•3:10 AM
ஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் பலவற்றைப் பகிரும் குழும வலைப்பதிவாக மலரவிருக்கின்றது இந்த "ஈழத்து முற்றம்" என்னும் வலைப்பதிவு. ஈழத்தின் பேச்சு வழக்குகளை இணையத்தில் ஒரு அகராதித் தொகுப்பாக சக வலைப்பதிவு நண்பர்களோடு இணைந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாள் தடங்கலுக்குப் பின் இப்போது நிறைவேறியிருக்கின்றது. இந்த வலைப்பதிவில் இணைந்து தங்கள் பங்களிப்பை வழங்கவிருக்கும் சக நண்பர்களையும் வரவேற்கின்றேன்.
29 comments:
வாழ்த்துக்கள் அண்ணா! :))
Good initiative. All the best thalai... Expecting lot of articles on cultural, traditional specialties of Eelam and also culinary art of Eelam.
வாழ்த்துக்கள் தல, அப்டியே கொஞ்சம் ரேடியோச்பதியையும் கவனியுங்கோ
"கெரியா"ப்போடுங்கோ முதல் பதிவை.
சினேகிதி,
நாங்கள் 'கெரி'க்காரர் தனியா ஒரு கூட்டணி அமைச்சால் என்ன?
கெதியாக்காரர் யார் யார் இருக்கினமென கையைத் தூக்குங்கோ
நன்றிகள் பிரபா கலக்குவோம்
சயந்தன் said...
கெதியாக்காரர் யார் யார் இருக்கினமென கையைத் தூக்குங்கோ//
உள்ளேன் ஐயா :)
வாழ்த்துக்கள் பெடியள் கலக்குவியள் எண்டுறது தெரியும்!
இந்த தளத்துக்கள்ளை கறுப்பி... என்கிற பெயரோடு நுழைந்திருக்கிறேன் பார்க்கலாம் நாங்களும் ஏதவது கதைக்கலாம் எண்டு வந்திருக்கிறம்...
இந்தப் பதிவை வரவேற்ற நண்பர்களுக்கும், இணைந்து சிறப்பிக்கும் உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்.
வாழ்த்துகள் கானா! அப்போ இனிமே நான் உங்களை தொல்லை பண்ண வேண்டிய அவசியம் இருக்காது!! :-)
நன்றி...:-)
// கெதியாக்காரர் யார் யார் இருக்கினமென கையைத் தூக்குங்கோ//
நாங்களும் இருக்கிறம் :)
எனது முதல் கூட்டுப்பதிவு. எம் தேசத்து உறவுகளுடன் ஒன்றாக பதிவிடுவதில் ஒரு நிறைவு.
அழைப்பு விடுத்த கானா பிராபாவிற்கு நன்றி.
யாரும் இங்கே இணைந்து கொள்ளலாமா? எப்படி இணவது?
//கெதியாக்காரர் யார் யார் இருக்கினமென கையைத் தூக்குங்கோ//
நான் இருக்கிறேன்
இண்டைக்கு தான் இந்த பதிவை பார்க்கிறன்.....
கலை மற்றும் வி.ஜே நீங்களும் மற்றைய ஈழத்து உறவுகளும் தனிமடல் மூலம் அழைக்க வேண்டுகிஏன், அழைப்பாணை அனுப்பப்படும் :)
வணக்கம்!! கானா பிரபா,
சத்தியமாய் ஒரு நல்லதொரு முயற்சி...கொஞ்சம் கொஞ்சமாய் முத்தத்தை (அதில்ல..இது முற்றம் தான்) பெருக்குவம் (அதிகப்படுத்துவோம்)
வாழ்த்துகள்.
பாரதி
உங்களுக்கும் அழைப்பாணை அனுப்போணும் kanapraba@gmail.com இற்கு தனிமடல் ஒண்டு தாங்கோ
வாழ்த்துக்கள் பிரபா,
இன்று தான் இந்தப் பக்கத்தைப் பார்க்க முடிந்தது.
வடக்கு, கிழக்கு , தெற்கு , மேற்கு, மலையகம் போன்றவாறு பிரதேச ரீதியாகவும் தமிழர் முஸ்லிம்கள் என்ற இன ரீதியாகவும் இங்கு பேசப்படும் தமிழிலும் உச்சரிப்பிலும் வேறுபாடு உள்ளது.
இது பரந்த ஆய்வு தேவைப் படும் முயற்சி.இதனை வெற்றி பெறச் செய்வதில் நண்பர்கள் அனைவரும் பங்களிப்புச் செய்வார்களாக.
ஈழத்து முத்தத்தில , சுத்தம் பண்ண வந்தவைக்கு வணக்கம். உங்கண்ட முயற்சியை நான் வாழ்த்துறன். ஆனா , உங்களுக்க பிரச்சன பண்ணாம ஒத்துமையா செயற்படோனும். ஏனெண்டா , எங்கட பிறவிகுணமே அதான். நன்றி
பஹீமாஜஹான் said...
வாழ்த்துக்கள் பிரபா,
இன்று தான் இந்தப் பக்கத்தைப் பார்க்க முடிந்தது.
வடக்கு, கிழக்கு , தெற்கு , மேற்கு, மலையகம் போன்றவாறு பிரதேச ரீதியாகவும் தமிழர் முஸ்லிம்கள் என்ற இன ரீதியாகவும் இங்கு பேசப்படும் தமிழிலும் உச்சரிப்பிலும் வேறுபாடு உள்ளது//
வணக்கம் சகோதரி
உங்கள் கருத்தை ஏற்கின்றேன். இவற்றை நாம் தகுந்தவகையில் ஆவணப்படுத்துவோம் உங்களைப் போன்ற உறவுகளின் உதவியோடு.
கண்டும் காணான் said...
ஈழத்து முத்தத்தில , சுத்தம் பண்ண வந்தவைக்கு வணக்கம். உங்கண்ட முயற்சியை நான் வாழ்த்துறன். ஆனா , உங்களுக்க பிரச்சன பண்ணாம ஒத்துமையா செயற்படோனும். ஏனெண்டா , எங்கட பிறவிகுணமே அதான். நன்றி//
வணக்கம் கண்டும் காணான்
எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்படுவோம், மிக்க நன்றி
வாழ்த்துகள்
இப்படி பட்ட வலைப்பதிவுகள்
தமிழுக்கு தேவையானது
அனைவருக்கும் மிக்க நன்றிகள்
அன்புடன்
திகழ்
மிக்க நன்றி திகழ்மிளிர்
வாழ்த்துக்கள் அண்ணா :)
அனைவருக்கும் நன்றிகள்
சுமானு..
ஈழத்து முற்றம் -ஓர் அறிமுகம்
வாழ்த்துக்கள். ஓங்கி வளர அனைவரதும் ஓத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன். 'என் உளறல்களில்.' இப்பொழுதுதான் படித்து அறிந்தேன்.
கானா பிரபா அண்ணை,
நானும் சேந்து கொள்ளலாமா??
பகீ