Author: வர்மா
•2:04 AM
எனது அம்மம்மா அடிக்கடி சொல்லும் வசனம் "கறி புளி முப்பத்திரண்டும் முடிஞ்சுபோச்சு". அந்த முப்பத்துரண்டுமென்னவென்று எனக்குத்தெரியாது. அம்மம்மாவை ஊரில் உள்ள உறவினர்கள் எல்லோரும் அப்புஅம்மா என்றுதான் அழைப்பார்கள்.நாங்களும் அவரை அப்புஅம்மா என்றுதான் கூப்பிடுவோம்..அயலவர்கள் மருந்தாச்சி என்பார்கள். அம்மாவின் தகப்பன் வைத்தியர். இதுபரம்பரைத்தொழில்.

அப்புஅம்மாசொல்லும் முப்பத்திரண்டும் முடிஞ்சுபோச்சு என்பதை அம்மாவும் அடிக்கடி சொல்வார். முப்பத்திரண்டும் என்னவென்று அம்மாவைக்கேட்டேன்.அம்மா சரியானபதில் சொல்லவில்லை.அப்புஅம்மாவிடம் கேட்டேன். அப்புஅம்மாசொன்னபதிலை நம்பமுடியவில்லை இப்படியும் இருக்குமா என்றசந்தேகம் மனதைக்குடைந்தது.

அம்மாவின் தகப்பனை உறவினர்கள் அப்பு என்பார்கள். நாங்களளும் அப்பு என்றே கூப்பிடுவோம். அயலவர்கள் மருந்தப்பு என்பார்கள். அவருடையபெயர் சிலம்பு என்பது பலருக்குத்தெரியாது.

ஜனனம் மரணம் இரண்டையும் நாடிபிடித்து சொல்லிவிடுவார்.நாடியைப்பிடித்து நோயைசொல்லிவிடுவார்.நோயாளியின் கையைப்பிடித்து அவர் இரண்டு நாள் தவணை சொன்னால் கொழும்பில் உள்ள உறவினர்களூக்கு தந்தி அடித்துவிடுவார்கள். சிலநோயளிகளைப்பார்த்து அவர் எதுவும் பேசாமல் போவார் அப்போது உறவினர்கள்மருந்தப்பு ஒண்டும் பற‌யாமல் போறியள் எனபார்கள்.அவர் ஒண்டும் பேசாதுபோனால் காரியத்தைப் பார்க்கவேண்டியதுதான்.

அப்புவுடன் சோர்ந்து இருந்ததனால் அப்புஅம்மாவும் அங்கீகரிக்கப்படாத வைத்தியரானார்.
முப்பத்திரண்டும் என்றால் குசினியில் உள்ள மஞ்சள்,மிளகு.வெந்தயம்,சீரகம் உள்ளி,வெங்காயம்,பெருங்காயம் போன்றவற்றுடன் நோய்தீர்க்கும் சில மரக்கறிகள்என அப்புஅம்மா கூறியதை சிறு வயதில் நான் நம்பவில்லை.

சுமார் 10 வருடங்களுக்குமுன்னர் கிச்சன் கிளினிக் எனும் கட்டுரை கல்கி சஞ்சிகையில் பிரசுரமானது. இலகுவாககிடைக்கக்கூடியஇயற்கைமூலிகள் 64 உள்ளன. அவற்றில் 32 எமது வீட்டுசமையறையில் உள்ளனஎன கல்கியில் படித்தபின்புதான் அப்புஅம்மாவைப்பற்றிபூரணமாக அறியமுடிந்தது.

தங்கச்சியும் மனிசியும் முப்பத்திரண்டும் முடிஞ்சு போச்சு எண்டு சொல்லத்தொடங்கிட்டினம்.

நாடி...................மணிக்கட்டில் உள்ள இரத்தம் ஓடும் நரம்பு
தவணை...............நோயாளி உயிருடனிருக்கும் காலம்.
தந்தி அடிப்பது..........உறவினர் சாகப்போகிறா என்ற அறிவிப்பு
பறயாமல்..............எதுவும் சொல்லாது
காரியம்................இறுதிக்கிரிகைக்கான எற்பாடு
குசினி/அடுப்படி ..................சமயலறை
This entry was posted on 2:04 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On July 4, 2009 at 3:21 AM , Muruganandan M.K. said...

சுவார்ஸ்மான பதிவு. ரசித்தேன்.

 
On July 4, 2009 at 4:36 AM , கானா பிரபா said...

வணக்கம் வர்மா

முதல் பதிவு சிறப்பாகவும் ரசிக்கத்தக்கதாகவும் இருந்தது. மிக்க நன்றி

 
On July 4, 2009 at 5:06 AM , வந்தியத்தேவன் said...

சாப்பாடு போய் இப்போ வைத்தியமா? கலக்கலாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.

 
On July 4, 2009 at 5:56 AM , யசோதா.பத்மநாதன் said...

வருக நண்பரே!

வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கங்கள்.

ஈழத்தவரின் கை வைத்திய முறைகள் உங்களுக்கும் தெரிந்திருக்குமோ?:)

அந்த 32 பொருட்களும் எவை என்று தெரிந்தால் சமையலறையில் கிளினிக் வைத்து நாங்களும் ஸ்பெஷலிஸ்ட் ஆயிடலாம்:)

 
On July 4, 2009 at 7:16 AM , வாசுகி said...

வர்மா,
ஒரு துறையையும் விட்டு வைக்கிறதாய் இல்லை போல.
அந்த காலத்தில் வைத்தியம் படிக்காமலே நிறைய வைத்தியம் பார்த்திருக்கிறார்கள்.
கலக்கல் பதிவு.

மணி ஆச்சி உங்களுக்கும் கை வைத்தியம் தெரிந்திருக்குமே.

 
On July 4, 2009 at 8:14 AM , சினேகிதி said...

நாடி பிடித்துப் பார்க்கிறது பிறகு தொய்வு பார்க்கிறதெண்டும் ஒன்டிருக்கல்லா?? தண்ணியெல்லாம் தெளிச்சு கை விரல்ல எல்லாம் ஏதோ அபிநயம் பிடிக்கிறமாதிரி :)

 
On July 4, 2009 at 9:33 AM , வலசு - வேலணை said...

நல்லவொரு பதிவு.
அப்படியே சுளுக்கெடுக்கறதுக்கு காலால பிறந்தவையிட்ட போறதைப் பற்றியும் எழுதுங்கோ

 
On July 5, 2009 at 7:29 AM , வர்மா said...

எனது வைத்தியக்குறிப்பைபடித்த வைத்தியகலாநிதிக்கு நன்றி.முதல் பந்தில் சிக்சர் அடித்தால்தான் எதிபார்ப்புகூடும் கானாபிரபா.வந்தியத்தேவனுக்கு இதுசுவாரஸ்யமாம்.அந்த32மூலிகைகளையும் தேடுகிறேன்மணிமேகலா.வாசுகியை இப்போதுதான் சந்திக்கிறேன் என்னை பல்தறை வித்தகரென்கிறார்.சினேகிதி.வலசு ‍வேலணை ஆகியோரின் வைத்தியக்குறிப்புகள்பற்றியும் கேள்விப்பட்டேன் விபரம் தெரியாது
அன்புடன் வர்மா

 
On July 6, 2009 at 1:39 AM , Vasanthan said...

அப்படியே 'பார்வை பார்க்கிறது' பற்றியும் யாராவது எழுதுங்களேன்.

 
On July 6, 2009 at 5:17 AM , சுந்தரா said...

முன்னெல்லாம் தமிழ்நாட்டுச் சமையலறைகளில் அஞ்சறைப்பெட்டின்னு ஒண்ணு கட்டாயம் இருக்கும். அதில மிளகு சீரகம், வெந்தயம், மஞ்சள்,பெருங்காயம்னு சமையலுக்கான அத்தியாவசியப்பொருட்களை வைத்திருப்பாங்க. அஞ்சறைப்பெட்டிக்குள்ளயே அத்தனை வியாதிக்கும் வைத்தியம் உண்டுன்னு அம்மாச்சி சொல்ல்க்கேட்டிருக்கிறேன்.

சிறப்பான பதிவுக்கு நன்றி வர்மா.

 
On July 9, 2009 at 6:56 AM , வர்மா said...

அஞ்சறைப்பெட்டியை சீதனமாகவும் கொடுப்பார்களாம்
அன்புடன் வர்மா