Author: soorya
•12:30 AM
அவனது பெயர் ராக்கையா கவுண்டர்.
அது நாளடைவில் சுருங்கி...றாக்கன், என்றானது.
அவன் மலையகத்தைச் சேர்ந்தவன்.
எங்கள் வீட்டிலிருந்து படித்துக் கொண்டிருந்தான்.
அவன் வந்த புதிதில் அவனுக்கு எங்கள் சுற்றாடலைக் காண்பிக்கும் பொறுப்பு என் அப்பாவால் எனக்குப் பணிக்கப்பட்டது.

எனக்கும் றாக்கனுக்கும் ஒரே வயசு.
...........................
இனித்தான் பம்பல் வரப்போகுது.
1. அவருக்கு சையிக்கள் ஓடத் தெரியாது.
2. அவருக்குக் கிணறு தெரியாது.
3. தோட்டம், வயல் இது அவருக்குச் சுத்த சூனியம்.
4. அட, தியேட்டரில் ஒரு படங்கூடப் பார்க்கவில்லை.(ஆனால் எம்.ஜி.ஆர் தெரியும் என்று சொன்னார்)
5. கடல்.
6. சாரைப்பாம்பு.
இப்போதைக்கு மேற்குறிப்பிட்ட தலைப்புகளோடை உங்களைச் சந்திக்க ஆசை.
இதை ஒரு தொடர் பதிவுபோலை போடுற உத்தேசம்.
(யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கக்கூடாது என்பதில்,
நான் எடுக்கும் உறுதியை..., வாசகர்களும் எடுப்பீர்களாக.
மேலும், இது பம்பல் கருதியே எழுதுகிறேன்.
கலை கலைக்காக என்பதுபோல, பம்பல் பம்பலுக்காகவே.)
நீங்களெல்லாம் குதியன் குத்தலாம்..நான் குத்தக்கூடாதோ???
உங்கள் ஆர்வம் கண்டு தொடர்வேன்.
நன்றி.
|
This entry was posted on 12:30 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

On July 7, 2009 at 3:23 AM , தமிழ் said...

இடுகை இடுங்கள் நண்பரே
ஆவலுடன் உள்ளேன்

 
On July 7, 2009 at 6:06 AM , Anonymous said...

ஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் பலவற்றைப் பகிரும் குழும வலைப்பதிவாக மலரவிருக்கின்றது இந்த "ஈழத்து முற்றம்" என்னும் வலைப்பதிவு. ஈழத்தின் பேச்சு வழக்குகளை இணையத்தில் ஒரு அகராதித் தொகுப்பாக சக வலைப்பதிவு நண்பர்களோடு இணைந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாள் தடங்கலுக்குப் பின் இப்போது நிறைவேறியிருக்கின்றது. இந்த வலைப்பதிவில் இணைந்து தங்கள் பங்களிப்பை வழங்கவிருக்கும் சக நண்பர்களையும் வரவேற்கின்றேன்.

 
On July 7, 2009 at 8:26 AM , சினேகிதி said...

உங்கட தன்னம்பிக்கை வாழ்க! இதுதான் எழுதப்போறன் எண்டு பட்டியல் போட்டு எழுதுறளவுக்கு நானில்லை. ஆனால் தலைப்புகள் எல்லாம் எப்ப எழுதுவீங்கள் என்டு ஆர்வத்தைத் தூண்டுவதாய்தான் இருக்கு.

அநாநி என்ன சொல்ற வாறீங்கள்?

 
On July 7, 2009 at 10:07 AM , பூச்சரம said...

பூச்சரத்துடன் இணையுங்கள்.
பூச்சரம : இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

 
On July 8, 2009 at 1:33 AM , சுபானு said...

நாங்கள் ஆவலாக உள்ளோம்.. வாழ்த்துக்கள் .. தொடங்க வேண்டியதுதானே..

 
On July 8, 2009 at 3:04 AM , கானா பிரபா said...

ஆவலோடு எதிர்பார்க்கின்றேன், வாழ்த்துக்கள்

 
On July 8, 2009 at 5:07 PM , யசோதா.பத்மநாதன் said...

வருக நண்பரே!

மலையக மக்களின் வாழ்வியலா?நல்லது, நல்லது.வாழ்த்துக்கள்.

அறிய ஆவலுடையேன்.