Author: தமிழன்-கறுப்பி...
•1:50 AM
எந்த மொழியாயிருந்தாலும் அதனை அந்தஊர் பெண்கள் பேசிக்கேட்கும் பொழுதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது அதுவும் வயதுப்பெண்களிடமிருந்து கேட்கும் பொழுதில் அந்த மொழிக்கு ஒரு தனித்தன்மை வந்து விடுகிறது. உதட்டசைவுகளும், உடல் மொழியும் அவளவளுக்கே உரிய தனி இயல்புகளோடும் பேசக்கேட்கையில் அது ஒரு தனி பரவசம் தருகிற நிகழ்வு. இப்படி நான் கேட்க விரும்பியிருக்கிற மொழிகள் தற்போதைக்கு அரேபியப்பெண்களின் ஹபீபிக்கள், கேரளத்துப்பெண்களின் திறக்கப்டாத உதடுகளினுடு வருகிற வார்ததைகள், கறுப்பு நிற தேவதைகளிடமிருந்து தமிழ், பதின்மங்களில் இருக்கிற குரல்களினூடு சிங்களம் சாதாரணமாய் பேசும் பொழுதே பெண்கள் மொழியை இயல்பாக அழகுசெய்கிறார்கள்.இப்படி இருக்க நெருக்கம் நிறைந்த பெண்மையின் அழைப்புகள் எப்படி இருக்கும்?! அப்படி ஒரு பரவசம் மிகுகிற வார்த்தைதான் இஞ்சையப்பா இந்த இஞ்சையப்பா(அல்லது இதனுடைய பொருள் தருகிற மற்றய வார்த்தைகள்) என்கிற வார்த்தையை கேட்காத யாழ்ப்பாணத்து ஆண்கள் யாராவது இருந்தால் இவர்களுடைய வாழ்க்கை இளம்பெண்களால் சபிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

அவள் என்னை எப்பொழுது அப்படி அழைக்கத்தொடங்கினாள் என்பது தெரியாது ஆனால் அது அவள் என் மீது வைத்திருந்த பிரியங்களின் நம்பிக்கையின் அளவீடாக எனக்கு தோன்றியது அவளோடு ஊரில் இருக்கும் வரையும இந்த வார்த்தைகளை நான் கவனித்ததே இல்லை. கடல் கடந்து வந்த பிறகு ஒரு அடைமழை நாளின் பின்னேரமொன்றில் அவள் என்னை அப்படி அழைத்த பொழுது சிலிர்த்துப்போயிருந்தேன் அதற்கு பிறகு அவள் என்னை அழைக்கும் பொழுதில் அவளோடு முழுவதுமாய் வாழ்ந்ததுபோலவும் அந்த நெருக்கத்தை புதுப்பிப்பது போலவும் உணரத்தொடங்கினேன்.. பிரிவறிவித்த பொழுதுகளில் கூட அவளால் இந்த வார்ததைகளை உச்சரிக்காமல் பேச முடியவில்லை அந்தளவுக்கு ஜீவ நெருக்கம் நிறைந்த உறவாக அவளெனக்கு இருந்தாள்.

எனக்கும் அவளுக்கும் இடையில் அவள் என்னை அப்பா என்ற விழிப்புகளோடு எப்பொழுது அழைக்கத்தொடங்கினாள் என்பது தீர்மானமாக தெரியவில்லை அனால் அவள் அப்படி அதிகம் விழிப்பது தொலைபேசியில் அவளோடு பேசும் பொழுதுகளிலென்றுதான் நினைக்கிறேன் அதற்கு நானும் அவளும் தொலைபேசியில்தான் அதிகம் பேசியிருப்பது ஒரு காரணமாயிருக்கலாம்.மற்றும்படி நேரில் சந்திக்கிற பொழுதுகளில் பெரும்பாலும் பேசுவதில்லை என்பது வேறுகதை.சுருக்கமாக சொல்லப்போனல் பேசிக்கொண்டடிருக்கும் பொழுதில் அது தெரியாவிட்டாலும் இஞ்சையப்பா என்று ஒரு தேவதை அழைக்கிற தருணங்கள் அந்த அழைப்புக்குரியவன் வாழ்கிற பொழுதுகள். நினைவுகளை அசைபோடுகிற தனிமைகளில் தெரியும் அந்த நெருக்கம் நிறைந்த வார்ர்ததைகளின் சுகம்! அது அனுபவித்தவர்களுக்கு தெரியும்.

காதலர்களுக்கிடையில் கூட பெண்கள் இயல்பாகவே இப்படி அழைக்கத்தொடங்கி விடுவார்கள் அது அவர்களுக்கிடையில் இருக்கிற நம்பிக்கை மற்றும் நெருக்கத்தை குறித்து வெளிப்படும் என்பது என்னுடைய எண்ணம் மற்றும்படி அனேகம் காதலர்களுக்கிடையில் இது இருக்கும் ஆகக்குறைந்து அவர்கள் இரண்டு பேருக்குமான பொழுதுகளிலாவது கட்டாயமாய் இருக்கும். இது யாழ்ப்பாணத்தில் கணவனை அழைக்கும் வழக்கமாக அன்று தொட்டு இருந்த வருவதில் இருக்கிற அனிச்சையான இயல்பு என்று நினைக்கிறேன்.இந்த இஞ்சையப்பா என்கிற வார்ததை கொடுக்கிற பொருள் அழைக்கிற தொனியிலும் சத்தத்தின் அளவிலும் கூடவே அந்த நேரத்திற்கும் உடல் மொழிக்கும் உரியதாக அமையும் அதை சரியாக கண்டு கொள்வது ஆண்களின் பொறுப்பு.

'இஞ்சருங்கோ' என்பது தற்பொழுது வழக்கத்திலிருந்த குறைந்து விட்டதென்பது நான் அந்த அழைப்புகளை கேட்டது குறைவென்பதிலிருந்து கண்டு கொண்டது. அதன் மருவு வழக்குகளாக இஞ்சையப்பா இஞ்சையுங்கோ போன்றவை இருக்கிறது. இஞ்சருங்கோ என்று பாவிக்கிறவர்கள் முந்தைய தலை முறையினர்தான், உதாரணமாய அப்துல்ஹமீத் யாழ்ப்பாணம் பார்த்தபொழுதில்(தெனாலி) இருந்த யாழ்ப்பாணத்து தலை முறையினர்தான் இப்பொழுது கணவனை இப்படி அழைக்கிறவர்களுக்கு குறைந்தது நாற்பது வயதிருக்கலாம் இது என்னுடைய கருத்து மட்டுமே! மற்றபடி நீங்கள் அப்படி அழைக்கக்கூடாதென்றெல்லாம் நான் சொல்லவில்லை அது உங்களிருவரையும் பொறுத்தது. எனக்கெல்லாம் அவள் சிணுங்கலாய் இஞ்சையங்கோ (இஞ்சையப்பா)என்கையில் செத்துவிடலாம் போலிருக்கும்.


இப்பொழுதிலிருக்கிற தலைமுறை என்னங்கோ அல்லது அப்பா அல்லது இஞ்சையப்பா என்றுதான் அதிகம் பயன் படுத்துவதாய் என்னளவிலான அனுபவம் இருக்கிறது அந்தந்த ஊர் வழக்கத்தின் படிதான் இந்த வார்த்தைகளின் தொனி இருக்கும்.யார் பயன் படுத்துகிறார்களோ இல்லையோ எனக்கந்த மொழி நிறையப்பிடிக்கிறது.பெயர் சொல்லி அழைக்கிற தருணங்கள் போலவே நம்பிக்கைகளோடு நெருக்கத்தின் உறுதியல் தானாக வெளிப்படுகிற இந்த வார்த்தைகள் குடும்ப வாழ்க்கையில் அதற்கதற்குரிய வேளையில் அதற்கதற்குரிய தொனிகளில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மிக விருப்பமாக பல நாட்களாக எழுத வேண்டுமென நினைத்திருந்த ஒரு விசயம் இப்பொழுதெல்லாம் என்னை எந்த தேவதையும் அப்படி அழைப்பதில்லை என்கிற உணர்வுகள் குறுக்கிடுவதில் மழுமையில்லாமல் வந்திருக்கிறது,பார்க்கலாம் இந்த பதிவையே இன்னொரு பொழுதில் என்னால் வேறுமாதிரியாக எழுத முடியும் எனறு நம்புகிறேன்.இப்போதைக்கு மிகுதியை பின்னூட்டங்களில் பார்த்துக்கொள்ளலாம்.


நன்றி!
This entry was posted on 1:50 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments:

On June 11, 2009 at 2:22 AM , தமிழன்-கறுப்பி... said...

இந்தப்பதிவு இங்க எழுத வேண்டிய பதிவில்லை எண்டு நினைக்கிறன்..

;)

 
On June 11, 2009 at 2:48 AM , ஆயில்யன் said...

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்! :))))))))))

 
On June 11, 2009 at 2:55 AM , ஆயில்யன் said...

இந்த வார்த்தை பிரயோகிக்கப்படுவதை கேட்டிருக்கிறேன் ஆனால் இதற்கு அர்த்தம் இங்கு அப்படின்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்!

இங்கடாப்பா ந்னு ஒரு வார்த்தை பிரயோகம் இருக்குங்க ! ஆனா அதுக்கும் அர்த்தம் தெரியாது!

 
On June 11, 2009 at 2:57 AM , ஆயில்யன் said...

//அரேபியப்பெண்களின் ஹபீபிக்கள், கேரளத்துப்பெண்களின் திறக்கப்டாத உதடுகளினுடு வருகிற வார்ததைகள், கறுப்பு நிற தேவதைகளிடமிருந்து தமிழ்,///

எண்ட அம்மே!

பயபுள்ளை ஏகப்பட்ட விசயங்கள் சொல்லுது!

 
On June 11, 2009 at 2:59 AM , ஆயில்யன் said...

//எனக்கும் அவளுக்கும் இடையில் அவள் என்னை அப்பா என்ற விழிப்புகளோடு எப்பொழுது அழைக்கத்தொடங்கினாள் என்பது தீர்மானமாக தெரியவில்லை அனால் அவள் அப்படி அதிகம் விழிப்பது தொலைபேசியில் அவளோடு பேசும் பொழுதுகளிலென்றுதான் நினைக்கிறேன்///

விழிப்பது - விளிப்பது

இரவு முழுவதும் அழகன் ஸ்டைல்ல இப்படி விழிச்சு விளிச்சா சவுதி டெலிபோன்க்காரன் நல்லாவே கல்லா கட்டுவான்

நல்லா இருங்கடே! :)))

 
On June 11, 2009 at 4:31 AM , கானா பிரபா said...

கறுப்பி

சாட்டோட்ட சாட்டா உம்மட காதல்காவியத்தை விட்டுட்டீர் என்ன :)
நல்லாத் தான் இருக்கு

 
On June 11, 2009 at 8:26 AM , வசந்தன்(Vasanthan) said...

'அப்பா' என அழைப்பது தனியே எதிர்ப்பாலாரிடம் மட்டுமன்றி பொதுவான பயன்பாட்டிலிருக்கிறது. அது நண்பர்களிடத்திற்கூட மிகச் சாதாரணமாக பயன்படுத்தப்படும் சொல்.

'என்னப்பா சொல்லிறீர்?' என்றால் அது இரு நண்பர்கள் தமக்குட் பேசிக்கொள்ளும் இயல்பான சொல்லாடலாகவும் இருக்கலாம், கணவன் - மனைவி, காதலன் - காதலி பரிமாறும் சொல்லாடலாகவும் இருக்கலாம்.

'இஞ்சையப்பா' என்பதுகூட தனியே பெண் ஆணை அழைக்கும் முறையென்று சொல்லிவிட முடியாது. ஆண் பெண்ணை அழைக்கும் முறையும் அதுதான்.
பெண் ஆணையழைக்கும் முறைக்கு மட்டும் பொருந்துவது 'இஞ்சருங்கோ' தான்.

 
On June 11, 2009 at 3:18 PM , கலை said...

70 வயதைக் கடந்தவர்கள்கூட சிலர் ‘இஞ்சையப்பா' சொல்லக் கேட்டிருக்கிறேன். தெனாலியில் ‘இஞ்சாருங்கோ' என்றபோது, இது பாவனையில் உள்ளதா என்று நினைத்திருக்கிறேன்.

 
On June 13, 2009 at 6:49 PM , தமிழ் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

 
On June 14, 2009 at 5:40 AM , தமிழன்-கறுப்பி... said...

வசந்தண்ணன்-
இதைத்தான் நான் எதிர்பாத்தனான் :)


பின்னூட்டங்களுக்கு
நன்றி நண்பர்களே!