Author: soorya
•4:45 AM
அவருக்குச் சைக்கிள் ஓடத் தெரியாது.
...............................................................................................
கதை கேக்க எல்லாரும் வந்திட்டியள்.
வாங்கோ. இருங்கோ. கேளுங்கோ.
...
அப்பர் எனக்குச் சொல்லிப்போட்டார், ஊரைச்சுத்திக்காட்டு என்று.
என்னத்திலை போறது எண்டு அப்பரிட்டைக் கேட்டன்.
என்ரை சையிக்கிளை எடுத்துக்கொண்டு போவன். என்றார்.
அப்பாவா இப்படிச் சொல்லுறார்?
அவற்றை சையிக்கிளைத் தொடக்கூட விட மாட்டார், இப்ப இப்பிடிச் சொல்றார்.
ஓகே. எனக்கடிச்சுது யோகம்.
...
எடுத்தன் சைகிளை.
வந்திருக்கிற ஆளுக்கு ஒரு லெவல் அடிக்க வேணுமெல்லோ....!
bபார் க்குக் கீழால ஒரு றவுண்ட், பிறகு மேலால ஒரு றவுண்ட், பிறகு சீற்றிலை இருந்தன்.(அப்பர் கொஞ்சம் உயரம், சீற்றை உயர்த்தி வைச்சிருப்பார்)
இடது பக்கப் பெடல் உயர வரேக்கை...இடது காலால் ஒரு மிதி.
வலது பக்கம் உயரேக்கை அதிலை வலது காலால் ஒரு மிதி.
இடுப்பை இடமும் வலமுமாக அசைக்கவேணும், இல்லாட்டி இந்தக்கலை சாத்தியமில்லை.
இப்பிடிச் சைக்கிள் ஓடுறதை எங்கடை மதவடிப் பொடியள், உழுந்தரைக்கிறது எண்டு சொல்லுவாங்கள்.
பகிடி என்னெண்டா... என்ரை ஸ்ரயிலை ராக்கையாக் கவுண்டர் அதுதான் நம்ம றாக்கன் பாத்துக்கொண்டேயிருக்கிறார்.
அவருக்கு நான் செய்வதெல்லாம் ஒரு சர்க்கஸ் காரன் செய்வது போலை இருக்கு.
வாயை ஆ..ஆஆ எண்டு பிளந்துகொண்டு பாத்துக்கொண்டிருந்தார்.
அவருக்குத்தானே சைக்கிள் எண்டாலே என்னெண்டு தெரியாது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் இது சர்வ சாதாரணம் எண்டும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
என்ரை ஹீரோத்தனம்.. ஆச்சியின்(அப்பம்மா) திட்டுத் தடுக்கும்வரை தொடர்ந்தது.
..........எட கோதரி விழுவானே. கொப்பன்ரை சைக்கிளை விழுத்திப்போட்டு, அவனிட்டை எக்கணம் உரியெல்லே (தோலை உரிப்பான் என்று அர்த்தம்) வாங்கப்போறாய்...........................!

தொடரும்.................................
|
This entry was posted on 4:45 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 comments:

On July 9, 2009 at 5:57 AM , கானா பிரபா said...

அங்கம் 1 நல்லா வந்திருக்கு, கீழே சொல் விளக்கம் கொடுத்தால் இந்த மொழிவழக்கைத் தெரியாதவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

 
On July 9, 2009 at 6:32 AM , ரவி said...

கொஞ்சம் கேப் விட்டு எழுதுங்க...படிக்க சவுரியமா இருக்கும்.......

 
On July 9, 2009 at 7:19 AM , soorya said...

நன்றி கானா பிரபா.
எந்தச் சொல் என்று வாசகர்கள் கேட்குமிடத்து, விளக்கம் சொல்லலாம்.ஏனென்றால் பலருக்கு ஏற்கனவே தெரிந்த சொற்கள் பல இருக்குமல்லவா? எனினும் என்னால் முடிந்தளவு அடைப்புக்குறிக்குள் விளக்கம் கொடுக்க முனைகிறேன்.
கோதரியில் விழுவானே....
கோதாவரி என்கிற நதி பெருக்கெடுத்ததால் இந்தியாவில் நோய்பரவிப் பலர் இறந்தனராம். நோய்களுக்குப் பெயர் தெரியாத போது, கோதாரி என்று அழைத்தனராம்.
ஆட்களை ஏசும் போது கோதாரியில போறவனே..விழுவானே என்கிற பதம்
எங்களூரிலும் தொற்றிக் கொண்டது.

 
On July 9, 2009 at 11:03 AM , வந்தியத்தேவன் said...

சைக்கிள் பழகின்றது என்பது பெரியதொரு கலை. எத்தனை தரம் ரோட்டிலை விழுந்து எழுந்திருப்போம். சில விழுப்புண்கள் இன்றைக்கும் அடையாளமாக இருக்கு.

கோதாரிக்கு அளித்த விளக்கத்திற்க்கு நன்றிகள்.

 
On July 10, 2009 at 12:21 AM , சயந்தன் said...

ஆட்களை ஏசும் போது கோதாரியில போறவனே..விழுவானே என்கிற பதம்
எங்களூரிலும் தொற்றிக் கொண்டது.//

இந்த விளக்கத்தை இப்பதான் அறிந்தேன். ஆனால்.. இது தமிழ்நாட்டில பாவிக்கப்படுவதாக அறியவில்லையே..

 
On July 10, 2009 at 1:10 AM , soorya said...

சயந்தன்,
ஆட்களை ஏசும் போது கோதாரியில போறவனே..விழுவானே என்கிற பதம்
எங்களூரிலும் தொற்றிக் கொண்டது.//

இந்த விளக்கத்தை இப்பதான் அறிந்தேன். ஆனால்.. இது தமிழ்நாட்டில பாவிக்கப்படுவதாக அறியவில்லையே..||

நானும் இது தமிழ் நாட்டில் பாவிப்பதாக அறியவில்லை. அங்கிருந்து பல ஆண்டுகள் முன் இங்கு வந்திருக்கலாம். எங்களூர் என்று நான் குறிப்பிட்டது..யாழ்ப்பாணத்திலுள்ள வலிகாமப் பகுதியை.
நன்றி.

 
On July 10, 2009 at 5:59 AM , யசோதா.பத்மநாதன் said...

:) தொடருங்கள்.

குறுக்கால போவானே என்றும் பேசும் வழக்கம் தமிழர் மத்தியில் இருந்ததல்லவா?

மலையகப் பேச்சு வழக்கும் வருமா?

 
On July 10, 2009 at 6:15 AM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...

குறுக்கால போவானே என்றும் பேசும் வழக்கம் தமிழர் மத்தியில் இருந்ததல்லவா?//

இதெல்லாம் திட்டுகின்ற வார்த்தைகள் குறுக்கால போவான் துலையிலை போவான், கட்டைலே போவான் என நிறைய உண்டு. வசை சொற்களே பிரதேசத்திற்க்கு பிரதேசம் வேறுபடுகின்றன.

 
On July 10, 2009 at 9:56 AM , soorya said...

மணிமேகலா said...
:) தொடருங்கள்.

குறுக்கால போவானே என்றும் பேசும் வழக்கம் தமிழர் மத்தியில் இருந்ததல்லவா?

மலையகப் பேச்சு வழக்கும் வருமா?

...
வரும் வரும்,
பொறுமையா இருங்கோ.
இப்பதானே..சைக்கிள் ஓடத் தொடங்கிறன்.

 
On July 10, 2009 at 6:07 PM , யசோதா.பத்மநாதன் said...

:)
சரி, சரி!

 
On July 15, 2009 at 11:55 AM , M.Rishan Shareef said...

சில சொற்களுக்கான விளக்கங்களைக் கீழே குறிப்பிடுங்கள் சூர்யா. புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும் !

 
On July 15, 2009 at 8:46 PM , Vasanthan said...

கோதாரி என்பது தமிழகத் தமிழருக்கு விளங்குவதில்லை என்பது உண்மையே. நானும் அச்சொல் தமிழகத்தில் பயனப்பாட்டிலில்லை என்றே நினைத்திருந்தேன் சிலமாதங்கள் முன்புவரை. வலைப்பதிவில் தமிழகப் பதிவர் ஒருவர் கோதாரி என்ற சொல்லுக்கான விளக்கத்தை அளித்திருந்தார். அதில் அச்சொல் தங்கள் ஊரில் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

பதிவரின் பெயர் ஞாபகமில்லை. (பழமைபேசி??)

 
On July 15, 2009 at 8:56 PM , Vasanthan said...

நான் சிறுவயதிலேயே சைக்கிள் ஓடக்கற்றுக் கொண்டுவிட்டேன். அப்போது ROMA அரைச்சைக்கிள் ஒன்று வைத்திருந்தேன்.

ரெண்டு கையையும் விட்டிட்டு ஓடுறது, பின்பக்கமாக ஓடுறது எண்டதுகளைக்கூடச் செய்தன். ஆனா உந்த பாருக்குக் கீழால ஓடுறது இண்டைவரைக்கும் எனக்குச் சரிவரேல.

 
On July 15, 2009 at 8:58 PM , Vasanthan said...

சைக்கிள் பற்றி நான் 2004 இல நட்சத்திரக் கிழமையில எழுதின ஓரிடுகை
சைக்கிள் கும்பல்..