Author: வர்மா
•8:08 AM
நம் உறவு முறைமிகவும் அலாதியானது வயதுக்கு மூத்தவர்களை பேர் சொல்லி அழைப்பதில்லை. அண்ணா அண்ணண்ணா,சின்னண்ணா,பெரியண்ணா,மூத்தண்ணா,ஆசைஅண்ணா,குட்டிஅண்ணா.

இதேபோன்றுதான் அக்கா,அக்கக்கா,சின்னக்கா,ஆசைஅக்கா,பெரியக்கா,குட்டிஅக்கா. பெரியப்பா இன்னருவர் இருந்தால் ஆசை அப்பா ,ஆசை அய்யா,சித்தப்பா, இவருக்கு போட்டியாக வேறுபெயர் இருப்பதாகத்தெரியவில்லை.

அண்ணனின் ம்கன் என்னை சித்தப்பா என்று கூப்பிடத்தெரியாது சித்தா என்றான்.அது ஏதோ புதுமுறை என்று நினைத்த அயலட்டையில் உள்ளவர்கள்தங்கடை சித்தப்பாவையும் சித்தா என்றுசுருக்கிவிட்டார்கள்.

அம்மாவை தங்கச்சி என்று சொல்லத்தெரியாத அம்மாவின் அண்ணன் முறையான ஒருவர் அன்னைச்சி என்றார்.அதுவும் ஒருபுதுமுறை எனநினைத்தசிலர் தங்கடை சொந்தக்காரரில் ஒருவரை அன்னைச்சி என்றார்கள்.

அம்மா தனது சகோதரனை அண்ணா என்று கூப்பிடுவதைப்பார்த்து நாங்களும் அவரை அண்ணா என்றுகூப்பிடுவோம்.

கொப்பரை கோயிலிலை கண்டனான்,
கொம்மா சந்தைக்குபோட்டா.
கொப்பர் பெரியாளே
கொம்மாவை வரச்சொல்லு
கொக்கா எங்கபோட்டா
அப்பா அம்மாவை ஓய் என்றுதான் கூப்பிடுவார்.
அம்மா, வாருங்கோ என்பா
மாமா, அப்பாவை ஓய் மச்சான் என்பார்

இப்ப எல்லாம் தலை கீழாப்போச்சு.புருசனை பேர்சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.அவரும் பெண்டிலை பேர் சொல்லி மரியாதையாக வாருங்கோ போங்கோ என்பார்.அந்தக்காலத்திலை ஒரு பெண்ணிடம் வீட்டுக்காரரின் பெயரைக்கேட்டபோது , வீட்டுக்காரரின் பெயரை சொன்னால் பாவம் என்று மறுத்து விட்டார். எந்த ஊர் என்று கேட்டபோது அதுதானே அவற்றை பேர் என்றார். ஊர் பெயர் சிதம்பரம்.

அம்மாவை பெரியவர்கள் சின்னவர்கள் எல்லோரும் அன்னச்சி என்பதுபோல்சில உறவுகள் பொதுச்சொல்லாக மாறிவிடும்.எனது தம்பி ஒருவன் என் மகளை எங்கு கண்டாலும் ஹலோ என்பான். அவனை என்மகள் ஹலோ சித்தப்பா என்பார். அவனை நாம் எல்லோரும் ஹலோ சித்தப்பா என்போம்.

கொழும்பிலை ஆம்பிளயள் அங்கிள்,பொம்பிளையள் அன்ரி வேறுமுறை தெரியாது. எனது அலுவலகத்தில் ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. நான் எடுத்தேன். ஒரு பெண்குரல்
என்னுடன் வேலை செய்யும் ஒருவரக்கேட்டது. அவர் வெளியே போய்விட்டார் என்றேன்.
அங்கிள் அவருக்கு ஒரு மசேச் சொல்லுவியளா என்று கேட்டது பெண்குரல்
எல்லாவற்றயும் கவனமாகக்கேட்டுவிட்டு கடைசியில் , தங்கச்சி எனக்கு 22 வயது. நான் வேலைக்குச்சேர்ந்து மூன்றுமாதம் தான் என்றேன். குழைஞ்சி குழைஞ்சு மன்னிப்புக்கேட்டார். எனக்குவயசு 40 என்றும் நான் 10 வருடமாக அங்கு வேலை செய்வதும் அவவுக்குத்தெரியாது.

ஜேர்மனியில் உள்ள தனது மகளீடம் போவதற்காக எனது உறவினர் ஒருவர் கொழும்புக்கு வந்தார். அவரை எல்லோரும் அக்காசி என்றுதான் அழைப்போம். சிறுவயதிலிருந்தே கொழும்பில் வளர்ந்த என்மகளூக்கு அக்காசி என்ற சொல் புதிதாக இருந்தது. ஒருநாள் வாய்தடுமாறி அக்காசியை யசூசிஅக்காசி என்றார். இப்போ அக்காசி மறைந்து யசூசிஅக்காசி நிரந்தரமாகிவிட்டது.

அயலட்டை////////////////////////////////பக்கத்துவீடுகள்
கொப்பர்///////////////////////////////////அப்பா
கொம்மா//////////////////////////////////அம்மா
கொப்பு////////////////////////////////////அப்பா
கோத்தை//////////////////////////////////அம்மா
கொக்கா///////////////////////////////////அக்கா
பெண்டில்//////////////////////////////////மனைவி
வீட்டுக்காரர்////////////////////////////////கணவன்
குழைஞ்சு குழைஞ்சு/////////////////////////அசடுவ‌ழிதல்
This entry was posted on 8:08 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

15 comments:

On July 25, 2009 at 8:28 AM , சினேகிதி said...

எங்கட வீட்டுக்குப்பக்கத்தில இருந்தவை ஒரு குடும்பம். எப்பிடி என்டு தெரியா ஆனால் நாங்கள் அவையை குஞ்சியம்மா குஞ்சியப்பா என்டுதான் கூப்பிடுவம். அவர்கள் எங்களுக்கு உறவில்லை ஆனால் அவ்வளவு வாஞ்சை ( மணியாச்சி நன்றி.

அக்காவின் மகனுக்கு என்னைச் சித்தி என்று சொல்ல வராது அத்தி என்றுதான் சொல்லுவான். அதே போல என்ர தங்கச்சியை சித்தியும் என்றும் சொல்லாமல் அக்கா என்டும் சொல்லாமல் புது விதமா " மேக்கா" என்று கண்டு பிடித்து மேக்கா என்டுதான் கூப்பிடுறது...அது இப்ப பழகிப்போய் நாங்களனைவரும் மேக்கா என்டு கூப்பிடுறது வழக்கமாப்போச்சு.

 
On July 25, 2009 at 8:47 AM , தமிழன்-கறுப்பி... said...

ஊர்ல அம்மாவின் தங்கச்சி அதாவது சித்திமாரை அன்ரா எண்டும் சொல்லுறவை,சித்தப்பாமாரை சித்தா எண்டு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறன், முந்தின ஆக்கள் பெரும்பாலும் பெயர் சொல்லாமல்தான் அழைத்துப் பழகியிருக்கிறார்கள்; இஞ்சையப்பா, இஞ்சருங்கோ,என்னப்பா, இஞ்சருமன் உப்பிடி எத்தினை அழைப்புகள் அட..அட! அது ஒரு விதமான மொழி.

நன்றி
அது சரி உங்களை நானெப்படி கூப்பிட கானா அங்கிள் எண்டு சொன்னா பொருத்தமா இருக்குமெண்டு நினைக்கிறன்.

:)

 
On July 25, 2009 at 8:49 AM , சினேகிதி said...

\\நன்றி
அது சரி உங்களை நானெப்படி கூப்பிட கானா அங்கிள் எண்டு சொன்னா பொருத்தமா இருக்குமெண்டு நினைக்கிறன்\\

இந்தப்பதிவை எழுதியது வர்மா.

பிரபாண்ணா உங்கட படம்தான் முகப்பில வருது :)

 
On July 25, 2009 at 9:09 AM , தமிழன்-கறுப்பி... said...

அது சரி சினேகிதி நான் காணா அண்ணன் இதை படிப்பாரெண்டு தெரிஞ்சுதான் எழுதினேன்.
எழுதின விதம்தான் பதிவெழுதின ஆளைக்குறிக்கிற மாதிரி எழுதிப்போட்டன் மற்றும் படி வர்மா அண்ணை கோவிக்க மாட்டாரெண்டு நினைக்கிறன்.

:)

நன்றி.

 
On July 25, 2009 at 10:58 AM , வந்தியத்தேவன் said...

நாங்கள் எங்கடை சித்தப்பாவைச் சித்து என்றுதான் கூப்பிடுகிறது. மச்சான், மச்சாள் இரண்டும் சுருங்கி மச்சியாகவிட்டது. இன்னொரு விசயம் பொடியள் இப்போதையில் இளம்பெட்டையள் தங்கள் மச்சான்மாரை அத்தான் என கூப்பிடறது குறைவு ஸ்டைலாக அண்ணா என்கிறார்கள். இதனை நாங்கள் மாத்தவேண்டும்.

 
On July 25, 2009 at 4:50 PM , கானா பிரபா said...

தமிழன்-கறுப்பி... said...

அது சரி உங்களை நானெப்படி கூப்பிட கானா அங்கிள் எண்டு சொன்னா பொருத்தமா இருக்குமெண்டு நினைக்கிறன்.//

உங்களை நான் குஞ்சியப்பு எண்டு கூப்பிடட்டே எணே :)

ஊர்ல அம்மாவின் தங்கச்சி அதாவது சித்திமாரை அன்ரா எண்டும் சொல்லுறவை,சித்தப்பாமாரை சித்தா எண்டு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறன், முந்தின ஆக்கள் பெரும்பாலும் பெயர் சொல்லாமல்தான் அழைத்துப் பழகியிருக்கிறார்கள்; இஞ்சையப்பா, இஞ்சருங்கோ,என்னப்பா, இஞ்சருமன் உப்பிடி எத்தினை அழைப்புகள் அட..அட! அது ஒரு விதமான மொழி.

நன்றி
அது சரி உங்களை நானெப்படி கூப்பிட கானா அங்கிள் எண்டு சொன்னா பொருத்தமா இருக்குமெண்டு நினைக்கிறன்.

:)

July 25, 2009 8:47 AM
Delete

//Blogger சினேகிதி said...

\\நன்றி


பிரபாண்ணா உங்கட படம்தான் முகப்பில வருது :)//

அதை திருத்த வழி தெரியாம தடுமாறுறன் தங்கச்சி

 
On July 25, 2009 at 4:50 PM , கானா பிரபா said...

வர்மா

புதுச் சொற்கள் பல வந்திருக்கின்றன, மிக்க நன்றி

 
On July 26, 2009 at 12:07 AM , யசோதா.பத்மநாதன் said...

சுவாரிஸமான பதிவு வர்மா.

 
On July 26, 2009 at 1:03 AM , வர்மா said...

வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக.கனவிலையும் கானாபிரபாதன் போலை.கானாபிரபாவின்ரை தகுதி எனக்கும் இருப்பதாக நீங்கள்நினைப்பதையிட்டு மகிழ்ச்சியாக உள்ளது. கிறிஸ்தவர்கள் தொட்டப்பா ,தொட்டம்மா என்று கூறுவார்கள். குழந்தையை முதல் தொடுபவர்களை அப்படி அழைப்பார்கள்.சொற்களூக்கு அதிர்வு உண்டு. ஆயுளை அதிகரிக்கும் வலலமியிம் உண்டு.
அன்புடன்
வர்மா

 
On July 26, 2009 at 4:52 AM , ஹேமா said...

வர்மா, பதிவு சுவாரஸ்யமாக இருக்கு.நாங்கள் எங்கட அம்மம்மாவை ஆச்சியம்மா எண்டும் சித்தியை சித்தா எண்டும்தான் கூப்பிடுவம்.

என் நண்பர் ஒருவரின் மனைவி தன் கணவரைப் "புருஷா" என்றே கூப்பிடுறார்.இதுவும் நல்லாயிருக்கு.
முதல்நாள் நான் கேக்கேக்க கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது.ஒருவேளை அவர்களின் இடத்துப் பழக்கமோ தெரியவில்லை.எனக்குக் கேட்கக் கூச்சமாய் இருக்கு.இப்படி இருக்கா எங்கள் ஊர்களில் எங்காவது ?

பிரபா உங்களுக்குப் புதுப்பேர் வைக்கப்போகினமோ !

 
On July 26, 2009 at 7:20 AM , வர்மா said...

புசனை புருசாவா நல்ல லச்சனம்தான்
அன்புடன்
வர்மா

 
On July 26, 2009 at 8:21 AM , Anonymous said...

ஓய்!!!

ஆராள் உந்த ரெம்பிளேட்டுக்குள்ள விளையாடிக் கொண்டிருக்கிறது?

கையக் கால வச்சுக்குக் கொண்டு சும்மா இருங்கோ பாப்பம்.

-கொண்டோடி

 
On July 26, 2009 at 10:05 PM , வர்மா said...

யாரிந்த அந்நியன் முறைப்படிவாருங்கள் வரவேற்கிறோம்.
அன்புடன்
வர்மா

 
On July 28, 2009 at 6:40 PM , Anonymous said...

முறைப்படி எண்டா என்னெண்டு விளங்கேல. ஏதாவது விசா கிசா எடுத்து வரவேணுமோ?

நான் முதற்பின்னூட்டம் போட்ட அண்டைக்கு, பின்னூட்டங்கள் போட்டவர்களின் பெயர்கள் தெரியவில்லை. அதுதான் அப்பிடியொரு பின்னூட்டம் போட்டன். சிலவேளை என்ர கணனியிலதான் கோளாறாக இருக்கலாம்.

இதுக்கேனப்பா கொதிக்கிறியள்?

-கொண்டோடி

 
On July 30, 2009 at 9:04 AM , shangar said...

எனது அம்மாவின் தங்கச்சியின் பெயர் பாறுவதி. அதை சொல்லத்தெரியாமல் நான் சின்னனில் ஆறி என்று சொல்லி இப்ப வரைக்கும் அப்பிடித்தான் சொல்றன். அதுவே அவவின்பெயராய் மாறிவிட்டது. பின்பு அது ஒரு சிலருக்கு அது மருவி பாறி ஆகி விட்டது... :)