Author: geevanathy
•9:54 PM
(கும்பம்)

விஜயதசமியன்று திருகோணமலையில் நடைபெறும் கும்பவிழா சிறப்பானதாகும்.அன்று இங்குள்ள ஆலயங்களில் கும்பங்கள் , கரகங்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அன்றிரவு முழுவதும் வீதிவலம் வருவது வழமையாகும்.


'கும்பம்' பெரிய செப்புக்குடத்தில் வேப்பம் பத்திரத்தினால் அகலமான அடித்தளம் அமைக்கப்பட்டு ,தேவையான உயரத்திற்குத் தேர்போல பூக்களாலும், வர்ணக்காகிதத்தாலும் அலங்கரித்துக் கட்டப்படுகிறது. கும்பத்தின் அடிப்பாகம் அகன்றும் மேலேசெல்லச்செல்ல ஒடுங்கியும் செல்லும்.


கும்பம், கரகம் என்பவற்றைத் தாங்கி வருபவர்களுடன் ராஜமேளம் அடிப்பவர்களும்,உடுக்கடித்து காவியங்கள் ,காவடிச் சிந்துகள் பாடுபவர்களும், பக்தர்களும் வருவார்கள்.


ஒவ்வொரு ஆலயங்களிலும் இருந்தும் புறப்படும் கும்பங்கள் மற்ற ஆலயங்களுக்குச் சென்று தரிசித்துவிட்டு புறப்பட்ட இடத்தைச் சென்றடைவதுடன் இவ்விழா நிறைவுபெறும். இதன்போது பக்கதர்கள் தம் வீட்டுவாசலில் நிறைகுடம் வைத்து கும்பத்தினை வரவேற்பர்.

படங்கள் - (NOKIA N70)
28.09.2009

Share/Save/Bookmark



This entry was posted on 9:54 PM and is filed under , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On October 22, 2009 at 10:04 AM , Anonymous said...

maNNin maNam vIsukiRathu

 
On October 22, 2009 at 11:22 AM , thiyaa said...

பார்க்க மட்டும்தான் முடியும்
போக முடியாதே

 
On October 22, 2009 at 11:43 AM , Unknown said...

இத்தால் சகலரும் அறிவது ஜீவராஜ் அண்ணாவிடம் நோக்கியா N70 phone இருக்கு....:))

படத்தோட சேர்ந்து பதிவும் அழகு

 
On October 23, 2009 at 5:23 AM , சி தயாளன் said...

படங்கள், தகவல் தொகுப்பு அனைத்துக்கும் அருமை...

 
On October 26, 2009 at 2:55 AM , யசோதா.பத்மநாதன் said...

புதிய தகவல், அழகான படங்கள். பகிர்வுக்கு நன்றி.

என்ன காரணத்துக்காக இவ்வாறு நடை பெறுகிறது?