Author: சினேகிதி
•8:16 AM


உண்மையா எனக்கு குதியம் குத்துதல் என்றால் என்னென்டு தெரியாது ஆனால் இந்தச் சொல் எங்கட வீட்டில அடிக்கடி பாவிக்கப்படும். அதுவும் குறிப்பா அப்பம்மா வந்தாப்பிறகு இப்படியான நிறையச் சொற்கள் அப்ப அப்ப பாவிக்கப்படும்.

யாராவது நண்பர்கள் வந்து உருப்படியா ஒன்டும் செய்யாமால் சும்மா இருந்து அலட்டினால் அல்லது விளையாடிக்கொண்டு இருக்கும்போது....யாரும் கூப்பிட்டு என்னவும் வேலை செய்யச்சொல்லி அதைச் செய்யாமல் விட்டால் அதுக்குப் பேச்சு அல்லது அடி விழேக்க சும்மா எந்தநேரமும் குதியம் குத்திக்கொண்டிருக்கிறது சொல்வழி கேக்கிறேல்ல என்று சொல்லுவினம். இல்லாட்டா குதியம் குத்தினது காணும் முகத்த கழுவிட்டு படியுங்கோ என்று சொல்லியும் விளையாட்டை முடிக்காட்டால் மிச்சம் வரும் "இப்ப வந்தனென்டால் தடி முறியும்".

அதேமாதிரி ஒழுங்காப்படிச்சும் பரீட்சைல கோட்டைவிட்டால் குதியம் குத்துற நேரத்தில ஒழுங்காப்படிச்சிருக்கலாம் என்டுவினம்.

இந்த அர்த்தங்களை வைச்சுப் பார்க்கும்போது வெட்டியாய் இருக்கிறதுதான் குதியம் குத்துதல் என்று நினைக்கிறன்...நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?

இதப்போல எனக்கு விளங்காத சொற்கள்:
சித்தப்பா சில நேரம்

வல்லியகாந்தர்
ஜம்புலிங்கம்
பம்புடிசிங்க

இப்பிடியெல்லாம் சொல்றவர் ஆனால் இவையெல்லாம் யார் என்று அவருக்கும் தெரியா எனக்கும் தெரியா.

பி.கு : நான் இங்க வந்து குதியம் குத்தினது பிடிக்காமல் இது எழுதிக்கொண்டிருந்த குறையில current cut ஆகிட்டுதுதுதுது. நான் வேலைல வந்திருந்து குதியம் குத்தினாலும் வீட்டுக்குத் தகவல் போகுது போல இருக்கு.
This entry was posted on 8:16 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

22 comments:

On July 2, 2009 at 8:32 AM , வந்தியத்தேவன் said...

ஆகா சினேகிதி நீங்களும் குதியன்(ம்) குத்திய ஆளோ. சில இடங்களில் குதியன் எனவும் சொல்றவை. பம்பிடிசிங்கி கே.டானியலின் பஞ்சமர் நாவலில் வருகின்ற ஒரு பாத்திரம் என நினைக்கின்றேன்.

 
On July 2, 2009 at 8:43 AM , தமிழன்-கறுப்பி... said...

:)

 
On July 2, 2009 at 8:47 AM , தமிழன்-கறுப்பி... said...

ஆஹா..


நாங்களெல்லாம் கடுமையா குதியன் குத்தித்தான், இப்ப போறதுக்கு இடமில்லாத இடத்தில இப்படி இணையத்துல குந்திக்கொண்டிருக்க வேண்டியிருக்கு...

:)

 
On July 2, 2009 at 8:49 AM , சினேகிதி said...

ஓ அப்ப குதியன் என்டா சொல்றது....குதியன் என்டால் நெல் சம்பந்தப்பட்ட சொல் தானே??

இன்னும் நிறையச் சொற்கள் இருக்கு ஆனால் உடனே ஞாபகம் வராதாம் இனி ஞாபகம் வரேக்க எழுதி வைக்கோணும்.

 
On July 2, 2009 at 9:48 AM , சி தயாளன் said...

இப்ப தான் கேள்விப்படுகிறேன் :-)

 
On July 2, 2009 at 9:55 AM , Jeyapalan said...

குதியம் குத்துதல் = being hyper
அதீத குழப்படி, அட்டகாசம், மிகைப் படுத்தப்பட்ட உடல் சார் செயற்பாடுகள்.

 
On July 2, 2009 at 9:58 AM , சந்தனமுல்லை said...

சுவாரசியமான இடுகை சிநேகிதி! படமும் மிகுந்த சுவாரசியமாக இருக்கிறது!

 
On July 2, 2009 at 10:08 AM , Mathuvathanan Mounasamy / cowboymathu said...

எங்கட அம்மாவும் பாவிக்கிறவா...

ஆனா சின்னப்புள்ளைகளுக்குத்தான் பாவிக்கிறவா..

சின்னப்பிள்ளைகள் சேர்ந்து விளையாடி களைச்சு வந்தா சொல்லுவா "பார்.. குதியன் குத்திப்போட்டு வந்து நிக்குதுகள்" எண்டு..

உங்கட பதிவின் தலையங்கத்தைப் பாத்தவுடன ஏதோ ஒரு அன்னியோன்னியம்... :D

 
On July 2, 2009 at 12:40 PM , சினேகிதி said...

\\நாங்களெல்லாம் கடுமையா குதியன் குத்தித்தான், இப்ப போறதுக்கு இடமில்லாத இடத்தில இப்படி இணையத்துல குந்திக்கொண்டிருக்க வேண்டியிருக்கு...\\

ம் அப்ப இணையத்தில இருந்துமட்டும் என்ன செய்றீங்கிளாம் :)

 
On July 2, 2009 at 12:41 PM , சினேகிதி said...

\\குதியம் குத்துதல் = being hyper
அதீத குழப்படி, அட்டகாசம், மிகைப் படுத்தப்பட்ட உடல் சார் செயற்பாடுகள்.\\

நன்றி செயபால்.

 
On July 2, 2009 at 12:42 PM , சினேகிதி said...

\\சுவாரசியமான இடுகை சிநேகிதி! படமும் மிகுந்த சுவாரசியமாக இருக்கிறது!\\

நலமா முல்லை கனகாலத்துக்குப்பிறகு :)

\\இப்ப தான் கேள்விப்படுகிறேன் :-)\\

நம்புறன்.

 
On July 2, 2009 at 12:46 PM , சினேகிதி said...

\\எங்கட அம்மாவும் பாவிக்கிறவா...

ஆனா சின்னப்புள்ளைகளுக்குத்தான் பாவிக்கிறவா..
சின்னப்பிள்ளைகள் சேர்ந்து விளையாடி களைச்சு வந்தா சொல்லுவா "பார்.. குதியன் குத்திப்போட்டு வந்து நிக்குதுகள்" எண்டு..

உங்கட பதிவின் தலையங்கத்தைப் பாத்தவுடன ஏதோ ஒரு அன்னியோன்னியம்... :D
\\

எங்களுக்கும் சின்னப்பிள்ளையிலதான் நடுக இந்தப்பேச்சு விழும் ஆனால் இப்பவும் எப்பவாவது இருந்திட்டு " சும்மா உதில இருந்து குதியம் குத்துறதுக்கு ஏதாவது உருப்படியா செய்யலாம் " என்று இப்பவும் கேக்கலாம்.

குதியம் குத்தின எல்லாருக்கும் இந்தப்பதிவு அன்னியோன்னியமாத்தானிருக்கும்:)

 
On July 2, 2009 at 6:40 PM , வி. ஜெ. சந்திரன் said...

குதியம் ? குதியன் குத்துற எண்டு தான் எங்களூரில் சொல்லுவார்கள்..........

 
On July 2, 2009 at 7:53 PM , யசோதா.பத்மநாதன் said...

ஊருக்கே என்னை கொண்டு போட்டாய் பிள்ள.

நீ வலு விண்ணியெணை!

 
On July 2, 2009 at 8:24 PM , வாசுகி said...

எங்கள் வீட்டிலும் பாவிக்கப்படும் சொல். குதியம் குத்துதல் என்று தான்.
நல்ல இடுகை

 
On July 3, 2009 at 6:44 AM , வலசு - வேலணை said...

நல்ல பதிவு.

இப்போது தான் கேள்விப்படுகிறேன்

 
On July 3, 2009 at 7:40 AM , கலை said...

ஆகா! இந்தச் சொல் எனது மகளுக்கும், எனது அப்பாவுக்குமிடையில் அடிக்கடி வரும் வார்த்தை. தாத்தா பேத்தியிடம் கேட்பார், 'குதியம் குத்தலாமோ' என்று. அதன் அர்த்தம் குழந்தைப் பிள்ளைகள் நிறைய விளையாடுறது. செயபால் சொல்லியிருப்பதுதான் சரியென்று நினைக்கிறேன். அப்பாக்கும், குழந்தைகளுடன் குதியன் குத்துறது மிகப் பிடித்த விடயம்தான். மகள் நினைத்துக் கொண்டிருந்தது, தாத்தாவின் வயிற்றில் ஏறி இருந்து குதிக்கிறதுதான் குதியன் குத்துறது என்று :).

 
On July 3, 2009 at 8:18 AM , சினேகிதி said...

\\குதியம் ? குதியன் குத்துற எண்டு தான் எங்களூரில் சொல்லுவார்கள்..........\\

குதியன் என்டுதான் வந்தியத்தேவனும் சொல்றார்...நான்தான் மாறி விளங்கிட்டனோ தெரியா.

 
On July 3, 2009 at 8:19 AM , சினேகிதி said...

\\ஊருக்கே என்னை கொண்டு போட்டாய் பிள்ள.

நீ வலு விண்ணியெணை!\\

ஓமணை உன்ர பேத்தியா இருந்தால் விண்ணிக்கு விண்ணியாத்தானே இருப்பன் :)

 
On July 3, 2009 at 8:23 AM , சினேகிதி said...

நன்றி வாசுகி & வலசு - வேலணை.

\\தாத்தா பேத்தியிடம் கேட்பார், 'குதியம் குத்தலாமோ' என்று. அதன் அர்த்தம் குழந்தைப் பிள்ளைகள் நிறைய விளையாடுறது. செயபால் சொல்லியிருப்பதுதான் சரியென்று நினைக்கிறேன். அப்பாக்கும், குழந்தைகளுடன் குதியன் குத்துறது மிகப் பிடித்த விடயம்தான். மகள் நினைத்துக் கொண்டிருந்தது, தாத்தாவின் வயிற்றில் ஏறி இருந்து குதிக்கிறதுதான் குதியன் குத்துறது என்று :).\\

கலையக்கா அப்ப அஞ்சலி நல்லாக் குத்து விட்டிருக்கிறாவா உங்கட அப்பாக்கு :) அதுவும் ஆக்கள் வாறதால இனி ஒரே குதியன் குத்தல்தான் உங்கட வீட்டில :) ஆக்கள் பத்தாட்டா சொல்லுங்கோ.

 
On July 6, 2009 at 6:25 AM , Vasanthan said...

அந்த மூண்டு பேரில ஜம்புலிங்கத்தாரை எனக்குத் தெரியும். அனேகமான யாழ்ப்பாணத்தாருக்கும் (குறிப்பா வலிகாமத்தார்?) தெரிஞ்சிருக்கும்.

ஆனா மற்ற ரெண்டு பேரும் எனக்கும் புதுசுதான்.

ஜம்புலிங்கத்தாரைப் போல 'அரையர்' எண்டொராளும் நல்ல பிரபலம். அரையர் வன்னியிலதான் அதிக பிரபலமெண்டு நினைக்கிறேன்.

"குதியன்"தான் சரியெண்டு நினைக்கிறேன்.

 
On July 6, 2009 at 11:56 AM , சினேகிதி said...

\\அந்த மூண்டு பேரில ஜம்புலிங்கத்தாரை எனக்குத் தெரியும். அனேகமான யாழ்ப்பாணத்தாருக்கும் (குறிப்பா வலிகாமத்தார்?) தெரிஞ்சிருக்கும்.
\\

அப்ப உண்மையாவே அப்பிடி ஒராள் இருந்தவரா?? எங்கட வீட்ட அம்மா அப்பா அப்பம்மா சித்தப்பாவை மாமாவை எல்லாரும் பாவிக்கிறi அந்தப் பெயர்களை...ஆமா ஜம்புலிங்கத்தார் என்னத்தில பிரபலமான ஆள்?