•8:06 PM
சின்ன வயசில கட்டாயம் எல்லாரும் குழப்படி செய்திருப்பம்.செய்த ஒவ்வொரு குழப்படிக்கும் முறையா வாங்கிக் கட்டியிருப்பம்.அடி வாங்கி அழுதழுது கண்ணு மூக்கெல்லாம் சிவந்து சாப்பிடாமலெல்லாம் நித்திரையாயிருப்பம் பிறகு அன்றைக்கு இரவு அடி விழுற மாதிரி கனவு கண்டு திரும்ப விக்கி விக்கி அழுது போட்டு படுத்திருப்பம்.அடுத்தடுத்த நாள் நடந்த மண்டகப்படியெல்லாம் மறந்து அம்மாவாவோடய அப்பாவோடய செல்லம் கொஞ்சியிருப்பம்.இதெல்லாம் ஒரு பத்து பதினொரு வயசு வரைக்கும் தான் பிறகு அடியெல்லாம் விழாது. நான் என்னென்ன குழப்படி செய்து எப்பிடியெல்லாம் அடி வாங்கினான் என்று சொல்றன் நீங்களும் சொல்லோணும் என்ன.
அப்ப எனக்கொரு மூன்று வயசிருக்கும்.அம்மாவும் அப்பாவும் வீட்ட இல்லை நானும் அக்காவும் அம்ம்மா வீட்டதான் நின்டனாங்கள்.அம்மாவும் அப்பாவும் வீட்ட வந்திட்டினம் அம்மம்மா சாய்மனைக் கட்டில்ல தடியோட இருக்க நானும் அக்காவும் ஹ_ட்வாசல்ல முழுசிக் கொண்டிருக்கிறம்.அம்மா வந்ததுதான் தாமதம் அம்மம்மா போட்டுக்குடுக்கத் தொடங்கிட்டா.
அம்மம்மா: பிள்ளை இஞ்ச வந்து பார் உன்ர பெட்டையள் இரண்டும் என்ன செய்திருக்குதுகள் என்று.
அம்மா: என்ன இண்டைக்கு ஆற்ற ஆட்டுக்குட்டிக்கு பல்லு மினுக்கினதுகள்?
அம்மம்மா: அதில்லை இன்டைக்கு இரண்டும் சம்பல் இடிச்சு வைச்சிருக்குதுகள்.என்ன சம்பல் தெரியுமே? புவுண் சம்பல்.
அம்மா:என்னம்மா? புவுண் சம்பலோ?
அம்மம்மா:அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து காப்பு சிமிக்கி எல்லாத்தையும் கழட்டி உரலுக்கை போட்டு இடிச்சு வைச்சிருக்குதுகள்.
உரலுக்கு நசிஞ்சு போய்க் கிடந்த எல்லாத்தையும் அம்மம்மா எடுத்துக் கொண்டு வந்து காட்டினா அவ்வளவும் தான் தெரியும் அடுத்த நிமிசம் புக்கத்தில நின்ற செவ்வரத்தையை முறிச்சு இரண்டு பேருக்கும் நல்ல வெளுவை.
அடுத்த திருவிழா ஒரு புpறந்த நாள் விழாக்குப் போட்டு வந்த இரவு நடந்தது.வீட்டுக்குள்ள வரும்வரைக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை.அப்பா நல்லாத்தான் கதைச்சுக் கொண்டு வந்தவர்.வீட்டுக்குள்ள வந்த உடன கதிரைல தூக்கி இருத்தினார்.இருத்திப்போட்டு பிரம்பு எடுத்துக்கொண்டு வந்தார்.
அப்பா:இரண்டு பேரும் கையை நீட்டுங்கோ.
நானும் அக்காவும் : ஏனப்பா நாங்கள் ஒரு குழப்படியும் செய்யேல்லயே.
அப்பா: கைய நீட்டைச் சொன்னான்.
இரண்டு பேருக்கும் மூன்று மூன்றடி.
அப்பா: எத்தினாள் சொன்னான் உடைஞ்ச பலூனை வைச்சு விளையாட வேண்டாம்.முட்டை விட வேண்டாம் என்று.பிரவீனாக்கு பலூன் துண்டு தொண்டைல ஒட்டி என்ன நடந்தது என்று தெரியும் தானே.இனிம பலுனைக் கண்டாலே இந்த அடிதான் ஞாபகம் வரோணும்.
ஒரு நாள் நாங்கள் பக்கத்து வீட்டு பிள்ளையள் எல்லாரும் சேர்ந்து உக்கிப் போன மண்ணெண்ணை பரலுக்கு மேல உருண்டு விளையாடினாங்கள்.பரலில படுத்துக்கொண்டு காலால உருட்டினா இது உருளும்.எத்தின பேர் இந்த விளையாட்டு விட்டிருப்பியள்.அதில கிடந்த ஒரு உக்கின இரும்புத் துண்டு அக்காக்கு குத்தி இரத்தம் வந்திட்டுது.டாக்குத்தர் மாமாட்ட போய் மருந்தெல்லாம் போட்டிட்டு வந்திட்டு இரண்டு பேருக்கும் விளாசல் தான்.
பிறகொருநாள் அக்கா நெல்லி மரத்தில ஏறி நின்டுகொண்டு நெல்லிக்காய் ஆய்ஞ்சு போட போட நான் கீழ நின்று பொறுக்கிக் கொண்டு நிண்டனான்.அக்கா ஒருநாள் நான் அங்கர் மா களவெடுத்து சாப்பிட்டத அம்மாட்ட கோள்மூட்டிட்டா அந்தக் கோவத்தில சும்மா அவாவை வெருட்டுறதுக்காக அக்கா நீ நிக்கிற கொப்புக்குப் பின்னால கோடாலிப் பாம்பு நிக்குது என்று ஒரு பொய்யைச் சொன்னன்.அவா பயத்தில பலன்ஸ் இல்லாம தொபுக்கடீர் என்று விழுந்திட்டா.பெரிய உயரம் இல்லை நெல்லி மரம் ஆனால் விழுந்த இடத்தில இருந்த கல்லு உள்ளங்கையில குத்திட்டுது அவாக்கு.அன்டைக்கும் எனக்கு பூசைதான்.
இன்னொருநாள் உப்பிடித்தான் கோயில் திருவிழா நெரிசல்ல "அம்மா அப்பான்ர சைக்கிள் டைனமோவைக் களவெடுத்தது இந்த மாமா தான " என்று நான் கத்திட்டன்.அவருக்கு ஒரு மாதிரிப் போட்டுது.அம்மாக்கு ஏன்தான் என்னை கோயிலுக்குக் கூட்டிக் கொண்டுவந்தம் என்று ஆயிடுச்சு. என்னைக்.கோயிலுக்குள்ள கூட்டிக்கொண்டே போய் இறுக்கி நுள்ளி விட்டா.
இன்னும் நிறைய சளார் பளார் சடீர் எல்லாம் இருக்கு.ஆனால் இனிம நீங்கள் சொல்றதைக் கேப்பம்..நான் நிப்பாட்டுறன் நீங்கள் உங்கட வண்டவாளங்களை தண்டவாளம் ஏத்துங்கோ.
------------------------------------------------------------------------------
வண்டவாளம் - குறும்புத்தனங்கள்
வாங்கிக் கட்டுதல் - தண்டனை பெறுதல்
மண்டகப் படி - தண்டனைகள்
சாய்மனைக் கட்டில்- படுக்கத் தக்க கதிரை
தலைவாசல் - பிரதான வாசல்
முழுசிக் கொண்டிருத்தல் - என்ன செய்வது என்று தெரியாதிருத்தல்
பெட்டையள் - பெண்கள்
பவுண் - பொன்
உக்கிப் போன - இற்றுப் போன
டாக்குத்தர் - வைத்தியர்
விளாசல் - அடித்தல்
கோள் மூட்டுதல் - (சம்பந்தப் பட்டவருக்குத் தெரியாமல்)முறையிடுதல்/ குற்றம் சாட்டுதல்
நுள்ளுதல் - கிள்ளுதல்
நிப்பாட்டுதல் - நிறுத்துதல்
* நன்றி மணியாச்சி*

11 comments:
வாசித்துக்கொண்டே விழுந்து விழுந்து சிரித்தேன். உங்கள் ஏனைய பதிவுகளிலே ஓரளவு தெரிந்துவிட்டது பிள்ளை சரியான குழப்படியெண்டு. ஆனால் இவ்வளவு குழப்படி என்பது இப்போதான் தெரிகிறது.
உடைந்த பலூன் ஊதுகிற பிரச்சனை எல்லோருக்கும் இருக்கு.
என்ரை வண்டவாளங்களை நேரம் கிடைத்தால் எழுதுகிறேன். பள்ளிக்கூட நாட்களில் கொஞ்சம் குழப்படி மற்றும்படி நான் ரொம்ப நல்லவன்.
:)நீங்கள் மட்டும் தான் பவுன் சம்பல் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
எனக்கு வயது போட்டுது பிள்ள. பெருசா ஒண்டும் ஞாபகம் இல்லை.ஞாபகம் இருக்கிற ஒண்டு ரெண்டச் சொல்லுறன்.ஆனா அத வண்டவாளம் எண்டு சொல்லேலா.
என் தங்கை சின்னவளாக இருந்த போது அடிக்கடி வயிற்றுக் குத்து வரும்.நானென்ன செய்வேன் என்றால் என்னிடம் இருக்கும் கலர் பென்சில்,வோட்டக் கலர், வண்ணக் கடதாசிகள்,பென்சில் பெட்டி(அப்போது இவை எல்லாம் இழக்க முடியாத பெரும் பொக்கிஷங்கள்)... இவை போன்றவற்றைக் கொடுத்துவிட்டு 'இப்பவும் உங்களுக்கு வயித்துக் குத்துதா' என்று கேட்பேன்.அவளும் 'இல்லை' என்பாள்.அப்ப இனி வயித்துக் குத்து வந்தா கேளுங்கோ என்பேன்.அவளும் ஓம் என்பாள்.அதற்குப் பிறகு எனக்கு நின்மதியாக இருக்கும்.
உலகம் கொண்டாடுகிற ஒரு தினத்தில் என் பிறந்த நாள் வரும்.என் சித்தி குடும்பத்தினர் கட்டாயம் கேக்கோடு வருவார்கள்.அன்றய நாள் முழுக்க நான் கோழிக் கூட்டருகே காவலிருப்பேன்.எதற்கும் அசைய மாட்டேன்.எனக்குத் தெரியும் ஒரு கோழியின் உயிர் அன்று பறி போகும் என்று.என்னை மீறி பிறகு அது அடுத்த வீட்டிலிருந்து வந்து சேரும்.
வாய் பேசாத ஜீவன்கள் மீது எனக்கிருக்கிற அதீத பாசத்திற்கான காரணம் ஏனென்று தெரியவில்லை.சில வேளை அடுத்த பிறவியில் ஒரு மிருகமாகப் பிறக்கப் போகிறேனோ தெரியவில்லை.
:)
பிள்ள கவனிச்சனியே?உன்ர பதிவில கனக்க பிரதேச வழக்குச் சொல்லுகள் இருக்கடி மோன.அதுகளுக்கும் விளக்கம் போட்டிருந்தியெண்டா நல்லா இருந்திருக்கும். நான் எழுதி விடட்டே?
வண்டவாளம் - குறும்புத்தனங்கள்
வாங்கிக் கட்டுதல் - தண்டனை பெறுதல்
மண்டகப் படி - தண்டனைகள்
சாய்மனைக் கட்டில்- படுக்கத் தக்க கதிரை
தலைவாசல் - பிரதான வாசல்
முழுசிக் கொண்டிருத்தல் - என்ன செய்வது என்று தெரியாதிருத்தல்
பெட்டையள் - பெண்கள்
பவுண் - பொன்
உக்கிப் போன - இற்றுப் போன
டாக்குத்தர் - வைத்தியர்
விளாசல் - அடித்தல்
கோள் மூட்டுதல் - (சம்பந்தப் பட்டவருக்குத் தெரியாமல்)முறையிடுதல்/ குற்றம் சாட்டுதல்
நுள்ளுதல் - கிள்ளுதல்
நிப்பாட்டுதல் - நிறுத்துதல்
சிநேகிதி,
பவுணில நீங்கள் மட்டும் தான் சம்பல் செய்திருப்பீங்கள் என்று நினைக்கிறேன்.உங்கட பவுண் சம்பல் கதை வாசிக்கும் போது எனக்கு பத்திரிகையில படித்த செய்தி ஒன்று தான் நினைவு வருகிறது.
பள்ளிக்கூடத்தில ஆசிரியர் 'மயில்' படம் ஒட்டிக்கொண்டு வரச்சொல்ல
ஒரு பிள்ளை, எங்கட நாட்டு 1000 ரூபா தாளில மயிலின்ட படம் இருக்கெல்லே,
அதில 10 தாளை வீட்டில களவெடுத்து (??) மயிலின்ட படத்தை வெட்டி ஒட்டி காட்டினவாவாம்.
( நீங்களெல்லாரும் ஒரே குறூப்பாக இருக்குமோ????)
ஆசிரியர்கள் அதிர்ச்சியாகி தகப்பனிடம் விசயத்தை சொல்ல, அவர் பிள்ளையின் அறிவை சொல்லி பெருமைப்பட்டாராம்.
எப்பிடித்தான் வீட்டில உங்கள சமாளிச்சாங்களோ?
அப்ப குழப்படி செய்ததாலதான் இப்ப நல்ல பிள்ளையா (?) இருக்கிறன்.
வந்தியத்தேவன் இன்னும் நேரம் கிடைக்கலையோ ?
மணியாச்சி வாய் பேசாத ஜீவன்கள் மேல உங்களுக்கு அவ்வளவு பாசமா??
எனக்கு கோழியிறைச்சிக்கறி சரியான விருப்பம் :(.
உலகம் கொண்டாடுற தினமா?? கிறிஸ்மஸ்?
சொல்விளக்கத்துக்கு மெத்த நன்றி மணியாச்சி...
வாசுகி...1000 தாளை பிள்ளை கண்ணில படுற மாதிரி ஏன் வைப்பான்:) ரொம்பப் பணக்காரர் போல :)
என்னை எங்க சமாளிச்சவை :) நான்தான் அவையை சமாளிச்சனான்.
அது சரி பிள்ளை கடும் குளப்படி போல கிடக்கு கனடா என்ன பாடுபடுகுதோ ஆருக்கு தெரியும்?
:))
//சினேகிதி said...
அப்ப குழப்படி செய்ததாலதான் இப்ப நல்ல பிள்ளையா (?) இருக்கிறன்.//
இதை பிறகுதான் படிச்சன்,நம்பிட்டன்.
:)
// மணிமேகலா said...
உலகம் கொண்டாடுகிற ஒரு தினத்தில் என் பிறந்த நாள் வரும்//
//சினேகிதி said...
உலகம் கொண்டாடுற தினமா?? கிறிஸ்மஸ்?//
இல்லை மணியாச்சி பிறந்தது ஏப்ரல் முதலாந்திகதி அன்று ஹிஹிஹி. (ஆச்சியோடை பகிடி விடாமல் யாரோடை விடுகிறது)
:)
பிறந்த நாள உங்கட கற்பனைக்கே விட்டு விடுறன்.:)
பிள்ள, வந்தி சும்மா ஆச்சிய இழுத்து விட்டிட்டுத் தான் தப்பப் பாக்கிறான்.விட்டிடாதயடி பிள்ள.