•4:00 PM
இலங்கையில் பொதுவாக அனைத்து மக்களிடமும் பாவனையிலிருக்குமொரு சொல் குசினி. எல்லோருடைய வீடுகளிலும் இருக்குமிது அனேகமாகப் பெண்கள் தங்கள் காலங்களை அதிகம் செலவழிக்கும் இடமாகவும் இருக்கிறது.
போர்த்துக்கேய மொழியிலிருந்து வரப்பெற்ற இச் சொல் சமையலறையைக் குறிக்கிறது. இந்தியா, தமிழ்நாட்டில் இச் சொல்லின் பரவல் அவ்வளவாக இருக்காது என நினைக்கிறேன். எனது சிறுகதையொன்றுக்கு வந்த பின்னூட்டங்களிலும், மின்னஞ்சல் கருத்துக்களிலும் 'குசினி' என்றால் என்னவென்று கேட்டுவந்தவை அனேகம்.
சமையலறை , சிங்கள மொழியில் 'குஸ்ஸிய' என அழைக்கப்படுகிறது. அச் சொல்லிலிருந்து மருவித்தான் 'குசினி' எனும் சொல் வந்தது எனச் சொல்லப்பட்டாலும் கூட, இச் சொல் போர்த்துக்கேய மொழியிலிருந்தே இலங்கைக்கு வந்திருக்கிறது.
இலங்கை முஸ்லிம்கள் வட்டாரத்தில் 'குசினி' எனும் சொல்லோடு, 'அடுப்படி' எனும் சொல்லும் பரவலாகப் பாவிக்கப்படுகிறது. பண்டைய வீடுகளிலும், இன்னும் சில கிராமத்து வீடுகளிலும் , இச் சமையலறையானது வீடுகளின் பின்புறத்தில் , வீட்டை விட்டும் தனியாகக் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். அன்றைய காலத்தில் விறகுச் சமையலால் எழும் புகை வீட்டுக்குள் பரவாமல் இருப்பதற்காகவும், சமையற்காரர்கள் எளிதாக வந்துபோகும் படியாகவும் இப்படி அமைக்கப்பட்டிருந்ததென நினைக்கிறேன்.

23 comments:
சொற்களை அறிந்துக் கொள்ள முடிகிறது
வாழ்த்துகள்
வணக்கம் ரிஷான்
குசினி, அடுப்படி ஆகிய இரண்டூ சொற்களையுமே மாறி மாறிப் பாவிக்கும் வழக்கம் நம்மூரில் இருக்கின்றது.
தமிழகத்தில் அடுக்களை என்று அழைப்பது யாவரும் அறிந்ததே.
அடுப்படி, குசினி 2ம் பாவிக்கப்படுவது தான்.
:-))
ரிஷான்!
சந்தேகமில்லை. இது போர்த்துக்கீசியச் சொல்லே. குஸ்ஸினோ - சமையல் என்ற சொல்லடியிலிருந்து பிறந்தது. இதே சொல், ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் சிறு மாற்றங்களுடன் பாவிக்கபடுகின்றன. நானறிந்தவரையில் போர்த்துக்கல, இத்தாலி மொழியில் நேரடியாகப் பாவிக்கப்படுகிறது.
இச்சொல்லை நமது மண்ணில் அதிகம் பயன்படுத்துகவர்களில் மலையகத் தமிழர்கள் முக்கியமானவர்கள். மேலும், மலையகத் தமிழ் மக்களின் பேச்சு வழக்கில் மேலும் பல போர்ததுக்கீசியச் சொற்கள் உண்டு. விரைவில் பதிவு செய்கின்றேன். நன்றி.
இங்கேயும் நாங்கள் குசினி என்ற சொல்லைத்தான் உபயோகிக்கிறோம். :-)
மலேசியா ஒரு காலத்தில் போர்த்துகீசியரால் ஆழப்பட்டதால் இருக்கும்..
வாங்க மைப்ரண்ட்
போர்த்துக்கீசரும் போற இடமெல்லாம் சொற்களை விதைச்சுட்டாங்க போல :)
குசினியும், அடுப்படியும் பலகைக்குத்தியில இருந்து சாப்பிட்ட கதைகளும் ம்ம்ம்...
மேலும் சில போர்த்துக்கீசு வழிவந்தச் சொற்கள்
அலுமாரி - cupboard - armário
அன்னாசி -ஒருவகைப் பழம்-ananás
ஆசுப்பத்திரி-மருத்துவமனை-hospital
கடுதாசி-கடிதம்-carta
கதிரை- நாற்காலி-cadeira
குசினி-அடுக்களை-cozinha
கோப்பை-கிண்ணம்-copo
சப்பாத்து-காலணி-sapato
தாச்சி-இரும்புச் சட்டி-tacho
துவாய்-துவாலை-toalha
நத்தார்-நத்தார்-Natal
தோம்பு-நில உரிமைப் பட்டியல்-tombo
பாண்-ரொட்டி-pão
பீங்கான்-செராமிக் தட்டு-palangana
பீப்பா-மரத்தாழி-pipa
பேனை-பேனா-pena
வாங்கு-bench-banco
விசுக்கோத்து - biscoito
விறாந்தை- Verandah-varanda
மொழிவளன்
நீங்கள் சொன்ன பட்டியலைத் தனிப்பதிவாகத் தந்தாலும் சிறப்பாக இருக்கும்.
ஓ..கிச்சன்-றதுதான் குசினின்னு மருவி இருக்குன்னு ரொம்ப நாளா நாந்தான் தப்பா நினைச்சுக்கிட்டிருந்தேனோ!! :-) நல்ல பகிர்வு!
அன்பின் திகழ்மிளிர்,
//சொற்களை அறிந்துக் கொள்ள முடிகிறது
வாழ்த்துகள்//
என்னாலும் பல ஈழச் சொற்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் கானாபிரபா,
//வணக்கம் ரிஷான்
குசினி, அடுப்படி ஆகிய இரண்டூ சொற்களையுமே மாறி மாறிப் பாவிக்கும் வழக்கம் நம்மூரில் இருக்கின்றது. //
ஆமாம் நண்பரே.
//தமிழகத்தில் அடுக்களை என்று அழைப்பது யாவரும் அறிந்ததே. //
எங்களூர் பிரதேசங்களிலும் 'அடுக்களை'எனும் சொல்லைப் பாவிக்கிறார்கள் தான்.
நாங்கள் சமையலறையில் விறகு வைத்திருக்கும் இடத்தினை மட்டும் 'அடுக்களை' எனச் சொல்கிறோம். :)
கருத்துக்கு நன்றி நண்பரே !
அன்பின் டொன் லீ,
//அடுப்படி, குசினி 2ம் பாவிக்கப்படுவது தான். //
ஆமாம் நண்பரே :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
அன்பின் மலைநாடான்,
//ரிஷான்!
சந்தேகமில்லை. இது போர்த்துக்கீசியச் சொல்லே. குஸ்ஸினோ - சமையல் என்ற சொல்லடியிலிருந்து பிறந்தது. இதே சொல், ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் சிறு மாற்றங்களுடன் பாவிக்கபடுகின்றன. நானறிந்தவரையில் போர்த்துக்கல, இத்தாலி மொழியில் நேரடியாகப் பாவிக்கப்படுகிறது.
இச்சொல்லை நமது மண்ணில் அதிகம் பயன்படுத்துகவர்களில் மலையகத் தமிழர்கள் முக்கியமானவர்கள். மேலும், மலையகத் தமிழ் மக்களின் பேச்சு வழக்கில் மேலும் பல போர்ததுக்கீசியச் சொற்கள் உண்டு. விரைவில் பதிவு செய்கின்றேன். நன்றி.//
மிக நல்ல விளக்கம். குஸ்ஸினோ என்ற சொல்பற்றி உங்கள் கருத்திலிருந்து அறிந்துகொண்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் மைபிரண்ட்,
//இங்கேயும் நாங்கள் குசினி என்ற சொல்லைத்தான் உபயோகிக்கிறோம். :-)//
//மலேசியா ஒரு காலத்தில் போர்த்துகீசியரால் ஆழப்பட்டதால் இருக்கும்..//
எனக்குப் புதிய தகவலாக இருக்கின்றன இரண்டும்.
நன்றி தோழி !
அன்பின் தமிழன் - கறுப்பி,
//குசினியும், அடுப்படியும் பலகைக்குத்தியில இருந்து சாப்பிட்ட கதைகளும் ம்ம்ம்...//
ம்ம்.. :)
பழைய நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள் !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் மொழிவளன்,
நல்ல கருத்து. ஒவ்வொரு சொல்லுக்கும் தனிப்பதிவாக இட்டால் இன்னும் விளக்கமாக இருப்பதோடு, பலரையும் போய்ச் சேருமல்லவா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் சந்தனமுல்லை,
//ஓ..கிச்சன்-றதுதான் குசினின்னு மருவி இருக்குன்னு ரொம்ப நாளா நாந்தான் தப்பா நினைச்சுக்கிட்டிருந்தேனோ!! :-) நல்ல பகிர்வு! //
அது இல்லை. குஸ்ஸினோ என்ற போர்த்துக்கேயச் சொல்லிலிருந்து வந்ததாக நண்பர் மலைநாடான் விளக்கம் தந்துவிட்டார். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
தமிழ்நாட்டிலும் கடலூர் மாவட்டத்திலும், அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் குசினி என்ற சொல் சமையலையும் சமையல் அறையையும் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. எங்கள் வீட்டிலேயே கூட சில முறை பயன்படுத்தியிருக்கிறார்கள். என் தந்தையாரை இச்சொல்லின் பயன்பாட்டிற்கான காரணம் கேட்ட போது அவர் சொன்னது -
புதுச்சேரி(பாண்டிச்சேரி) இந்திய விடுதலைக்கு முன் பல காலம் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது சில பிரெஞ்சு மொழிச் சொற்கள் தமிழில் புகுந்தது என்று சொன்னார்.
அதில் ஒன்று தான் குசினி - இதன் மூலம் 'Cuisine' என்ற பிரெஞ்சு சொல். ஆனால் நீங்கள் சொல்லியவாறு இச்சொல் போர்த்துகீசிய மொழியிலும் இருக்கும் போலிருக்கிறது.
இச்சொல் அப்படியே ஆங்கிலத்திலும் பயன்பாட்டில் உள்ளது. மேலதிக விபரங்களுக்கு.
http://dictionary.reference.com/browse/cuisine
அன்பின் கைப்புள்ள,
மேலதிக தகவலொன்றைத் தெரிந்துகொண்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !