•3:33 AM

திடீரென்று ஒரு நாள் நந்தனா வழக்கத்துக்கு மாறாக அதீத நவநாகரீகம் கொண்ட உடுப்பை அணிந்து தன் தாய் காமாட்சிக்கு முன் வந்து நின்றாள்.
"ஐயோ பண்டிதர் பரமசிவத்தாற்றை மேள் இப்படி அரைகுறையா வருகுதே எண்டு சனம் நாக்கு வழைக்கப் போகுது " என்று காமாட்சி பதறினார்.
மேலே சொன்ன கற்பனைச் சம்பவத்தில் மேற்கோள் இடப்பட்ட "நாக்கு வழைத்தல்" என்பது ஈழத்துப் பேச்சு வழக்கில் இன்னொரு சொல்லாகப் புழங்குகின்றது.
ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக இன்னொருவர் பேசுவதைப் புறணி பேசுதல் என்போம். ஆனால் இங்கே நாக்கு வழைத்தல் என்பது புறணி பேசுவது என்பதற்கு சற்று வேறுபாடாக நக்கல் பண்ணுவார்கள் என்பதற்கு மிக நெருங்கிய அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது.
எனவே நாக்கு வழைத்தல் என்பது ஒருவரது குணாம்சம், நடை உடை பாவனையில் ஏதேனும் குறையைக் கண்டு பிடித்து இன்னொருவர் அல்லது ஊரார் எள்ளி நகையாடுவது என அமைந்திருக்கும்.
"நாக்கு வழைத்தல்" என்பதை உங்கள் ஊரில் எப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள் என அறிய ஆவல்.
4 comments:
Sorry for English. I think that is "Naakku valaiththal" not " Naakku valiththal".
வணக்கம் அபிமான்
நீங்கள் சொல்வதே சரி, நாக்கு வழைத்தல் என்பதே பயன்பாட்டில் உள்ள சொல், திருத்த உதவியமைக்கு மிக்க நன்றி
பிரபா அண்ணா... நாக்கு வளிக்கிறது என்றும் இதைச் சொல்லிறவை எண்டு எனக்கு ஞாபகம்
வணக்கம் கிருத்திகன்
நாக்கு வழிக்கப் போகினம் என்றும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். நாக்கு வழைத்தல் என்றால் ஏளனமாக நாக்கை வழைத்துப் பேசுவதால் வந்ததோ என்னவோ ;)