Author: சஞ்சயன்
•4:23 PM
பாடசாலை நாட்களில் பட்டப் பெயர்கள் பகிடிக்காய் வைக்கப்பட்டாலும் அவற்றின் பின்னால் ஏதோவொரு கதையிருக்கும். காலப்போக்கில் இந்தப் பெயர்களே நிலைத்தும் நிஜப் பெயர்கள் மறந்தும் போய் விடுகின்றன.

நினைவில் நிற்கும் பட்டப் பெயர்கள்


டக் - இவனிடம் எதைக் கேட்டாலும் ”டக்” எண்டு வாறன், ”டக்” என்ற செய்வம்” என்று கனக்க ”டக்” போடுவதால் கிடைக்கப்பட்ட பெயர் இது

டப்பி: காரணம் மறந்து விட்டது

நண்டு - முனிவன் : நண்டு மறந்து விட்டது ஆனால் ”முனிவன்” என்பது சைட் அடிக்காமல் படிப்பே தொழில் என்றிருந்ததால் வந்தது

ஊத்தை: நம்மட பெயருங்கோ... ஏதோ.. என்ட சுத்தம் தெரிந்த ஒரு பன்னி வைத்த பெயர்.. (நாசமா போவான்)

ஒழுக்கி: நோய் அல்லது பலவீனம் ஒன்றை அடிப்படையாக வைத்து வைக்கப் பட்டது. எவ்வளவு வலியை இவனுக்கு கொடுத்திருக்கிறோம் என்பதை நினைத்தால் வெட்கமாய் இருக்கிறது. மன்னித்துக்கொள் நட்பே.

வேடன்: 1983 இனக்கலவரத்தில் காணாமல் போன நண்பனின் பெயர். காரணம் மறந்துவிட்டது. வேடன் என்பது அவனது ”வேணன்” என்னும் அழகிய பெயரின் திரிபு என்று தான் ஞாபகமிருக்கிறது.

கிழவி: காரணம் மறந்து விட்டது...இன்றும் தொடர்பில் உள்ள ஒருவர்(ன்)

பூனை: அமைதியாய் தன்ட காரியத்தை கவனிக்கும் அப்பாவி

குண்டன்: காரண இடு குறிப் பெயர்

முக்கு தோண்டி: காரண இடு குறிப் பெயர்

நசுக்கி (1): நசுக்கிடாமல் தன்ட வேலையை செய்பவன்

நசுக்கி (2): மெல்லவாக குசு விடுபவன்


இப்படி உங்களுக்கும் கனக்கு பெயர் தெரிந்திருக்கும்..
எழுதுங்கவன்
|
This entry was posted on 4:23 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On October 26, 2009 at 2:32 AM , யசோதா.பத்மநாதன் said...

எங்கள் பாடசாலை பஸ் றைவருக்கு நாம் "முசுறு" என்று பெயர் வைத்திருந்தோம்.நம்மோடு துள்ளித் துள்ளி விழுவதால் அவருக்கு இந்தப் பெயர். பாவம்
:-)

 
On October 28, 2009 at 10:00 PM , கிழட்டுப்பூசாரி said...

எங்களோட படித்த நண்பன் ஒருவனுக்கு நாங்கள் வைத்த பெயர் ”குண்டிவெடி”
அவன் இப்போது இவ்வையகத்தில் இல்லை, இறைவனடி சேர்ந்து விட்டான்.

பட்டப்பெயர் காரணம்
பள்ளியில் பயிலும் காலத்தில் மதிய இடைவேளையின் போது எங்கட வகுப்பில் சக மாணவர்கள் கொண்டு வரும் சாப்பாடுகளை எல்லாம் நல்லா சாப்பிடுவான்.
இடைவேளை முடிந்தபின்பு 2.00 மணியளவில் எங்கட வகுப்பே நாற்றம் அடிக்கும் எல்லோரும் இவனையே திரும்பி பார்ப்பார்கள் என்றால் நீங்களே யோசியுங்கோவன்.