Author: M.Thevesh
•2:24 PM
நண்பர் அருள்மொழிவர்மனின் வடலிவெளியீடுகள்
மற்றும் எழுத்தாளனும் பதிப்பகங்களும் எனற
ஆக்கத்தைப்படித்ததும் (http://solvathellamunmai.
blogspot.com/2009/08/blog-post_24.html)அதற்குப்
பின்னூட்டம் இடவேண்டும் எனவிரும்பினேன்.
விரிவாகஎழுதவேண்டும் என்பதால் என் முயற்
சியைத்தனிப்பதிவாகப்போடுகிறேன்.

ஈழத்தில் பிறந்ததால் மட்டும் ஒருவர் ஈழத்தவ
ராகிவிடமுடியாது. ஈழத்தை தாய் நாடாக
ஏற்றுக்கொண்டு ஈழத்துப் பராம்பரியங்களுடன்
வாழ்ந்தால் தான் அவரை ஈழத்தவர் என
அடையாளப்படுத்தமுடியும்.

முன்னூறு வருடங்களுக்கு மேல் பல தலைமுறை
களாக் வாழ்ந்துவந்தும் இன்றும் 95 வீத மான மலை
நாட்டுத்தமிழர் தங்களை இந்திய வம்சாவழியினர்
என்று அடையாளப்படுத்துவதில் தான் பெருமை
கொள்கிறார்கள்

தமிழகத்திலுள்ள தமிழக எழுத்தளர்களும் ஈழத்
து எழுத்தாளர்கள் என்று வரும்போது மலை
நாட்டுத்தமிழ் எழுத்தாளர்கட்க்குதான் முதன்மை
இடங்கொடுக்கிறார்கள். ஈழத்து மொழிநடையில்
எழுதும் மண்ணின் மைந்தர்களான உண்மையான
ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மதிப்பு
கொடுப்பதில்லை. ஈழத்து மொழிநடையில்
எழுதினால் இந்தியவாசகர்கள் புரிந்து கொள்வதில்
சிரமப்படுவார்கள் என்று கூறிய பத்திரிகை
நிறுவனங்கள் சென்னையில் பல இருக்கின்றன
இது என்து அனுபவம்.

இந்தியாவின் பல பகுதி களில் தமிழை விதம்
விதமாகப்பேசுகிறார்கள். பாலக்காட்டுத்தமிழ்
ஒரு மதிரி இருக்கும்,திருநெல்வேலித்தமிழ்
வேரொருமாதிரி இருக்கும்மதுரைத்தமிழ்
இன்னொருமாதிரி இருக்கிறது.
சென்னையில் ரிக் ஷா ஓட்டுபவர்கள் பேசும்
தமிழ், தமிழா என்பதே புரியவில்லை. அப்படி
இருந்தும் அவர்கள் பேசுவதைப்புரிந்து கொள்ளும்
இந்தியத்தமிழர் ஈழத்தமிழர் எழுதும் தூய தமிழ்
மொழிநடை புரியவில்லை என்பது விந்தையிலும்
விந்தைதான்.

திரு ஆறுமுகநாவலர் வாழ்ந்த காலத்தில் அவரின்
ஆக்கங்களுக்கு பெரும் வரவேற்பு அன்று சென்னையில்
இருந்திருக்கிறது. அதுபோல் வேறு ஈழத்தவர்களின்
படைப்புகளுக்கும் பெரும் வரவேற்பு இருந்திருக்கிறது.
அந்நாட்களில் சென்னையிலிருந்து வெளிவந்த
பத்திரிகைகளில் ஈழஎழுத்தாளர்களின் ஆக்கங்கள்
இடம் பெற்ற பொற்காலம்.

பின்னாளில் ஈழத்தமிழர்கள் கல்கி, ஆனந்தவிகடன்,
கலைமகள் முதலான இந்திய சஞ்சீகைகளின்
வாசகர்களாக மாறிய பின்பு ஈழத்து எழுத்தாளர்களின்
ஆக்கங்கள் இந்திய சஞ்சீகைகளில் வெளிவருவது
அபூர்வமாகிவிட்டது. ஈழமண்ணில் திறமை
நிறைந்த எழுத்தாளர்கள் பலர் இருந்தும் அவர்களின்
ஆக்கங்கள் வரவேற்பைப்பெறவில்லை. இந்தவகை
யில் என் நினைவுக்கு வருபவர்கள் செங்கை ஆளியன்,
எஸ்.பொ, தேவகாந்தன், ஈழத்துச்சோமு, குறமகள்
இன்னுன் பலர் இருக்கிறார்கள். ஈழத்து எழுத்தாளர்
கட்கு உரிய இடங்கொடுக்கிறோம் என்று கூறுபவர்
கூட மலைநாட்டு எழுத்தாளர்களைதான் பெரிதும்
ஊக்கப்படுத்தினார்கள் என்பது மறுக்கமுடியாத
உண்மை. காரணம் மலைநாட்டு எழுத்தாளர்கள்
99 சத வீதம் இந்திய மொழிநடையிலேயே தங்கள்
ஆக்கங்களை வெளிக்கொண்டுவந்தார்கள்.
அத்துடன் அவர்களை இந்தியத்தமிழரின் வழித்
தோன்றல்கள் என ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எது எப்படி இருந்தபோதும் ஈழத்து எழுத்தாளர்கள்
எது வித சமரசமும் இன்றி தொடர்ந்து எங்கள்
உயர்ந்த ஈழத்தமிழ் மொழிநடையிலேயே
எம் படைபுகளை வெளிக்கொண்டுவரவேண்டும்
இதுவே எனது வேண்டுகோளாகும்.
|
This entry was posted on 2:24 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On August 25, 2009 at 8:50 PM , அருண்மொழிவர்மன் said...

வணக்கம்

எனது பதிவை வாசித்து அது பற்றி ஒரு பதிவாக் எழுதியுள்ளீர்கள். நன்றி.

//ஈழத்தில் பிறந்ததால் மட்டும் ஒருவர் ஈழத்தவ
ராகிவிடமுடியாது. ஈழத்தை தாய் நாடாக
ஏற்றுக்கொண்டு ஈழத்துப் பராம்பரியங்களுடன்
வாழ்ந்தால் தான் அவரை ஈழத்தவர் என
அடையாளப்படுத்தமுடியும்.//
அ.மு ஓடு நான் முரண்பட்டு விமர்சிக்கும் விடயமே இதில்தான் ஆரம்பிக்கின்றது. அவர் ஈழத்தவராக இருந்தலும் பெரும்பாலும் ஒரு பொதுவான தளாத்தில், சமூக பிரச்சனைகளுல் சிக்காமலே எழுதிவிடுகிறார்.

 
On August 27, 2009 at 7:59 AM , M.Thevesh said...

அருண்மொழிவர்மன் உங்கள் வரவுக்கும்
கருத்துக்கும் நன்றிகள்

 
On September 4, 2009 at 2:50 AM , வலசு - வேலணை said...

//
இந்தியாவின் பல பகுதி களில் தமிழை விதம்
விதமாகப்பேசுகிறார்கள். பாலக்காட்டுத்தமிழ்
ஒரு மதிரி இருக்கும்,திருநெல்வேலித்தமிழ்
வேரொருமாதிரி இருக்கும்மதுரைத்தமிழ்
இன்னொருமாதிரி இருக்கிறது.
சென்னையில் ரிக் ஷா ஓட்டுபவர்கள் பேசும்
தமிழ், தமிழா என்பதே புரியவில்லை. அப்படி
இருந்தும் அவர்கள் பேசுவதைப்புரிந்து கொள்ளும்
இந்தியத்தமிழர் ஈழத்தமிழர் எழுதும் தூய தமிழ்
மொழிநடை புரியவில்லை என்பது விந்தையிலும்
விந்தைதான்.
//
உங்களின் இந்தக்கருத்துடன் உடன்படுகிறேன்