80களில் பல்வேறு கலைகளும் சிறந்து வளர்ந்திருந்த ஈழத்தமிழ் மண்ணில் பல கலைஞர்கள் எம் மண்ணை வலம் வந்தார்கள். அப்படி மிளிர்ந்த சில கலைஞர்களில் நகைச்சுவைக் கலைஞர்கள் எனும் போது என்றும் மறக்கமுடியாதவர்கள் டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன் ஆகியோராவார்.
ஈழத்தின் பலபாகங்களிலும், மேடைநிகழ்ச்சிகள் மூலமும், வானொலி மூலமும், இலங்கையில் தயாரான வாடைக்காற்று திரைப்படம் , அதன்பின் ஒலி நாடாவினாலும், மக்களைச் சென்றடைந்து சிரிக்க வைத்தார்கள்;. ஆயினும் இக்கலைஞர்களின் கலைவடிவங்கள் காலவோட்டத்தில் இல்லாது போனது. எனினும் ஆங்காங்கே கிடைத்தவற்றைக்கொண்டு ஒரு முழு ஒலித்தொகுப்பாக உங்கள் முன் பகிர்கிறேன்.
மாயா
உசாத்துணை
4 comments:
:)). டிங்கிரி சிவகுரு தாயகத் தமிழின் சொத்து!
பகிர்ந்து கொண்ட மாயாவுக்கு நன்றி.கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தை கொடுப்பது தான் கொஞ்சம் கஸ்டம். ஆறுதலாக ஒரு முறை மீண்டும் வர வேண்டும்.
எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்த்த ஒரு சமூகம்!!
நட்சத்திரவானில் ஈழத்து முற்றத்தில் fire works கேட்கவும் பார்க்கவும் கண்கொளாக் காட்சியாக இருக்கிறது.
அண்ணே டிங்கிரி-சிவகுருவின் சிற் வயது முதல் ரசிகன் நான்.. நான் நினைக்கிறேன் 1988 ம் ஆண்டு முதல் இந்த தொகுப்புக்களை கேட்டிருக்கிறேன்..மனசின் கவலை களை மறக்க வைக்கும் சம்பாஷணைகள்..இன்னும் கசெட் வீட்டில் இருக்கிறது...இதனை எனது நண்பர்களுக்காக எனது வலைப்பூவிலும் பதிவாக போட விரும்புகிறேன்.. உங்கள் அனுமதி தேவை.. நன்றி....
இந்த பதிவைப் பார்த்திட்டு நேற்று 'டிங்கிரி- சிவகுரு' வும் , 'அண்ணை றைற்' உம் கேட்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் மனம் விட்டு சிரித்தேன். நன்றி.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இப்படி எத்தனை எத்தனையை ஆவணப்டுத்தாமல் விட்டிருக்கிறோமோ?