•10:42 PM
எமது நாட்டிலுள்ள பல ஆலயங்கள் ஆகமவிதிப்படி பூசை தொடங்கியதற்க்கு முன்னர் வேள்வி என்ற பலியிடும் வணக்கமுறையை கடைபிடித்தே வந்தன. காலமாற்றங்களால் பலியிடுதல் நிறுத்தப்பட்டாலும் இன்றும் ஆலயங்களுக்கு நேர்த்திக்காக ஆடு, கோழி வழங்குதல் நிறுத்தப்படவில்லை.
.jpg)
சில இடங்களில் வேள்வி பொங்கல், திருக்குளிர்த்தி, மடை என்ற பெயர்களில் பொங்கல் பொங்கி வழிபடும் முறையாக மாறியது.

அந்த நாட்களில் திருவிழாக்களை விட வேள்வியே பிரதானமாகவும் பல இடத்துமக்கள் வந்து செல்லும் விழாக்களாகவும் மாறியது. பெரும்பாலும் அம்மன் ஆலயங்களிலும் வைரவர் ஆலயங்களிலும் இந்த வேள்வி நடைபெற்றன. இன்றைக்கும் வடமராட்சி தும்பளை நெல்லண்டையில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் வேள்வி நடைபெறுகின்றது. முன்னைய காலம்போல் ஆடு, கோழிகளைப் பழியிடாமல் அவற்றை கோயிலுக்கு நேர்த்தி என்ற பெயரில் அன்பளிப்புச் செய்கின்றார்கள் கோயில் நிர்வாகம் பின்னர் அந்த ஆடு, கோழிகளை ஏலத்தில் விட்டு வருமானம் ஈட்டுகின்றது.
வேள்வியை நிறுத்திய பல கோயில்களில் அந்த நாளில் பொங்கல் வைத்து இறைவனைக் குளிர்விக்கின்றார்கள். எனக்கு தெரிந்து வடமராட்சியில் நெல்லண்டை அம்மன், அத்துளு அம்மன், அல்வாய் முத்துமாரி அம்மன் போன்ற கோயில்களிலும் தென்மராட்சி மட்டுவில் பண்டித்தலைச்சி கண்ணகை அம்மன், திருகோணமலை சல்லி அம்மன், உடப்பு திரௌபதி அம்மன் போன்றன பிரபல திருக்குளிர்த்தி நடக்கும் கோயில்களாகும்.
.jpg)
கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திலும் முன்னர் பலியிடுதல் நடந்ததாக அறியமுடிந்தது.
தற்போது இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை பொங்கலிட்டு மோதகம், வடை, போன்ற பண்டங்களுடன் இறைவனுக்கு படைத்து வழிபாடாற்றுகின்றார்கள்.
.jpg)
அன்றைய நாட்களில் வேள்விகளில் இரவில் கூத்து, சின்னமேளம் போன்றவை விடியவிடிய நடக்கும் நிகழ்ச்சிகளாகும்.
.jpg)
இலங்கையில் பிரபலமான ஒரு கலைவடிவம் கூத்து இதனைப் பற்றி நன்கு விபரம் தெரிந்தவர்கள் தனிப்பதிவாக இடவும். வசந்தனும் அகிலனும் எழுதிய பதிவுகள் இணையத்தில் இருக்கின்றது.
கூத்துப் பார்க்கப் போன கூத்து
கூத்தழிவு
பலியிடுதல் பற்றி கானாப்பிரபாவும் ஒரு பதிவு இட்டிருக்கின்றார்.
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை....
இந்த வருடம் நெல்லண்டை பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வேள்வியில் எடுத்த படங்கள் இணைத்திருக்கின்றேன். படங்களைத் தந்துதவிய மூஞ்சிப்புத்தக(Facebook) நண்பனுக்கும் நன்றிகள்.