•4:18 AM
வல்வெட்டித்துறையிலுள்ள துறைமுகத்தில் ஒரு காலத்தில் "சலங்கு" எனப்படும் பாய்மரக்கப்பல்கள் பல காணப்படும். இக்கப்பல்களில் மூன்று நான்கு பாய்மரங்களும் பல பாய்களும் உண்டு. மிகவும் பெரிய இக்கப்பல்கள் இந்தியாவுடனும் தூரகிழக்கு நாடுகளுடனும் வணிகத்தில் ஈடுபட உதவி வந்தன. வல்வெட்டித்துறையில் காற்றடிக்கின்ற காலத்தில் இவற்றைக் காரை நகருடன் அண்டிய ஊர்காவற்றுறைத் துறைமுகத்தில் பாதுகாப்பாகக் கட்டிவிடும் வழக்கம் இருந்தது. அதுமட்டுமன்றி உணவுப்பொருட்களையும் இவை காரைநகருக்குக் கொண்டு செல்வதுண்டு. இதனை மையமாக வைத்து ஒரு நாட்டார் பாடல் தீவுப்பக்கங்களில் வழக்கிலுள்ளது.
வல்வெட்டித்துறைப் பாய்மரக்கப்பலில்
வந்து குவியுது பண்டமடி
வாய் நிறையத் திண்டு வெத்திலை போடலாம்
வாருங்கோ கும்மி அடியுங்கடி
வத்தை சலங்கு கட்டுமரம் தோணி
வள்ளங்கள் வந்து குவியுதடி
எத்தனை பண்டங்கள் ஏந்தி வருகுது
எல்லாமே கொள்ளை லாபமடி
தகவல் நன்றி: கலாநிதி காரை.செ.சுந்தரம்பிள்ளை
(சிதம்பரக் கல்லூரி நூற்றாண்டு மலர்)
வல்வெட்டித்துறைப் பாய்மரக்கப்பலில்
வந்து குவியுது பண்டமடி
வாய் நிறையத் திண்டு வெத்திலை போடலாம்
வாருங்கோ கும்மி அடியுங்கடி
வத்தை சலங்கு கட்டுமரம் தோணி
வள்ளங்கள் வந்து குவியுதடி
எத்தனை பண்டங்கள் ஏந்தி வருகுது
எல்லாமே கொள்ளை லாபமடி
தகவல் நன்றி: கலாநிதி காரை.செ.சுந்தரம்பிள்ளை
(சிதம்பரக் கல்லூரி நூற்றாண்டு மலர்)
17 comments:
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவுக்கு பயணம் போன அன்னபூரணி ஒரு வரலாறு.வல்வெட்டித்துறை மக்களின் தீரத்துக்கும் கடின உழைப்புக்கும் சாட்சி.
அதுசரி படத்திலை இருப்பது எந்த இடம் என்று தெரியுமோ?
தகவலுக்கு நன்றி.
அது ஒரு காலம்
வரலாறு திரும்பும்.வாழ்நாளுக்குள் பார்ப்போம்.
வல்வெட்டித்துறையினர் கப்பல், படகு செய்வதில் வல்லவர்கள் என்றும் கடினமான உழைப்பாளிகள் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்.
"நாம் கப்பலில் ஓடிய தமிழர்கள் இல்லை கப்பல் ஓட்டிய தமிழர்" என்று
சொல்வார்களாம்.
வீரம் செறிந்த மண் என்றும் சொல்லுவினம். உண்மைதானே.
நீங்கள் தந்த தகவல் குறைவாக தான் இருக்கிறது.
இருந்தாலும் ஈழத்து முற்றத்தில் பல நாட்களுக்கு பிறகு ஒரு பதிவை கண்டதில் மகிழ்ச்சி.
பின்னூட்டமிடுபவர்கள் மேலதிக தகவல் தந்தால் நாமும் தெரிந்துகொள்வோம்.
ஈழநாதன் ,
அன்னபூரணி பற்றி நீங்கள் ஒரு பதிவு எழுதுங்களேன்.
பலருக்கு அன்னபூரணி பற்றிய தகவல் சென்றடையும்.
கேட்க ஆவலாக உள்ளது.
தெரிந்தவர்கள் ஒரு பதிவு போடவும்.
படத்தில் இருப்பது எந்த இடம்?
படத்தில் இருப்பது தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோயிலுக்கு கிட்ட வடமராட்சி நிலப்பகுதியையும், வலிகாம நில பகுதியையும் இணைத்து இருந்த பாலம், இப்ப உடைந்து போய் உள்ளது என நினைக்கிறேன்.
ஈழநாதன் சரியோ?
அந்தப்பாலமாகத் தான் இருக்கவேண்டும். வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தனைப் பற்றியும் எழுதுங்கள். வல்வெட்டித்துறை கடல் முருகைக்கல் கடல் குளிக்கும்போது எப்படியாவது முருகைக்கல் வெட்டி காயம் ஏற்படும். வல்வெட்டித்துறையில் இருந்து பருத்தித்துறை கோரியடி வரை முருகைக்கல் தான் அங்காலை தும்பளையிலிருந்து வல்லிபுரக்கோவில் கடல் நாகர்கோவில் கடல் வரை ஒரே மணல்கடல். ஒரு காலத்திலை சைக்கிளில் சுத்திய ஏரியாக்கள்.
தகவலுக்கு நன்றி.
வார்த்தைத்தேடலூடு நம் வாழ்க்கையையும் திரும்பிப்பார்க்கிறோம்..
// த.ஜீவராஜ் said...
வார்த்தைத்தேடலூடு நம் வாழ்க்கையையும் திரும்பிப்பார்க்கிறோம்.//
கலக்கல் வரிகள் எம் வாழ்க்கையைத் திரும்பிப்பார்ப்பதில் அப்படி ஒரு சந்தோஷம். வெறுமனே வார்த்தைத் தேடல் என்றால் கொஞ்ச நாளில் போரடிக்கும் அபப்டியே நம்ம பாசைகளில் எழுதும் பதிவுகளில் அந்த மண்ணில் வாழ்ந்த வாழ்க்கை மனக்கண்ணில் நிற்கும். எங்கள் மண்ணில்(திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, புசல்லாவை, ஹட்டன் எப்படி நீளும் பட்டியல்) நிற்கும் போது சொந்த மண்ணில் நிற்க்கும் அனுபவம் கிடைக்கும். மக்கள், கடைதத் தெருக்கள் கோவில்கள், வாசிகசாலைகள், சைக்கிளில் செல்லும் பெண்கள் என எல்லாம் எமக்குப் பொதுவானவை.
எனக்கு ஒருநாளும் நெல்லியடி டவுனுக்கும் திருகோணமலை டவுனுக்கும் வித்தியாசம்(புவியியல் ரீதியாக அல்ல) தெரிவதில்லை. ஆனால் கொழும்பு கண்டி மாத்தறையில் வித்தியாசம் அப்பட்டமாகத் தெரியும்.
இந்த அனுபவம் உங்கள் யாருக்காவது ஏற்பட்டிருக்கிறதா?
ஈழநாதன்!! கண்டு கனகாலம்.. நலமா?
'அன்னபூரணி'யைப் பற்றி ஒரு பதிவு போடுங்க.
வல்வெட்டித்துறையில் கட்டின வெவ்வேறுவிதமான கப்பல்கள் பற்றின பதிவும் படங்களுடன் (கிடைத்தால் அல்லது முடியுமாயின் வரைந்து) போட்டால் நல்லாயிருக்கும்.
--
கட்டிய கலங்களின் வரிசையில் சலங்குகளெல்லாம் தாண்டி நீர்மூழ்கியும்...
வல்வெட்டித்துறையைப்பற்றி நிறையக்கதைக்கலாம் எண்டு நினைப்பன் ஆனா நேரம்தான் கிடைக்கிறல்லை.
பழைய வல்வெட்டித்துறை இப்ப இல்லையெண்டுறது என்னுடைய கருத்து.சனம் எல்லாம் ஆளுக்கொரு பக்கமா போட்டுதுகள்.
எனக்கும் நிறைய பெடியள் பெட்டையளோடை பழக்கம் இருந்திச்சு வல்வெட்டித்துறையில்...
அதுகளெல்லாம் இப்ப எங்க இருக்குதுகளோ, என்னண்டாலும் நல்லா இருந்தா சரிதான்..
வார்த்தைகளூடு வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறோம்!
நெஞ்சு கனக்கும் பார வரிகள்!!
:)
ஈழநாதன்(Eelanathan) said...
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவுக்கு பயணம் போன அன்னபூரணி ஒரு வரலாறு.வல்வெட்டித்துறை மக்களின் தீரத்துக்கும் கடின உழைப்புக்கும் சாட்சி.
அதுசரி படத்திலை இருப்பது எந்த இடம் என்று தெரியுமோ?//
ஈழநாதன்
அன்னபூரணி பற்றி விரிவாக எழுதோணும். நீங்களும் உதவலாம் ::)
உது தொண்டமானாறு பாலம் தானே
வருகைக்கு நன்றி நண்பர்களே
அன்னபூரணி கப்பல் பற்றி
முந்தி
வசந்தன்
பூராயம்
இரண்டு பேரில் ஒராள் பதிவு போட்டிருக்கவேணும் எண்டு நினைக்கிறன்.
தேடி பாக்கவேணும்
http://www.yarl.com/forum3/lofiversion/index.php/t11668.html
இது யாழ் இணையத்தில் உள்ள பதிவு.
கூகுல் தேடலில் கிடைத்தது.
வசந்தன், அல்லது பூராயத்தின் பதிவுகளில் இருப்பது மாதிரி தெரியவில்லை :(. ஆனால் முன்னர் யாரோ வலைப்பதிவில் பதிந்த ஞாபகம்.