•8:16 PM
கொங்குதேர்
வாழ்க்கை அரசரத்தும்பி
காமஞ்செப்பாது,
கண்டது மொழிமோ
பயிரிய
கெழி இய நட்பின் மயிலியல்
செறி யெற்று சரிவை கூந்தலின்
நரியவும்
உளவோ நீ அறியும் பூவே
இது குறுந்தொகை என்றசங்கப்பாடலில்
இடம் பெற்றுள்ளது. இதனை எழுதியவர் இறையனார்
எனக்கருதப்படுகிறது.
மேற்கண்ட
பாடலின் சொல் விளக்கத்தை இவ்வாறு
கூறலாம்.
கொங்குதேர்
வாழ்க்கைத்தேனைத் தேர்ந்தெடுத்து சுவைக்கும் அழகான சிறகுகளை உடைய
தும்பிபோல எதனையும் தேர்ந்தெடுத்து ஆராய வேண்டும்.
காமஞ் செய்யாது கண்டது விருப்பு வெறுப்பற்ற
விதத்தில் கூறுவாயோ
பயரிய - -- பயிலுதல்
கெழிய - --இறுக்கமான
மயிலியல்-
மயில் போன்ற சாயல்
அரிவை
-- பெண்
கூந்தலிலும் பார்க்க
நறியவும்- நறுமணம்
கலந்த
நீஅறிந்த
பூக்களிலும் பார்க்க நறுமணம் உண்டோ?
கே.எஸ்.சிவகுமாரன்
சுடர் ஒளி
21/01/14
2 comments:
சங்க காலத்து வாழ்க்கை முத்துகள் செறிந்த கடல். மகாசமுத்திரம்.
இதனைப் பார்த்த போது கோபாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் படிப்பித்த மகாலிங்க சிவம் அவர்களுடய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
ஈழத்து முற்றத்திற்கும் அது பொருத்தமாய் இருக்கும்.
ஒரு தடவை இவர் காளிதாசரின் சாகுந்தலம் படிப்பித்துக் கொண்டிருந்த போது ஓர் ஆசிரியமாணவர் தான் பரீட்சையில் சித்தி எய்தும் பொருட்டு புதிய ஒரு இலக்கியச் செய்யுள் சொல்லுமாறு கேட்க இவர் உடனே இயற்றிச் சொன்னதாம் என (அவர் ஆசுகவி) பண்டிதமணி கணபதிப்பிள்ளை ‘இலக்கிய வழியில்’ சொல்கிறார்.
சந்தர்ப்பம்: சகுந்தலை ஆசிரமத்திலிருந்து கணவனிடம் செல்ல விடைகேட்டு நின்ற போது.
“மங்கையிவள் செல்லும் வழியில் நறுந்தருக்கள்
நிழல் செய்து மலிக; மற்றும்
பொங்குமணல் தாமரையின் பொலந்தாது
போற்பொலிக; புனித வாவி
எங்குமலர்ந் திலங்கிடுக; மந்தமா
ருதம் வீச, இனியதோகை
யுங்குயிலுந் துணையாக, அறுதொடர்கண்
உகரம்போல் உறுக தூரம்!
- ஆசுகவி. மஹாலிங்கசிவம்.
பகிர்வுக்கு நன்றி.
மணிமேகலா.
தங்கள் வருகைக்கும் புதிய தகவலுக்கும் நன்றி
அன்புடன் வர்மா