இதுவும் ஒரு மீள் பதிவுதான். Play எண்டு அழுத்தினால் முழு ஒலிப்பதிவையும் கேக்க முடியவில்லை. "Play full song here " என்பதில் அழுத்தினால் முழு ஒலிப்பதிவையும் கேக்கலாம்.
ஒரு முயற்சியாக நானும் வசந்தனண்ணாவும் விஜேவும் இணைந்து ஒரு குரல்பதிவு போட நினைத்ததன் விளைவு இந்தப்பதிவு.
எனக்குத்தெரியாத கரைவவலை ஆணம் போன்ற பல விடயங்களை அறிந்துகொள்ளக்கூடியதாகவிருந்தது.
மிகவும் அழகாக வசந்தனண்ணா அம்மாப்பாட்டு பாடியிருக்கிறார்...அது தவிர இருவரும் பல சுவையான தகவல்களைச் சொல்லியிருக்கினம் கேளுங்கோ.
6 comments:
இரண்டு விதமான சொதிகள் இருக்கின்றன. முதலாவது இடியப்பத்திற்காக வைக்கும் சொதி. இது பெரும்பாலும் காலை இரவு உணவுகளில் இடியப்பம் இருந்தால் சொதி கட்டாயம்.
மதிய உணவிற்க்கு வைக்கப்படும் சொதி சற்றே வித்தியாசமானது இது சைவச் சொதி மச்சசொதி என வகைப்படுத்தப்படும். சில இடங்களில் கலியாண வீடுகளில் கூட மத்தியானச் சாப்பாட்டிற்கு சொதி கட்டாயம் இருக்கும்.
இவர்கள் கதைப்பதுபோல் சாப்பாட்டில் குழம்பு இருந்தால் சொதி இருக்காது.
அரைச்சாணம்(சில இடங்களில் அரைச்ச குழம்பு என்பார்கள்) கேள்விப்பட்டிருக்கிறீர்களோ? பெரும்பாலும் வயதுக்கு வந்த பெண்களுக்கும், கர்ப்பிணிப்பெண்களுக்கும் கொடுக்கப்படும் ஒரு தண்ணிச் சாப்பாடு.
சாப்பாட்டுடனும் சேர்த்துக்கொள்ளலாம், சிலர் கூழ்போல் குடிப்பார்கள். வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும். என்னென்ன சாமான் போடுகிறது என்று பிறகு அம்மாவைக்கேட்டுச் சொல்கிறேன்.
சிக் சிக் பூம்...காணக் கிடைக்கலை :(
ஆஹா இரண்டு ஒலிப்பதிவையும் இப்போதான் முழுதாக கேட்டுமுடித்தேன். சினேகிதி பெரும்பாலும் அமைதியாக இருக்கிறார். பதிவில் காட்டும் அவரின் குறும்பை பேச்சில் காணவில்லை.
இன்றைக்குத் தான் தெரியும் வன்னியில் வேறை அரிசிச் சாப்பாடு என்பது. ஏனெனில் பெரும்பாலும் தமிழர்கள்(வடக்கு கிழக்கு)புழுங்கல் அரிசிச் சோறே சாப்பிடுவது.
நல்லதொரு ஒலிப்பதிவு இதனை எழுத்திலும் பதிவு செய்யவும்.
சினேகிதி :)
இப்பிடி ஒரு குரல்பதிவு போட்டனாங்கள் எண்டதே மறந்து போச்சு.
கரவவலை, ஆணம் எல்லாம் எனக்கு புதுச்சொற்கள்.