Author: shangar
•7:44 AM
நாவூறு
ஒருவரைப் பார்த்து ஆசைப்படல் அல்லது ஒருவரின் உயர்ச்சியை பார்த்து பிரமித்தல் என்பவற்றினால் சம்பந்தப்படடவருக்கு ஏதேனும் சுகயீனம் அல்லது அவரின் தொழில் பின்னடைதல் என்பன நடந்தால் நாவூறுபட்டுவிட்டது என்று(கண்படுதல்) கூறுவார்கள்.
உதாரணமாக ஒரு குழந்தையை புதியவர் ஒருவர் பார்த்தார் என்று வைத்துக்கொள்வோம். அன்று அக்குழந்தை தேவையில்லாமல் அழுதுகொண்டிருந்து, அல்லது காய்ச்சல் போன்ற சுகயீனம் ஏற்பட்டால் நாவூறு பட்டுவிட்டது
என்பர்.

ஒரு இரும்புத்துண்டை நெருப்பில் காயவைத்து தண்ணீர் உள்ள செம்பிற்குள் காய வைத்த இரும்பை அதனுள் வைக்கும்போது இரும்பின் சூடு நீரினில் சேரும். பின் இந்த நீரினால் சுகயீனமடைந்தவரைக் கழுவினால் சுகம் வரும் என்று நம்பப்படுகிறது.
அடுத்து காய்ந்த மிளகாயை எடுத்து (3,5) 3 முறை தலையை சுற்றிவிட்டு அதில் 3 தரம் துப்பிவிட வேண்டும். அதைக் கொண்டு போய் கிணற்றில் போடுவர்.. அல்லது அடுப்பில் உள்ள நெருப்பில் போடுவர். மிளகாய் வாசனை வராதுவிடில் நாவூறுதான் என்று உறுதிப்படுத்துவர்.
வேப்பிலை, உப்பு, மிளகு,மிளகாய் என்பவற்றை எடுத்து அந்த நபரின் மேல் தடவி தலையையும் சுற்றி பன்னாடையில் அவற்றை வைத்து எரித்து அச்சாம்பலை நெற்றியில் பொட்டாக இட்டுவிடுவர். அப்போது நாவூறு எனின் மிளகாய் எரிந்த வாசனை வராது. இவற்றை நாவூறு கழித்தல் என்று கூறுவர்.

நாவூறு வராமல் இருக்க வசம்பை சுட்டு அதன் சாம்பலை குழந்தையின் உள்ளங்காலில்
போட்டுவிட்டு அக் குழந்தையை புதிய இடத்திற்கு கொண்டு போனாலும் நாவூறு ஏற்படாது என்று நம்பப்படுகிறது.
நாக்கிலே கறுப்பு உள்ளோரை கருநாக்குகாரர் என்றும் அவர் பார்த்தால் நாவூறு ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

வயதுக்கு வந்த பெண்பிள்ளையை அழகுபடுத்தி ஆராத்தி எடுத்தபின் தேசிக்காய் , வேப்பிலை கொண்டு ஆராத்தி சுற்றி கழிப்பதும் நாவூறு அல்லது கண்படுதல் என்பவற்றிற்காகத்தான் எனலாம்.

சகுனம்
ஒருவர் வீட்டில் இருந்து வெளிக்கிடும்போது யாரேனும் எதிர்படுபவர் தனக்கு சரியில்
லை என்று நினைத்தால் சகுனம் சரியில்லை எனப்படும். ஒருசிலருக்கு அப்படி எதிர்படுபவரைக் கண்டதும் போக முதலே தான் போகும் காரியம் சரிவராது என்று மனதில் பட்டுவிடும்.

உதாரணத்திற்கு பூனை குறுக்கே போதல், விளக்குமாற்றுடன் ஒருவர் எதிர்படல்,
வெறும் வாளி, பெட்டியுடன் எதிர்படல் , தலைவிரித்துக்கொண்டு எதிர்படல்,(தலைவிரித்து திரிவது பஷன் (fashion) ஆன பி
ன்னருமா.. ) அழுது கொண்டு வருதல் மற்றும் இன்னோரன்னவை அடக்கம். இதற்காக வாசலில் தண்ணீர் நிரப்பிய வாளியில் பூக்களைப் போட்டு வைத்துவிட்டு அதைப்பார்த்துக் கொண்டு போனால் பின்பு என்ன வந்தாலும் கவலைப்படத்தேவை இல்லை என்று நினைக்கின்றனர்.

இவையெல்லாம் அவரவர் நம்பிக்கை தான். சில சில வித்தியாசங்களுடன் பெரும்பாலானவை தமிழ்நாட்டிலும் பின்பற்றப்படுகிறவையே.. இல்லையா?
This entry was posted on 7:44 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On August 2, 2009 at 8:18 AM , சினேகிதி said...

மிளகாய் சுத்திப்போடுறது தெரியும். ஆனால் வாசனையை வைத்துத்தான் தீர்மானிப்பார்கள் என்று தெரியா மிளகாய் வெடிக்கும் சத்தம்போட்டு.

இது உங்களின் முதல்பதிவா? வாழ்த்துக்கள்! வாருங்கள்!

 
On August 2, 2009 at 10:37 AM , வந்தியத்தேவன் said...

நாவூறு அல்லது கண்ணூறு கொஞ்சம் நம்பலாம் ஆனால் சகுனம் பார்ப்பது என்பது இப்போதைய காலத்தில் சரிப்பட்டுவராது. காலையில் தொலைக்காட்சியைத் திறந்தால் நம்ம அழகு அறிவிப்பாளினிகள் தலைவிரிகோலமாக ஒரு கையால் முடியைக்கோதிய படி பேசுவார்கள் அதனைப் பார்த்துவிட்டுபோனால் நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமா?

அதுமட்டுமல்ல இப்போ கலியாணவீடுகளில் கூட அனேக இளம் பெண்கள் சில கலியாணம் செய்த பெண்கள் முடியை விரித்துவிட்டே வருவார்கள். இந்தக்கொடுகை கோயில்களிலும் தொடருவதாக கேள்வி, கோயில்ப்பக்கம் போய்க் கணகாலம் அதனால் அறியமுடியவில்லை.

 
On August 3, 2009 at 3:56 AM , கானா பிரபா said...

வித்தியாசமான பதிவோடு ஆரம்பித்திருக்கிறீர்கள், நாவூறு எங்கட ஊரில் கலந்து போன விஷயமாச்சே.

 
On August 3, 2009 at 5:01 AM , shangar said...

சினேகிதி: மிளகாயோட உப்பும் போடுவதால் தான் வெடிக்கிறது.

வந்தியத்தேவன்: கலியாணம் செய்து கொள்ளும் பெண்ணே தலைவிரி கோலமாக இருக்கிற காலமெல்லோ இது

கானா பிரபா: இது இரண்டாவது பதிவு

 
On August 4, 2009 at 12:58 AM , யசோதா.பத்மநாதன் said...

:)
பஞ்சாங்கத்திலும் எது எது சகுனத் தடை என்பது பற்றிக் குறித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

நல்லநேரம் பார்ப்பது, தமிழ் நாட்காட்டி, சாதகம் பார்த்தல்,திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம்,பெண் ருதுவான நேரம் பார்த்து எதிர்காலம் கணிப்பது,ஐயர் பார்வை பார்த்தல்,மை போட்டுப் பார்த்தல்,இப்படியும் சில வழக்கங்கள் உண்டல்லவா?