•6:40 AM
லான்ட்மாஸ்ரர் என்றால் என்னென்டு தெரியாதோ???லான்ட்ஐ மாஸ்ரர் பண்றதுதான் லான்ட்மாஸ்ரர் :-))
விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலமாக நிலத்தைத் தயார்படுத்துறதுக்குப் உபயோகிக்கிற ஒரு இயந்திரம் லான்மாஸ்ரர் (நான் சொல்றது சரிதானே). ரக்ரரால உழுறது போல இதாலயும் உழுறவை. அந்த உழுவை இயந்திரத்துக்குப் பின்னால ஒரு பெரிய பெட்டியிருக்கு அதில ஒரு 10-15 ஆக்கள் பயணம் செய்யலாம். அநேகமாக கோயில் போன்ற கொஞ்சம் தூரப் பயணங்களுக்குப் போறாக்கள் லான்மாஸ்ரரில் போறவை.
நான் வல்லிபுரக்கோயிலுக்கும் செல்வச்சந்நிதி கோயிலுக்கும் லான்மாஸ்ரரில் போயிருக்கிறன். அம்மம்மான்ர வீடு றோட்டுக்கரைல இருக்கு அங்கால முழுவதும் எங்கட தோட்டம்....வல்லிபுரத் திருவிழா நேரம் அந்த றோட்டுக்கரைல நிண்டால் யார் யார் கோயிலுக்குப் பொங்க போயினம் என்டு தெரியும். பெரிய அண்டா, குண்டா, அகப்பை, பாய் மிச்ச தட்டு முட்டுச் சாமான் எல்லாத்தையும் நடுவில வைச்சிட்டு கரைத்தட்டில நிறையப்பேரிருந்து போவினம் கோயிலுக்கு.
லான்மாஸ்ரரில் கனதூரம் போகேலாது பேய் நோ நோகும். ஆனால் குடும்பமாப் பொங்கப் போறவை அப்பிடித்தான் போறவை. காத்துக்கு விழுந்திடுவம் என்று அநேகமா சின்னப்பிள்ளையளை தட்டில இருக்க விட மாட்டினம். நடுவில வயசுபோனாக்கள் காலை நீட்டி கஞ்சி வடிச்சுக்கொண்டிருப்பினம் அவையளோட இருக்கேலாது தட்டிலயும் இருக்கேலாது சில சின்னப்பிள்ளையள் அழுது அடம்பிடிச்சு டிரைவர் பக்கமா இருக்கிற கரைத்தட்டில இடம்பிடிச்சிடுவினம்...அதில பிடிமாதிரி ஒன்டு இருக்கு அதைப்பிடிச்சுக் கொண்டு இருந்தால் விழமாட்டம் என்டு பெருசுகளைச் சமாளிக்கலாம். கோயிலால வரேக்க பானை எல்லாம் கரி பிடிச்சு இருக்கும் அப்ப இன்னும் இடம் காணாமல் போகும் அப்பவும் பாதிக்கப்படுறது சின்னப்பிள்ளையள்தான்.கொடுமை கொடுமை.
உண்மைாய இந்த வாகனம் விவசாயம் செய்யிறாக்கள் வெங்காயம் , புகையிலை ஏற்றி இறக்கப் பயன்படுத்தும் நோக்கில வாங்குவினம் பிறகு அது கோயிலுக்கும் இடம்பெயர்ந்து போறதுக்கும் பாம்பு கடிச்சாக்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகவும் பயன்ட்டுக்கொண்டிருக்கும். வாடகை லான்மாஸ்ரர்களில் அழகான ஓவியங்கள் எல்லாம் கீறி நல்ல கலர்புல்ல வச்சிருப்பினம்.
லான்மாஸ்ரரும் மண்ணெண்ணெயிலதான் ஒடுறதென்று நினைக்கிறன்.
16 comments:
அட ! எங்க ஊரு ப்பக்கம் கை டிராக்டருன்னு சொல்லுவோம் இல்லாட்டி குட்டி டிராக்டரு :)
//விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலமாக நிலத்தைத் தயார்படுத்துறதுக்குப் உபயோகிக்கிற ஒரு இயந்திரம் லான்மாஸ்ரர் (நான் சொல்றது சரிதானே). //
ஆங்கிலத்திலும் கொடுத்திருக்கலாம் உச்சரிக்க எளிதாய் இருந்திருக்கும் :)
ஆஹா உடனே மழை ஸ்ரேயா அக்காவின் ஆசையை நிறவேற்றிப்போட்டியள். நீங்கள் வடமராட்சியோ.
உந்த லான்மாஸ்ரரை மினி ட்ராக்டர் எனவும் சொல்வினம். இன்னொரு விசயம் லான்மாஸ்ரரை சைக்கிளில் போறவை முந்திக்கொண்டுபோவினம் அவ்வளவு பாஸ்டாக போகும் ஹிஹீஹி. பொயிலை கட்டிக்கொண்டுபோகவும் நல்லா உதவும். சிலர் இரண்டு பாயால் மேலை மூடி மூடிய வாகனமாகவும் பாவிச்சவை.
இடம்பெயர்வு காலங்களில எல்லாமே அத்தியாவசிய வாகனங்கள் தான். ரண்டாவதா போற வாகனத்தில, மல்ற்றி பரலும் பூட்டியிருக்கு :(
:) சின்னவயசில இப்பிடி யோசித்திருக்கிறேன். வளர்ந்த பிறகு கார் பஸ் எல்லாம் வாங்குவதில்லை. லான்ட் மாஸ்ரர் அல்லது ட்ரக்டர்தான் வாங்குவது என.
ஏனென்றால்..
அப்பதானே சில்லு எங்கே திரும்புது என பாத்து ஓடலாம். :)
ஒருநாள் நான் இந்த Land master ஓட்டிப் பாக்க வெளிக்கிட்டு, கைபிடியை (stearing ?? :) ) ஐ விட்டிட்டன். முன்பாரம் இழுத்தவுடன, அது எங்கயோ எனக்கு எட்டாத உயரத்துக்குப் போய் நிண்டுது. பிறகு வேற ஆக்கள் வந்து அதை இழுத்து என்ரை கையில தர வேண்டியதாப் போச்சு :).
நன்றி சினேகிதி. எனக்கு இந்த வாகனம் தெரியும். வந்தியத்தேவன் சொன்னமாதிரி மினி ட்ரக்டர்/(குட்டி ட்ரக்டர்) என்டுதான் பெயர் தெரியும்..
கலை - :O))
சுகமான மாட்டுவண்டிச் சவாரியின் எதிரி இது கண்டியளோ
உந்த லான்ட்மாஸ்ரர் வாகனம் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் சிங்களவனுக்கும் ஒரு போக்குவரத்து வாகனமாகத்தான் இருக்கவேணும் எண்டு நினைக்கிறன்.
நீங்கள் இணைத்திருக்கும் முதல் போட்டோவை ஒருக்கா பாருங்கோ, அதில் பயனிப்பவர் சிங்களவர், பௌத்தக்கொடியையும் முன்னே பறக்கவிட்டிருக்கினம்.
//மொழிவளன் said...
உந்த லான்ட்மாஸ்ரர் வாகனம் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் சிங்களவனுக்கும் ஒரு போக்குவரத்து வாகனமாகத்தான் இருக்கவேணும் எண்டு நினைக்கிறன்.//
ஆமாம் பெரும்பாலான விவசாய சிங்கள கிராமங்களில் லான்ட் மாஸ்ரர் அத்தியாவசிய வாகனம். வெசாக் நேரத்திலும் கதிர்காமத் திருவிழாக் காலத்திலும் லான்ட் மாஸ்ரரில் உலாவருபவர்களைக் காணலாம்.
எங்கட ஊர் பக்கம் டிராக்டர்ஸ் சரியான குறைவு ஆனால் நிறைய லான்ட்மாஸ்டர்ஸ் பார்க்கலாம். எங்கட வீடுதான் கடைசி ..வீட்டுக்குப் பின்னால கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் தோட்டம்தான். அநேகமாக எங்கட வீட்டடில எப்பவும் யாற்றயும் ஒரு லான்ட்மாஸ்டர் நிப்பாட்டினபடி இருக்கும்.
பதிவில சொல்ல மறந்த விசயம் : சிலபேர் எங்கட வீட்டுக்கு முன்னால லான்ட்மாஸ்ரரில் கொண்டுவந்து எரு ( காஞ்ச மாட்டுச்சாணம்) ப்பறிச்சுப்போட்டு ஆட்களை வச்சு அள்ளுவினம். சில எருமணம் அருவருப்பா இருக்கும்.
\\நிறவேற்றிப்போட்டியள். நீங்கள் வடமராட்சியோ.\\
பருத்துறையிலிருந்து கொடிகாமத்துக்கு தட்டிவானில நெல்லியடி , கொடிகாமம் போறதெண்டால் எங்கட வீடு தாண்டித்தான் போகோணும்.
\\ இன்னொரு விசயம் லான்மாஸ்ரரை சைக்கிளில் போறவை முந்திக்கொண்டுபோவினம் அவ்வளவு பாஸ்டாக போகும் ஹிஹீஹி \\
ஓமோம்...அதுபாவம் விடுற மண்ணெண்ணையைப் பொறுத்ததுதானே.:-)
\\ஏனென்றால்..
அப்பதானே சில்லு எங்கே திரும்புது என பாத்து ஓடலாம். :)\\
ஓ இப்பிடி ஒரு விசயம் இருக்கா இதில. காருக்கு மேல இருந்து ஓடினால் தெரியும் சில்லு எங்க திரும்புது என்டு:-)
\\ஒருநாள் நான் இந்த Land master ஓட்டிப் பாக்க வெளிக்கிட்டு, கைபிடியை (stearing ?? :) ) ஐ விட்டிட்டன். முன்பாரம் இழுத்தவுடன, அது எங்கயோ எனக்கு எட்டாத உயரத்துக்குப் போய் நிண்டுது. பிறகு வேற ஆக்கள் வந்து அதை இழுத்து என்ரை கையில தர வேண்டியதாப் போச்சு :).\\
அப்ப உங்களைத் தூக்கி எறியேல்லயா?
ம் இனிப்போற சந்தர்ப்பம் கிடைக்கேக்கதான் நானும் ஒருக்கா லான்ட்மாஸ்டரை ஓட்டிப்பார்க்கோணும். இப்ப அங்க என்னென்ன எல்லாம் புதுசா வந்திருக்கோ.
\\சுகமான மாட்டுவண்டிச் சவாரியின் எதிரி இது கண்டியளோ\\
நாங்கள் எங்க மாட்டுவண்டிச்சவாரியைக் கண்டம்???? நானொருநாளும் மாட்டுவண்டியில ஏறினதில்லை :(
\\நீங்கள் இணைத்திருக்கும் முதல் போட்டோவை ஒருக்கா பாருங்கோ, அதில் பயனிப்பவர் சிங்களவர், பௌத்தக்கொடியையும் முன்னே பறக்கவிட்டிருக்கினம்.\\
எங்கெங்கெல்லாம் விவசாயம் செய்கிறார்களோ அங்கெல்லாம் லாண்ட்மாஸ்ரர் இருக்கு ஆனால் அவர்களெல்லாம் அதைப் பிரயாணம் செய்யப்பயன்படுத்தினமா என்று தெரியா.
கனடாவிலும் லாண்ட்மாஸ்ரர் இ டிராக்டர் எல்லாம் உழுவதற்கு பயன்படுத்துகிறார்கள். Fresh காய்கறிகள் , பழங்கள் வாங்கவென்று இங்குள்ள farmers market என்ற இடத்துக்குப் போனால் லான்ட்மாஸ்ரர் பார்க்கலாம்.
இன்னுமொரு சில பயன்பாடுகளும் லாண்ட் மாஸ்ரரில் இருக்கு.
ஜெனரேட்டராகவும் அதனைப் பாவிக்கலாம்.
எங்கள் வீட்டுக்கருகிலிருந்த மில்லில் அதனை நெல்லுக் குத்த, அரிசி தீட்ட,மா அரைக்க,மிளகாய் அரைக்க ...என்றும் இதனைப் பயன்படுத்தினார்கள்.
இப்படி இதன் பயன்பாடு பல வகை.
இதை ஓட்டுறது சும்மா லேசுப்பட்டவேலையில்லை. கையில் மட்டுமன்றி, இடுப்பு, வயிறு என்று உடம்பு முழுவதும் நல்ல பலமான நிலையிலிருக்க வேண்டும். இதைத் திரும்பும்போது அதன்கைபிடியை உடம்பலிருந்து எட்டவாகத் தள்ளி - அதேநேரம் மிகப்பலமாகவும் பிடித்திருக்க வேண்டும்.
நெஞ்சு பயங்கரமாக நோகும் இதை ஓட்டினால், குறிப்பாக மேடுபள்ளமான பாதைகளில் ஓட்டினால்.