Author: soorya
•3:52 PM
அறியாதோருக்காக.. இதனை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறேன்.
மிகவும் அற்புதமான நூல்.
மாவிட்டபுரம்
க. சச்சிதானந்தன்..................................................................
எழுதியது.
ஆகா இதுவல்லவோ கவிதையென
நான் வாயூற வைத்த கவிகள்
ஏராளம்.
..........................
உதாரணம்.
ஏறிமதுச் சேர்க்காமல் எட்டிமணல் நின்றுபனந்
தேறல் குடிப்பாரும், செவ்விளநீர் தென்னையிலே
கீறிக் குடிப்பாரும், செந்நெல்லின் கீழ்த்தாளிற்
பீறிக் கிடக்கும் பெருந்தேன் மடுப்பாரும்

அஞ்சி யொடுங்கி அவர்தம் குடில்களிலே
நெஞ்சு கலங்கி நினைவ தறியாராய்க்
கஞ்சி குடித்துத்தம் கால்வயிறு போதுமெனத்
துஞ்சி மணலிற் சுகங்கொண்டார் தைமாதம்.
................................................
அவர் மாபெரும் ஆசான்.
எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்.
இந்த நூலில் யாழ்ப்பாண மண்வாசனை படிக்கப் படிக்க மணக்கும்.
எனது அம்மா இங்கு வரும்போது இந்நூலை எடுத்து வந்தா.
பத்து ஆண்டுகள் முன் வெளியான இந்நூலை யார் வெளியிட்டார்கள் என்று எனக்குத் தெரியாது.
நூலில் பதிப்புரிமை ஆசிரியர்க்கு என்ற தகவல் தவிர, ஆரோக்கியமான தகவல்கள் இல்லை.
எனினும்..அம்மா நாடு திரும்பும் போது சிறிது பணத்தைக் கொடுத்து அவரிடம் சேர்ப்பி என்றேன்.
அம்மா சேர்ப்பித்திருப்பா.
அவர் நீண்டகாலம் வாழ வேண்டும்.
|
This entry was posted on 3:52 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On August 4, 2009 at 1:48 AM , யசோதா.பத்மநாதன் said...

கிடுகு வேலியின் பாரம்பரியம் போலும்!'அதன்' குண இயல்புகள் பற்றி நிறையச் சொல்லலாம்.

எந்த ஆண்டுக் காலத்திற்குரிய யாழ்ப்பாணத்தை இந்தக் கவிஞர் எழுதுகிறார்?

'ஏறிமதுச் சேர்க்காமல்'என்று எதைக் கவிஞர் சொல்கிறார்?

மகாகவியின் கவிதைகள் யாழ்ப்பாணத்தின் வேறொரு பக்கத்தைக் காட்டும்.

 
On August 4, 2009 at 3:31 AM , வந்தியத்தேவன் said...

நூலகம் இணையத்தில் இந்தப் புத்தகம் மின்னூலாக இருக்கிறது. தேவையானவர்கள் தரவிறக்கி படித்துக்கொள்ளுங்கள். பழைய நாணயங்களின் படங்களும் இருக்கின்றது.

http://noolaham.org/wiki/index.php/யாழ்ப்பாணக்_காவியம்

 
On August 5, 2009 at 5:58 AM , யசோதா.பத்மநாதன் said...

நன்றி வந்தி. ஒரு தமிழ் சுரங்கம் ஒன்றை இனம் காட்டி இருக்கிறீர்கள்.

 
On August 5, 2009 at 1:06 PM , soorya said...

மணிமேகலா said...
நன்றி வந்தி. ஒரு தமிழ் சுரங்கம் ஒன்றை இனம் காட்டி இருக்கிறீர்கள்.

நன்றி வந்திக்கா........
எனக்கில்லையா???????
(சும்மா ஒரு சின்னப் பொறாமை)

மகாகவி என் வீட்டு அயலவர்.
என் தந்தையின் நெருங்கிய நண்பர்.
க. சச்சி ஆசானும் எங்கள் அப்பாவும் மகாகவியும் ஒன்றாக எங்கள் வீட்டில் அடிக்கடி கூடுவார்கள். நான் அப்போ சிறுவன்.
அது ஒரு தமிழ்க்காலம் தோழி.
இப்போ நினைக்க நினைக்க நெஞ்சு நெகிழும். கண்ணில் நீர் வரும்.

 
On August 5, 2009 at 8:21 PM , M.Thevesh said...

திரு வந்தியத்தேவன் அவர்கட்கு,
நீங்கள் தந்த வலைத்தளத்தி
லிருந்து தரவிறக்கிக் கொண்டேன்
மிகப்பயன் உள்ளநூல்.
மிக்க நன்றிகள் பல.