•9:09 AM
விடிந்தால் நல்லூர்தேர்.வருடாந்த நிகழ்ச்சிகளில் நல்லூர் தேர் தீர்த்தமும் அடக்கம். வெட்டையில் விளையாடும்போதே நாளைக்கு நீயும் நானும் தனிச்சு நல்லூர் தேருக்குப்போவம் எண்டு அண்ணா சொன்னார். அண்ணா பெரியம்மாவின் மகன். ரண்டுபேரையும் தனிச்சு நல்லூருக்கு விடுவினமா என்ற சந்தேகம். அண்ணாவை அண்ணண்ணா எண்டுதான் சொல்வேன். அண்ணண்ணா தனிச்சுப்போவதில் உறுதியாக இருந்தார். ரண்டுவீட்டிலையும் கதைச்சு அனுமதி வாங்கியாச்சு.
கோயிலுக்குப்போறதுக்கு எதுக்கு அனுமதி எண்டு யோசிக்கிறியள். அப்போ எனக்கு 10 வயசு. அண்ணண்ணாவுக்கு 11 வயசு. காலையில் 5 மணிக்கு குளீத்துவிட்டு ரண்டுபேரும் வேட்டி சால்வையுடன் சட்டை இல்லாமல் கோயிலுக்கு வெளிக்கிட்டம். பஸ்ஸுக்கு,கோயில் உண்டியலுக்கு, அர்ச்சனைக்கு கைச்செலவுக்கு காசுதந்தார்கள். நெல்லியடி பஸ்நிலையத்துக்கு ரண்டுபேரும் போனோம். 6 மணீக்கு கோயிலுக்குப்போறசனம் கனக்க நிண்டது.
பருத்தித்துறையில் இருந்து வரும் பஸ் நிறையசனம். நெல்லியடியில் இருந்து நல்லூர் 20 மைல் இருக்கும். பஸ் ஒன்றும் யாரையும் ஏத்தவில்லை.யாரும் இறங்கவேண்டு மென்றால் பஸ்நிலையத்துக்கு தூரத்திலைநின்று இறக்கி விட்டிட்டுப்போகும். கஸ்ரப்பட்டு ஒருபஸ்ஸிலை இடம் கிடைத்தது.பஸ்ஸுக்குள் கோயிலுக்குப் போகும் சனம்தான் அதிகம்.
முத்திரைச்சந்திவந்ததும் கோயிலுக்குப் போறசனம் எல்லாம் இறங்க ஆயத்தமானது. நானும் இறங்க ஆயத்தமானேன். இறங்கவேண்டாம் என்று அண்ணண்ணா சைகை காட்டினார். கோயிலுக்குப்போறசனம் எல்லாம் இறங்கிவிட்டது. நாலஞ்சுபேருடன் பஸ் யாழ்ப்பாணம் நோக்கிப்போனது. கோயில் அலார் மெல்லமெல்ல குறைஞ்சு போச்சு.
யாழ்ப்பாணம் பஸ்நிலைத்தில் பஸ் நின்றதும் நாங்களூம் இறங்கினோம். என்னை அவசரமாக இழுத்துச்சென்ற அண்ணண்ணா ராணி தியேட்டரின் முன்னால் நின்றான். ராணி தியேட்டரில் தவப்புதல்வன் படம் ஓடுகிறது. தியேடரின் முன்னால் கனசனம் . தியேட்டருக்கு மேலால் சிவாஜியின் பெரியகட்டவுட். ம்ணியத்தின் கைவண்ணத்தில் சிவாஜி என்னைப்பாத்து பேசுவது போலிருந்தது.
நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணப்போக 55சதம்.கலரி 55சதம் .அரை ரிக்கெற் காசுஞாபகமில்லை.8 மணிக்கு படம் தொடங்கியது. படம் முடியநல்லூருக்குப்போய் தேர் பாத்தோம்.தேருக்குப் போய் படம் பாத்தது யாருக்கும் தெரியாது. நல்லபிள்ளைகளாக வீட்டுக்குப்போனோம்.
ஊரிலுள்ள கோயிலுகளூக்கு சேட் இல்லாமல் போறதுபற்றி கொழும்பிலை சொன்னால் ஆச்சரியப்படுகிறார்கள்.
தம்பியின் மகன் கொழும்பில் பிறந்து கொழும்பிலே படிக்கிறான். சமயபாடம் படிப்பிக்கும் படி தம்பி என்னிடம் அனுப்பினான்.3ஆம் வகுப்பு சமயப்புத்தகத்துடன் படிக்கவந்தான்.
கோயிலுக்கு எப்படிபோவது என்று கேட்டேன்.
குளிச்சு நீட்டாட்ரஸ்பண்ணீட்டு சப்பாத்து போட்டு மட்சா போகணும் என்றான்.
வெட்டை ,,,,,,,,,,,,,,,,,,,,,மைதானம்.
நீட்டா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,சுத்தமாக
மட்சா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அழகாக

5 comments:
matchஆ போகணுமா.. மட்ஸா போகணுமா? மட்ஸ் என்று நினைக்கிறேன்
மட்ஸ்தான் சரி.பருத்தித்துறை புலோலி, வல்வெட்டித்துறையில் இரண்டு தியேட்டர்கள் இருந்தன.
அன்புடன்
வர்மா
:)
இது ஆண்களின் உலகம் போலும்.
துணிச்சலான உலகம்!
இது ஆண்களின் உலகம் போலும்.
துணிச்சலான உலகம்!
பெண்களீன் உலகமும் துணீச்சலானதுதான்.வெளீயேசொல்ல வெட்கப்படுகிறார்கள்
அன்புடன்
வர்மா.
//வர்மா said...
பெண்களீன் உலகமும் துணீச்சலானதுதான்.வெளீயேசொல்ல வெட்கப்படுகிறார்கள்//
இல்லையே சினேகிதி போன்ற சிலர் தங்களின் வண்டவாளங்களை சொல்கிறார்களே என்ன ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் உலகம் கொஞ்சம் சிறியது. நகைக் கடை, புடவைக் கடை போனால் மட்டும் இவர்கள் உலகம் பெரியது.