•4:35 PM
அப்பத்தான் அவன் ஏற வேண்டிய பஸ் பஸ் நிலையத்தை விட்டு கிளம்பியது. நகர்ந்து கொண்டிருந்தாலும் பின்னால் ஓடி தொங்கி புட்போர்ட்டில் ஏற முயன்றான். முடியவில்லை இவனுக்கு பேப்பே காட்டி விட்டு தூரத்தில் போய் கொண்டிருந்தது.
அந்த டவுன் பஸ் நிலையத்தில்.. மற்ற இடங்களுக்கு போக வேண்டிய பிரிவுகளில் எல்லாம் கியூ நிரம்பி வழிந்தது. ஆக்களை இறக்கிய சுமைகளினால் ஆறுதல் எடுக்கும் பஸ்களுமாயும். சுமை தாங்க முடியாமால் நகர முடியாமால் நகரும் பஸ்களுமாயும் நிறைந்த கியு வரிசை சனங்களுமாயும் தீடிரென காணாமால் போன மாதிரியும் நிமிடத்துக்கு நிமிடம் அந்த இடம் வெவ்வேறு வடிவம் எடுத்து கொண்டிருந்தது.
கியூ வரிசையில் முதலாவதாக. இவனுக்கு பின்னால் ஓரிருவர்.. இப்பத்தான் வந்திருக்கோணும்
அடுத்த பஸ் எத்தனைக்கு வரும்
யாருக்கு தெரியும்.. பின்னால் உரையாடல் தொடங்கிறது . தொடரும் பஸ் வரும் வரையும் பொழுது போகும்
பொழுது போக மறுத்தது..இவனுக்கு.தூரத்தில் தியேட்டர் ஆள் உயர கட் அவுட்டில் எம்ஜிஆர் கை தூக்கியபடி சிரித்து கொண்டிருந்தார்.அழுது அழுது களைத்து குரல் அடைச்சது போல நிலைய விளம்பர வானொலி அணுங்கியண்டு இருந்தது. எதுவுமே ஒட்டவில்லை.
நேர் எதிரான மற்ற பகுதி கியூவரிசை பகுதியில் குழந்தையை நுள்ளி நுள்ளி அழ வைத்துக்கொண்டு இடுப்பில் வைத்து ஒரு பிச்சைக்காரி வரிசையில் நின்ற ஒவ் வொருவருடன் பிச்சை கேட்டு கொண்டிருந்தாள். அவளுடன் போட்டி போடுவது போல இருந்தது. பின்னால் ஊண்டு கோலுடன் ஒற்றை காலுடனான ஒரு பிச்சை காரனும் அனுதாபத்தை தேடி கொண்டிருந்தான் ..
அந்த பக்கமும் பார்க்க பிடிக்கவில்லை..
இப்பொழுது சிரிப்பு சத்தமும் இரைச்சலும் கூடி இருந்தது.
கடிகாரத்தை பார்த்தான் .அலுவலகம் முடிந்த நேரம் பள்ளிக்கூடம் முடிந்த நேரம். ஆண்களும் பெண்களும் பொடியளும் பெட்டையளுமாய் பஸ் நிலையத்தை நிறைத்து கொண்டிருந்தனர். இவனது கியூவிலும் நிறைய சனம் இப்ப. இவனுக்கு பின்ன நின்ற இருவரும் இப்ப நல்ல அந்நியோன்னியமாகி விட்டார்கள்
இப்ப அவனுக்கு நல்லாக பொழுது போகிறது .
சட்டை கொலரை சரி செய்து கொண்டான் தலை மயிரைகோதிகொண்டு பொக்கட்டிலிருந்து கைக்குட்டையால் முகத்தை வியர்வை இருக்கோ இல்லையோ துடைத்து கொண்டு கடை கண்ணால் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று நோட்டம் இட்டு கொண்டிருந்தான் .
உண்மையாக கவனிக்கினமோ கவனிக்க இல்லையோ கவனிக்கினம் என்ற பிரமையுடன் முகத்தில் ஒரு புன்னகை ததும்பும் பொம்மை மாதிரி கஸ்டபட்டு உருவெடுத்து கொண்டிருந்தான்
பிச்சை எடுக்கும் பெண்ணும் முடவனும் இவனது கியூ பக்கம் வந்து விட்டார்கள். அதுகளும் ஒவ்வருதராக இரந்து கொண்டிருக்குதுகள். சிலர் கொடுத்தனர் சிலர் வேண்டா வெறுப்பாக கொடுத்தனர் சிலர் அரியண்டம் தாங்கமால் தூர போகட்டும் என்று கொடுத்தனர் ,சினந்து கொண்டனர், எந்த வித. சலனம் இன்றி முகத்தை வைத்து கொண்டிருந்தனர். முகத்தை திருப்பி எங்கையோ பார்ப்பது போல் வைத்து கொண்டிருந்தனர்
இப்படி பல விதமாக. அதுகளுக்கு இது புதுசான விடயம் இல்லை.நாளந்தம் நடக்கும் வழக்கமான விசயம் தானே. ஆனால் ஏதோ விசயத்துக்காக எப்பவாது வரும் நகரத்து நகர பஸ் ஸ்டாண்டு வருபவர்களுக்கு மட்டும் பார்ப்பதுக்கு புதிதாக இருக்கும்
இவனும் அடிக்கடி டவுனுக்கு வருபவனுமல்ல அதற்க்கான அவசியம் இருக்க இல்லை. இவனுக்கும் எல்லாம் புதிதாகத்தான் இருந்து. இந்த நவ நாகரிக மயக்கமும் மயங்குதலும் உட்பட..
பார்க்க பிடிக்காத விடயம் அருகில் வந்து விட்டது
ஜயா பிச்சை போடுங்கோ
இவனிடம் தான் இரந்தாள்
பொக்கற்றை துழாவினான் ஏதாவது சில்லறை அகப்படுதா என்று
அந்த நோட்டு தான் தட்டு பட்டது.. அதுவும் வழிக்கு வழி சொல்லி தாய் சொல்லி விட்டது எதிரொலித்தது. மாத்தமால் கொண்டா ... மாறின காசு .டவுனுக்கு போற படியால் கை காவலாய் தான் உதை தாறன் எண்டது.
மீண்டும் தேடினான் தட்டுபட்டது சில்லறை.ஆருக்கு தெரியுது தெரியுதோ இல்லையோ உதுகளுக்கு பண வீக்கத்தை பற்றி நல்லா தெரியும் திட்டு தான் வேண்டிவரும். இதை போட்டால். பிச்சைகாரர் வேண்டாத பிரயோசன படாதா சில்லறையை ஏன் அரசாங்கம் அச்சடிக்கினம் நினைத்து கொண்டான்
பிச்சை போடாமால் விட்டது இயலாமால் போனதுக்கு பல காரணங்களை தனக்கு தானே கூறி சமதானம் கூறி கொண்டான்
இவன் மனதின் சமதானம்களை அறியாதவளான பிச்சைகாரி ஒருதரை மட்டும் திட்டாதவள் திட்டி விட்டு அடுத்தவரிடம் சென்றாள்.
இவனுக்கு அவமானமாய் இருந்தது எல்லோரும் அவனை பார்ப்பது மாதிரியும். சிரிப்பது மாதிரியும் இருந்தது
இவனது பிரமை
அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனை அவர்கள் அவர்களின் சிந்தனையில் இருந்தார்கள்
இந்த அவமான பிரமையில் இருந்து இன்னும் மீளவில்லை இவ்வளவு நேரம் பஸ் வருகையை நினைக்காதவன் .காணவில்லை என மீண்டும் கடிகாரத்தை பார்த்தான்.
வழமையான நேரத்து வர வேண்டிய இந்த பஸ் கூட இன்று லேட் என ஒலிபெருக்கியில் அலறியது ஒரு கர கரத்த குரல்
நடுத்தர வயது என்றோ ஆக வயது குறைந்த வயது என்று சொல்ல முடியாது அவளை. அழகாக உடுத்திருந்தாள் அக்கால லேட்டஸ்ட் சாறி ஹை ஹீல்ஸ் சப்பாத்து எல்லாம் போட்டிருந்தாள். அவளை பெரிய அழகியாக சொல்ல விட்டாலும் இன்னொரு முறை திரும்ப பார்க்க கூடியவள் மாதிரி என்று சொல்லலாம்.
குடும்ப பெண் போல இருந்தாள் குடும்ப பெண்ணை போல பாவனை செய்தாள் குடும்ப பெண்ணை போல பாவனை செய்யலமா. உண்மையில் குடும்ப பெண்ணை போல இருப்பது என்பதும் பாவனை தானே.
மலிவான சென்ட் வாசனை அந்த கியூ வரிசை பகுதியில் வீசியது
அக்காத்தை இண்டைக்கு லேட்டா வாறா என்றான் கியூவில் நின்ற நெட்டையான ஒருவன் பக்கத்திலுள்ளவனிடம்
. அவள் கியூவிலுள்ளவர்களிடம் சிலரிடம் நாகரிகமாக பேசினாள் சிலரிடம் பேசவில்லை. சிலரை அவளை தாண்டு பொழுது அவர்கள் நமுட்டு சிரிப்பு கொண்டார்கள்.
வழமையாக ஒரே பல்லவியை தான் பாடுவாள் ஒரே பிரச்சனையை தான் சொல்லுவாள்.. சில வேளை வழமையாக வாறவர்களிடம் மறந்து போய் இதே பல்லவியை பாடும் பொழுது ஏச்சும் திட்டும் வேண்டுவாள்... அவளுக்கு உது புதிசல்ல.
வழமையான விடயம் தானே அவளின் தொழில் தந்திரத்தில் நஸ்டபக்கம் மட்டுமே . புதிசா வருபவர்களின் அவளின் ஜம்பம் பலிக்கும் பொழுது இலாபம் என நினைத்து கொள்வாள்
இவனை பார்த்து புன்னகத்தாள்
சோர்ந்து போய் மனதில் இருந்தவனுக்கு உற்சாக பானம் போல இருந்தது
பின்னுக்கு திரும்பி பார்த்தான் தன்னை தானோ நம்பிக்கை இன்றி
இப்பொழுது வாயை திறந்து முத்து பல்லு தெரிய அழகு நகை காட்டினாள்
தன்னைத்தான் உறுதிசெய்து கொண்டு பதிலுக்கு சிரித்தான்
கேள்வி பட்டிருக்கிறான். ஆனால் நகரத்து மயக்கம் இவ்வளவு விரைவில் அனுபவமாகும் என்று நினைக்கவில்லை
அவனருகில் வந்து எக்சியூஸ்மீ என்றாள் . அந்த சொல் மட்டும் நுனி நாக்கில் விளையாடியது தமிழை துண்டாக்கி முறித்தி நெளித்து ஸ்டைலாக கதைத்தாள்
இவனும் சிரிக்க சிரிக்க பேசி கொண்டிருந்தான் இப்பொழுது பஸ் வரக்கூடாது இன்னும் லேட்டாக வேணும் என்று நினைத்து கொண்டான்
அவளும் வழமையாக எல்லாரும் சொல்ல வேண்டிய கதையை சொல்லி தன் ஹான்ட் பாக் இலிருந்து பணத்தை பிக்பொக்கட் அடித்து விட்டார்கள் திரும்பி ஊருக்கு போறதுக்கு டிக்கட்டுக்கு பணம் இல்லாமால் கஸ்ட படுவதாகவும் உதவி செய்ய முடியுமா என உடம்பை சிறிது வளைத்து நெளித்து நாகரிகமாக கேட்டாள்
பொக்கற்றை தூளாவினான் அந்த தாள் காசு தான் தட்டுபட்டது .தாய் சொன்னது ஞாபகம் வந்தாலும் எத்தகைய சமாதானம் வரமாலும் தனக்கு சொல்லாமலும் தூக்கி கொடுத்தான்
இப்பொழுது கியுவிலை நின்ற நெட்டையன் கேலி யாக பார்த்தான். விளங்கவில்லை இவனுக்கு
தூரத்தில் எக்சியூஸ்மீ என்ற குரல் கேட்டது வேறொருவனிடம் இதே கதையை சொல்லி கொண்டிருந்தாள்
தப்ப விட்ட பஸ்ஸையும் லேட்டாய் வந்து கொண்டிருக்கின்ற பஸ்ஸையும் திட்டி தீர்த்து கொண்டிருக்கிறான்
4 comments:
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துக்கொண்டே தான் இருப்பார்கள்..
கதையை விவரித்திருக்கும் விதம் அழகாக இருக்கிறது. நல்ல நடை.
சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள். பஸ்நிலைய விவரப்பு நன்றாக இருந்தது.
படத்தில் இருப்பது யுத்த காலத்துக்கு முன்பான யாழ்ப்பாண பஸ்நிலையம் அல்லவா?
என் ஊகம் சரி என்றால் அதனைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் நன்றி.
அரிய புகைப்படம் அது.
//தப்ப விட்ட பஸ்ஸையும் லேட்டாய் வந்து கொண்டிருக்கின்ற பஸ்ஸையும் திட்டி தீர்த்து கொண்டிருக்கிறான்//
வடிவாச் சொல்லி இருக்கிறியள்.நாங்கள் போய் கல்லில கால அடிச்சுப் போட்டு ‘கல்லடிச்சுப் போட்டுது’எண்டு முறைப்படுற எங்கட குணம் உங்கட கதையில நல்லா வெளிப்பட்டிருக்கு.
நாங்கள் நிறையப் படிக்க இருக்கு போல,வாழ்க்கையில!