Author: கானா பிரபா
•2:32 AM
ஈழ நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோறசவ நிகழ்வுகள் இன்றிலிருந்து அடுத்த 25 நாட்கள் இடம்பெற இருக்கின்றன. கடந்த 2007 ஆம் ஆண்டில் என் சொந்த வலைப்பதிவான "மடத்துவாசல் பிள்ளையாரடி" மூலம் நல்லூர்க் கந்தன் ஆலய மகோற்சவ காலத்தில் தொடராக 25 நாட்களும் பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள், கழிந்த நம் திருவிழாக் கால நினைவுகளாகக் கொடுத்திருந்தேன். அவற்றை மீள் இடுகையாகத் தருவதோடு இந்த ஆண்டில் நடைபெறும் ஆலய நிகழ்வுகளையும் அவ்வப்போது தர எண்ணியுள்ளேன்.

என்னுடைய இப்பதிவுகளுக்கு உசத்துணை உதவியாக இருந்து உதவும் நூல்கள்
1. "யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு", ஐப்பசி 1993 - கலாநிதி சி.க.சிற்றம்பலம்

2. "யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்து நிலை" ஆவணி 2000 - கார்த்திகேசு சிவத்தம்பி

3. "யாழ்ப்பாணச் சரித்திரம்", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை

4. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா

5. "நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் (வரலாறு)", ஆடி 2005 - கலாநிதி க.குணராசா

6. "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்

இப்பதிவுகளை எழுதும் போது மேலும் சில உசாத்துணை உதவிகள் பெறப்படும் போது அவை இங்கே பதியப்படும்.

"பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே!
ஆறுமுகன் தஞ்சமெடி" - யோகர் சுவாமிகள்


பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த "நல்லை முருகன்" பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்றார்.





நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி நல்லூர் நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
கீதம் ஒலிக்குதடி.....கீதம் ஒலிக்குதடி.....
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி..........
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி..........
நாதம் கேட்குதடி ..........
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி

ஒலியின் அலைகள் விரவிச் செவியில்.......
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா.........ஓம் முருகா.......ஓம் முருகா
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா என ஒலிக்குதடி

கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி
கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி

மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மால் மருகன் அருள் இருக்குதடி
மால் மருகன் அருள் இருக்குதடி

வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்
வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்

நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....



இந்த ஆண்டு நடைபெற்ற கொடியேற்றத் திருவிழாப் படங்களை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்த நண்பர் செந்தூரனுக்கு நன்றிகள்.








This entry was posted on 2:32 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On July 26, 2009 at 8:08 PM , வந்தியத்தேவன் said...

முருகனுக்கு அரோகரா. இந்தக்காலத்தில் கோயில் திருவிழா சம்பந்தப்பட்ட பதிவுகளாக எழுதிவிடவேண்டியதுதான்.

 
On July 26, 2009 at 8:44 PM , மாதேவி said...

"தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக",

தெரிந்திருக்கவேண்டியதே.படங்கள் நன்று.

 
On July 26, 2009 at 10:00 PM , வாசுகி said...

நல்லூர் முருகனைனின் அலங்காரம் பிரசித்தமானது.அதனால் தானே அலங்காரக்கந்தன் என செல்லமாக அழைக்கப்படுகிறது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறமாக அலங்காரம் செய்திருப்பார்கள்.
எனக்கு இப்பவும் நினைவு இருப்பது நீல நிறத்தில் செய்திருந்த அலங்காரம் தான்.எல்லாமே நீல மயமாக மிக மிக அழகாக இருந்தது.

பணக்காரர், ஏழை என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருமே சம உரிமையுடன் தரிசிக்க கூடிய முருகன்.அர்ச்சனை செய்வதற்கு இப்பவும் ஒரு ரூபா தானாம்.


நாம் 25 நாளில் பெரும்பாலும் ஏதாவது ஒரு நாள் தான் போவோம்.
( ந‌ல்லூருக்கு கிட்ட எமது வீடு இல்லையே என முன்பு கவலைப்படுவது உண்டு )
சிறுவயதில் நல்லூருக்கு முக்கியமாக போவது குளிர்கழி உண்பதற்கும் பக்கத்தில் இருந்த பூங்காவில் விளையாடுவதற்கும் தான். (இப்ப பூங்கா இல்லை :(( .)

நல்லூர் முருகனை நினைக்கும் போதே எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது.

 
On July 27, 2009 at 11:14 AM , தங்க முகுந்தன் said...

இம்முறையும் வழமைபோல செய்திகளையும் புகைப்படங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்!

 
On July 28, 2009 at 8:07 AM , வர்மா said...

நல்லூர்த்திருவிளாவை நாங்கள் ஈழத்துமுற்றத்தில் வித்தியாசமாகக் கொண்டாடுவோம்
அன்புடன்
வர்மா.