Author: கானா பிரபா
•2:14 PM
பத்தொன்பதாந் திருவிழாப் பதிவில் இரண்டு நல்லை முருகன் பாடல்கள் ஒலியிலும், எழுத்திலுமாக வருகின்றன. பாடலாசிரியர் தாயகக் கவி புதுவை இரத்தினதுரை, இசை வழங்கியவர் இசைவாணர் கண்ணன், பாடல்களைப் பாடுகின்றார் இசைக்கலைமணி ஸ்ரீ வர்ணராமேஸ்வரன்.


Get this widget | Share | Track details


தேரடியில் காலையிலே நானழுத வேளையிலே
நீ திரும்பிப் பார்க்கவில்லை முருகா - உன்
காலடியில் நான் இருந்து கண் சொரிந்த போதினிலே
கண்டு மனமிரங்கவில்லை முருகா

கண் திறந்து பார்க்க வில்லை முருகா - என்னை
கண்டு மனமிரங்கவில்லை முருகா

நல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு
தொல்லை அற்று போகுமென்றார் முருகா - நான்
வெள்ளை மணல் மீதுருண்டு வேலவனே என்றழுதேன்
துள்ளி வந்து சேரலையே முருகா

வேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே
வேறிடத்தில் நீ ஒளித்தாய் முருகா - நீ
ஏறி வந்த தேர் இருக்கு, இழுத்து வந்த வடம் இருக்கு
எங்கேயடா போய் ஒளித்தாய் முருகா

செந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில்
உந்தன் அருள் வேண்டுமடா முருகா - நீ
வந்திருந்து பூச்சொரிந்தால் வாசலிலே கையசைத்தால்
வல்ல புலி வெல்லுமடா முருகா




Get this widget | Share | Track details



வானமரர் துயர் தீர்க்க வண்ண மயில் ஏறி நின்றாய்
தேனமுத வள்ளி தெய்வயானையுடன் கூடி நின்றாய்
நானழுத கண் மழையால் நல்லையெங்கும் வெள்ளமடா
நாயகனே எங்களுக்கு நல்ல வழி சொல்லனடா

வேல் முருகா...அருள் தா முருகா....
வேல் முருகா...அருள் தா முருகா........
மால் மருகா....நல்லை வாழ் முருகா...
மால் மருகா....நல்லை வாழ் முருகா...
வா முருகா....துயர் தீர் முருகா........
மால் மருகா....நல்லை வாழ் முருகா...

நல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்
தொல்லைகள் குடியேறுமா.......
எல்லையில் இருந்தினியும் எறிகணையால்
எம்மைக் கொல்லுதல் அரங்கேறுமா.......
நல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்
தொல்லைகள் குடியேறுமா.......

(வேல் முருகா...அருள் தா முருகா....)

அசுரர் நிலைகள் முன்னர் எரியும் வரையில் நின்று
மலையில் சிரித்திட்ட வேலவா
அதர்மப் படைகள் இன்று எறியும் கணைகள் வென்று
புலிகள் உலவுகின்ற வேளை வா

தமிழைப் பிறப்பித்த வேலவா
விழிகள் திறந்திட்டு ஓடிவா
தமிழைப் பிறப்பித்த வேலவா
விழிகள் திறந்திட்டு ஓடிவா

வேலவா நீ ஓடிவா
வேலவா நீ ஓடிவா

இருவிழி கலங்குது அருள் ஒளி பரவுது
புலிகளின் தலைமையில்
தமிழர்கள் துயர்கெட வரமெடு

நன்றி:
நல்லை முருகன் பாடல்கள் : தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்
தேரடியில் பாடல் எழுத்துப் பிரதி: சகோதரி சந்திரவதனா செல்வகுமாரன்

புகைப்படங்கள் உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை
This entry was posted on 2:14 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On August 13, 2009 at 8:34 PM , வந்தியத்தேவன் said...

வெள்ளந்தியான அந்த அண்ணன் தம்பிகள் படம் கலக்கல். பிரபா இந்தப் பதிவுடன் ஈழத்துமுற்றம் சதமடித்துவிட்டது.

 
On August 16, 2009 at 2:27 AM , யசோதா.பத்மநாதன் said...

ஆகா! என்ன ஒரு உரிமை கொண்ட தோழமை!

அழகிய பருவம்!

முதலாவது படம் அருமை! அருமை!!