இந்த ஒலிப்பதிவு ஒரு மீள்பதிவுதான். சுமார் இரண்டு வருடங்களுக்கு முற்பட்டது. இலங்கையின் பல பிரதேசங்களுக்கும் உரிய பிரதேசச் சொல்லாடல்கள் மற்றும் தமிழக பிரதேச வழக்குகள் இவற்றோடான ஒப்பீடுகளும் அலட்டல்களுமாக இந்த ஒலிப்பதிவு நீள்கிறது. அதிலும் தனியே சகல வழக்குகள் என்றல்லாது ஒரு குறிப்பிட்ட சொல்லாடல்கள் மட்டுமே..
இனி ஒலிப்பதிவை கேளுங்கள். பதிவில் என்னோடு சோமிதரன் நண்பர் வரவனையான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
பிற்குறிப்பு : சோமியின் கருத்துக்கள் சோமியனது. வரவனையானது கருத்துக்கள் வரவனையானது. எனது எனதானது
இனி ஒலிப்பதிவை கேளுங்கள். பதிவில் என்னோடு சோமிதரன் நண்பர் வரவனையான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
பிற்குறிப்பு : சோமியின் கருத்துக்கள் சோமியனது. வரவனையானது கருத்துக்கள் வரவனையானது. எனது எனதானது
7 comments:
சோமியின் கருத்துக்கள் சொமியானது... (?!)
நல்லாத்தான் அறுத்திருக்கிறியள் :).
”வழியிறது” என்று சோமீ சொல்கிறார். இதையே பல்கலைக் கழகத்தில் “சல் அடிக்கிறது” எண்டு அறிஞ்சிருக்கிறன். அந்த சொல் வந்தது ஆங்கிலத்தில் saliva என்ற சொல்லிலிருந்து என்பது (மிகப் பெரிய :) )நம்பிக்கை. அதாவது வழியிறது / ஜொள்ளு விடுறது :). பொதுவாக ஆணும், பெண்ணும் அர்த்தமின்றி பேசிக் கொண்டிருப்பதைக் குறிக்கும். இதையே ஆணும், ஆணும், அல்லது பெண்ணும் பெண்ணும் வெட்டியாகக் கதைச்சுக் கொண்டிருந்தால் “கொன் அடிக்கிறது” என்று சொல்வார்கள். இந்தச் சொல்லும் ஆங்கிலச் சொல் conversation என்பதிலிருந்து வந்ததாக நம்பிக்கை.
அதுசரி, colours, figure, item, சரக்கு எல்லாம் சொன்னனீங்கள். ”மணிக் காய்” எண்ட சொல்லை விட்டிட்டீங்க :).
மட்டகளப்பு சகோதரர், அசத்தலா நம்ம தமிழே கதைகிறீங்கள்... என்ன தான் இருந்தாலும் நீங்கள் எல்லாம் ரொம்ப காலம் முதலே புலம் பெயர்துட்டீங்கள் யாழில் இருந்து போல... என் நண்பர்கள் ஆண்களும் பெண்களும் ஒன்றாக பழகும் சந்தர்ப்பங்கள் இருந்ததை சொல்லியிருக்கின... ஒரு பெண் உங்கள் பதிவை கேட்ட நினைத்தால், எப்படி மனநிலை இருக்கும்??? பெண்டுகள் ஆண்களை மண்டை, வழிசல், மரம், மாமா, இது, உது, அது, விசுக்கோத்து, இப்படி தான் சொல்லுவாங்கள்... எனக்கு மூன்று பெண் சகோதரர்கள் வீட்டில் மட்டும்...
தாட்டி நல்லாயிருக்கு. அயிட்டம் கலர் பற்றிய விளக்கம் நல்லாயிருக்கு. கலாய்த்தலை பம்மலடிதல் அல்லது நக்கலடித்தல் என்பது சரியாகும் என நினைக்கின்றேன்.
சொதி கரைவலை எண்டெல்லாம் கதைச்ச ஒரு குரல்பதிவு இருக்கல்லோ?? அது எங்க?
அன்று சோமி யாழ் நுலக எரிப்பு ஆவணப்படதின் வேலையா நின்றான்,நான் அவனை கலைத்து மப்படிக்க (இல்லையெண்டாலும் அதத்தான் அவன் செய்திருப்பான்)வைத்தேன். பின் தான் மேற்படி நிகழ்வு . என் கனவுகளில் வாழும் ஈழமும் அந்தக் காலமும் இனிதானவை. நன்றி சயந்தா :)