•6:34 AM
பஞ்சியாக்கிடக்கெண்டா, இங்க எழுதிறதுக்கில்லை அந்தப் பஞ்சி :). அந்தச் சொல்லையும் இந்த முற்றத்தில இணைத்து வைக்கலாமேயெண்டுதான். ஏனெண்டால், நான் அடிக்கடி இந்த ‘பஞ்சியாக்கிடக்கு' அல்லது ‘பஞ்சியாயிருக்கு' எண்டு சொல்லேக்கை (அதுக்காக நான் எப்பவுமே பஞ்சிப்பட்டுக் கொண்டிருக்கிறன் எண்டு நினைக்காதையுங்கோ), இந்த வார்த்தையை விளக்கவேண்டி வந்திருக்கு.
”பஞ்சியாக்கிடக்கா? அது என்னது?” எண்டு கேக்கக்கூடிய இடத்திலதான் நானும் ஆரம்பத்தில வளர்ந்தது. பிறகு அந்த சொல் பரிச்சயத்தில வந்ததும், எனக்கு பிடித்திருந்ததால, அடிக்கடி சொல்லத் தொடங்கியிட்டன். 'அலுப்பாயிருக்கு' எண்ட சொல்லும் இந்த ‘பஞ்சியாக்கிடக்கு' எண்ட சொல்லின்ரை தம்பிதான் எண்டு நினைக்கிறன்.
மொத்தத்தில, எதையும் செய்ய விருப்பமில்லாமல் சோர்ந்து போயிருக்கிறன் என்பதை இப்படிச் சொல்லலாம்.
பி.கு. : நான் மட்டும் பஞ்சிப் பட்டது காணாதெண்டு, இந்தச் சொல்லையே தெரியாமல் இருந்த சிலரையும்கூட (இந்தியத் தமிழர்கள்), 'பஞ்சியாயிருக்கு' எண்டு சொல்ல வைச்சிட்டன் எண்டால் பாருங்கோவன் :).

4 comments:
பதில் சொல்ல பஞ்சியாக்கிடக்கு நாளைக்கு சொல்றன்
போர் அடிக்குதுன்னு நாங்க தமிழ்ல சொல்வோம்! :-)
ஆகா பஞ்சியோட ஆரம்பிச்சிட்டீங்களா :) வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்