•4:15 AM
பதிவர் சகோதரி மணிமேகலா சொன்னது போல ஒரு பெரிய கலியாண வீட்டைச் செய்த திருப்தியோடு தமிழ்மண நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறது எமது ஈழத்து முற்றம். கடந்த வாரம் முழுவதுமே எமது குழும அங்கத்தவர்களது பதிவுகளாக மொத்தம் 18 பதிவுகளை நட்சத்திர வாரப்பதிவுகளாகக் கொடுத்திருந்தோம். தனிப் பதிவராக நான் உட்பட இந்த நட்சத்திர வாரத்தில் பங்கேற்ற சக பதிவர்கள் ஒருசிலரும் நட்சத்திர வார அனுபவங்களைப் பெற்றிருந்தாலும், முழுமையான ஒரு குழுமப்பதிவில் ஒவ்வொருவருடைய சிந்தனைகளும் பரந்து பட்ட அனுபவங்களுமாகத் திரட்டிய இந்த அனுபவம் எங்கள் எல்லோருக்குமே புதியது. அதற்காக எம்மை நட்சத்திர வாரத்தில் பங்கேற்கச் செய்த தமிழ்மணம் குழுவுக்கும், இந்த நட்சத்திர வாரத்தில் பங்களித்த சக உறவுகளுக்க்கும், பின்னூட்ட மட்டுறத்தலோடு அவ்வப்போது ஆலோசனைகளைத் தந்துதவிய சக மட்டறுத்துனர் வந்தியத்தேவன் மற்றும் சினேகிதி, ஈழத்து முற்றத்துக்கான இலச்சினை வடிவமைப்புக்கு உதவிய மயூநாதன், எம்மை ஊக்கப்படுத்திப் பதிவுகளை வாசித்தோர், பின்னூட்டியோர் எல்லோருக்கும் இனிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்புடன்
கானா பிரபா
(ஈழத்து முற்றம் குழும வலைப்பதிவர்கள் சார்பில்)
ஈழத்து முற்றம் தமிழ்மண நட்சத்திர வாரப்பதிவுகள்
நட்சத்திர வாரத்தில் ஈழத்து முற்றம்
அல்வாயில் ஒரு மழைக்காலம் - சினேகிதி
என் ஜன்னலின் சினேகிதி - ரிஷான் ஷெரீப்
மட்டக்களப்புச் சொற்கள் - விசரன்
கணவன்/கணணி/வீடு. - ஹேமா
பொங்கல்/ வளந்து வைத்தல், உரு ஆட்டம் - வி.ஜெ.சந்திரன்
கொழும்பிலிருந்து வன்னியூடாக யாழ்ப்பாணம் - மணிமேகலா
கப்பலேறிப்போனோம் கசங்கிப்போய் வந்தோம் - வடலியூரான்
கொண்டல்மரமே! - ந.குணபாலன்
எங்கடை ஊர் உலகக்கோப்பை - வந்தியதேவன்
ஊரும் பெயரும் - வர்மா
ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு - மாயா
எக்சியூஸ் மீ உதவ முடியுமா? - சின்னக்குட்டி
ஈழத்துச் சதன் - சுபாங்கன்
பண்டிதர் க.சச்சிதானந்தன். - தமிழன் - கறுப்பி
நிர்ப்பந்திக்கப்பட்டவைகள். - ஹேமா
புனிதப் பூமி ரட்சிக்கப்பட்ட பாவி - விசரன்
சைக்கிள் ஓடப் பழகின கதை - வடலியூரான்
படலைகள்: - சங்கடப் படலை - மணிமேகலா
2 comments:
ஈழத்து வாழ்க்கை பற்றி நிறைய புதிய தகவல்களை அறிய முடிந்தது. சில அனுபவங்கள் இளமைக் கால நினைவுகளைத் தூண்டின.
நன்றி - சொ.சங்கரபாண்டி
பல கட்டுரைகள் சிந்திக்க வைத்தன. குறிப்பாக, ஈழத்துப் பேச்சு வழக்கு, மட்டக் கிளப்புச் சொற்கள் போன்ற கட்டுரைகள் மிக நன்றாய் இருந்தன.