட்டப்போனால். மறைந்துவிடுமென்றார்கள். என்னால் நம்பமுடியவில்லை. பார்த்துவிடுவதென்று முடிவெடுத்தேன். வெளிச்சத்தை நோக்கிச்சென்றேன். கிட்டப்போகப்போக அதனுடையதூரம் குறையவில்லை. நான்வேகமாகச்சென்றேன். அதுவும் வேகமாகச்சென்றது.காட்டுக்குள் அதுமறைந்துவிட்டது. நான் திரும்பிவந்துவிட்டேன்.அந்தவெளிச்சத்தைப்பார்த்து யானையே பயந்ததாம்.

ஊரில் ஒரு வீட்டில் வீடியோ பார்த்தோம்.நள்ளிரவு தாண்டியபோது படத்திலே அனைவரும் ஒன்றிணைந்திருந்தபோது வெளியேபடுத்திருந்த நாய் பயங்கரமாகச்சத்தமிட்டுக்கொண்டு வீட்டுக்குள் ஓடியது. துணிவுள்ள சிலர் எனனவென்றுபார்க்க வெளியே ஓடினார்கள்.
அப்போது வீட்டில் இருந்த98 வயதான ஆச்சி பொடியள் வெளீயே போகாதேங்கோ என்றார்.
அவர் சொல்லிவாய்மூடவில்லை தூரத்தில் ஒப்பாரிச்சத்தம் கேட்டது.அந்தவீட்டிலே சுகமில்லாமல் இருந்த ஒருவர் இறந்துவிட்டார் என அறிந்தோம்.

சுமார் 25 வ்ருட‌ங்க‌ளூகு முன்ந‌ட‌ந்த‌ இச்ச‌ம்ப‌வ‌ங்க‌ளை நினைத்தால் இன்றைக்கும் அதிச‌ய‌மாக‌ உள்ள‌து.

ஒப்பாரி,,,,,,,,,,,,,,,,,, இற‌ந்த‌வரின் புகழையும் சிறப்பையும் கூறி அழுவ‌து.
This entry was posted on 6:47 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

16 comments:

On August 15, 2009 at 7:53 AM , சினேகிதி said...

நெல்லியடி மகாத்மா தியேட்டரா?? அங்க இருந்து சந்நிதிக்கு நடந்தா ஆ ஆ ஆ??.

வல்லை சுண்ணாகத்தில இருக்கிற ஒரு அம்மன் கோயில் இங்க எல்லாம் வெள்ளைச் சீலை கட்டின அம்மன் உலா வாறவா என்ட கதைகள் இருக்கு. அதும் கிளாலிப் பாதையால் போய் வந்தவர்கள் இந்தக் கதைகள் நிறையச் சொல்லுவார்கள்.

மற்றது சண்டைக்குப் போற அக்கா மார் அண்ணாமார் கூடவும் பேய்கள் போய் வந்த கதைகளிருக்கு.

நானும் இரவில சுடலைக்குப் போயிருக்கிறன். உறவினர் ஒருவரின் வீடு சுடலைக்கு கிட்ட இருக்கு. ஒருநாள் இரவு நாங்கள் கொஞ்சப்பேர்; சேர்ந்து வீட்ட சொல்லாம கோயிலடிக்குப் போறம் என்டு சொல்லிட்டு சுடலைக்குப் போனாங்கள். கதைச்சுக்கொண்டு கொஞ்சத்தூரம் உள்ளுக்கு போட்டம். கிட்டடியில எரிஞ்ச பிணம் ஒன்றிலிருந்து சாதுவான நெருப்பும் சாம்பல் வாசமும் வந்துகொண்டிருந்தது....கொஞ்சநேரத்தில அது எழும்பிச்சு...எல்லாரும் கத்திக்கொண்டு ஒரே ஓட்டம். வீட்ட போயும் ஒன்டும் சொல்லேல பயத்தில. அதுக்குப் பிறகு அந்தப்பக்கம் பகல்ல கூடப்போறேல்ல.

அதே போல அண்ணா ஒருமுறை ஒரு விபத்தைப் பார்க்கப் போனவன். அடி பட்ட ஆள் அந்த இடத்திலயே அந்தாள் மூளை சிதறிச் செத்திட்டார். அண்டிரவு வீட்ட நிறைய ஆக்கள் நிண்டவை அண்ணா விறாந்தைல படுத்திருந்தவன் இரவு சாமத்தில திடிரென்று ஐயோ அந்தாள் கூப்பிடுது கூப்பிடுது என்று ஒரே சத்தம். யன்னலுக்கால செத்துப்போனாள் கையை நீட்டி நீட்டித் தன்னைக் கூப்பிட்டதாம். அதுவரைக்கும் அண்ணாப்பிள்ளை அந்த aவிபத்துப் பார்க்கப்போனவர் என்டு பெரியம்மாக்கு தெரியாது. விடிய ஆளுக்கு நல்ல பேச்சு.

 
On August 15, 2009 at 10:05 PM , வர்மா said...

முசுப்பாத்தியா கதைச்சுகதைச்சு நடக்கிற சுகம் வேறு எதிலையும் இல்லை
அன்புடன்
வர்மா

 
On August 16, 2009 at 2:24 AM , மணிமேகலா said...

ஆகா, நல்ல பதிவு வர்மா.சில விடயங்களுக்கு காரணங்களே சொல்ல முடியாது இல்லையா?

 
On August 16, 2009 at 3:17 AM , துபாய் ராஜா said...

நல்லாத்தான் பீதியை கெளப்பறீங்க...

 
On August 16, 2009 at 3:37 AM , வர்மா said...

உண்மைதான் காரணங்கள் வேறுவேறாக இருந்தாலும் முடிவு ஒன்றாக இருக்கும்.
அன்புடன்
வர்மா.

 
On August 16, 2009 at 3:37 AM , வர்மா said...

உண்மைதான் காரணங்கள் வேறுவேறாக இருந்தாலும் முடிவு ஒன்றாக இருக்கும்.
அன்புடன்
வர்மா.

 
On August 16, 2009 at 4:02 AM , வலசு - வேலணை said...

ம்ம்ம்....
நல்லாப் பேய்க்காட்டுறியள்

 
On August 16, 2009 at 4:43 AM , Unknown said...

உண்மைதான்... வர்மா அப்பு பழங்கதையளைச் சொல்லி நல்லா ‘பேய்'க்காட்டுறார்

 
On August 16, 2009 at 4:43 AM , Saba said...

//புக‌ளையும்//

 
On August 16, 2009 at 4:52 AM , வர்மா said...

இது பீதியுமில்லை பேதியுமில்லை. அப்புகாட்டினபேய் தெரிந்ததா?
அன்புடன்
வர்மா

 
On August 16, 2009 at 5:53 AM , Unknown said...

தெரியுது தெரியுது... கொஞ்சம் பகிடியை தூக்கி அங்கால வச்சுட்டு சொல்லுறன், சில அமானுஷ்யமான அனுபவங்களை விளக்கவே முடிவதில்லை.. அதை ஆராய முற்பட்டு விசராவதை விட ‘ஓ.. அப்பிடியே' என்று கேட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்வது என் வாடிக்கை..

 
On August 16, 2009 at 10:27 AM , வந்தியத்தேவன் said...

இந்தப் படத்தில் இருப்பது பேய் அல்ல ஐந்து பெண்கள் இருக்கிறாகள். ஓ பெண் என்றால் பேய் என்ற அர்த்ததில் இந்தப் படம் உள்ளதோ.

 
On August 16, 2009 at 6:04 PM , மணிமேகலா said...

ஆறு பெண்கள் வந்தி!பெண்களின் அழகியல் சார்ந்த ஆற்றலுக்கு அது ஒரு உதாரணம்.:-)

 
On August 16, 2009 at 9:17 PM , வர்மா said...

இப்பிடி ஒரு பின்னூட்டம் வரும் என எதிர் பார்த்தேன். யாரோ பாதிக்கப்பட்டவர் பெண்ணைப்பேயாக்கிவிட்டார். படத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை
அன்புடன்
வர்மா.

 
On August 18, 2009 at 7:20 AM , வலசு - வேலணை said...
This comment has been removed by the author.
 
On August 18, 2009 at 7:21 AM , வலசு - வேலணை said...

பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசு என்று சொன்னவர் பட்டினத்தார்