Author: தமிழ் மதுரம்
•8:01 PM
மிக மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் மெல்பேண் அப்புக்குட்டி என்னுடன் ஒரு ஒலிப்பதிவில் இணைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மிக மிக பிசியா, வேலைப் பளுவின் மத்தியில் ஓடியாடித் திரிந்த எங்கடை அப்புக்குட்டியைத் தேடிப் பிடித்து வந்து ஒரு குரல் பதிவினைச் செய்திருக்கிறேன்.




இது ஈழத்து முற்றம் வலைப் பதிவிற்காகச் செய்யப்பட்ட ஒரு சிறப்பு ஒலிப்பதிவு என்று கூறலாம். இந்தக் குரல் பதிவில் ஈழம் சம்பந்தமான நிறைய விடயங்களை அலசாது விட்டாலும் ஒரு சில விடயங்களை அலசியிருக்கிறோம் என்றே கூறலாம். எந்தவித ஆயத்தமும் இல்லாது திடீரென அப்புக் குட்டியைக் கண்டவுடன் செய்யப்பட்ட ஒலிப்பதிவு என்பதால் ஏற்கனவே ஈழத்து முற்றத்தில் வந்திருந்த தகவல்களும், பதிவுகளும் மீண்டும் வருகிறது என நினைக்கிறேன். அதற்காக அனைத்து வாசகர்களும் பொறுத்தருள்வீர்கள் என்று கருதுகிறேன்.




இந்தக் குரல் பதிவு பற்றிய உங்களது ஆக்க பூர்வமான விமர்சனங்களையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம். ஒரு சில இடங்களில் ஒலித் தெளிவின்மையும் காணப்படுகின்றது. யாவரும் பொறுத்தருள்வீர்கள் என்று நம்புகிறோம்.


குரல் பதிவினைக் கேட்க..

Get this widget | Track details | eSnips Social DNA




உங்கள் ஆதரவிற்கு நன்றிகளோடு, கமல் & அப்புக் குட்டி அன்கோ.



ஈழத்து முற்றம் இன்று இருநூறு பதிவுகள் என்கின்ற இலக்கினை எட்டியிருக்கின்றதென்றால் அதற்கான பிரதான காரணகர்த்தாக்காளாக விளங்குபவர்கள் எங்களது வாசகர்கள் ஆவார்கள். வாசகர்களின் ஊக்கத்திற்கும், சளைக்காது ஈழம் சம்பந்தமான பலதரப்பட்ட பதிவுகளையும், தகவல்களையும் தேடி எடுத்துப் பதிவேற்றும் எங்கள் சக வலைப்பதிவர்களுக்கும், மற்றும் அனைவருக்கும், எங்களோடு கைகோர்த்துப் பயணிக்கும் ஈழத்து முற்றப் பதிவர்களுக்கும் ஈழத்து முற்றத்தின் கடைக் குட்டி எனும் வகையில் என்சார்பாகவும், ஏனைய எங்களின் அன்பு உள்ளங்கள் சார்ப்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



தொடர்ந்தும் வாங்கோ...! உங்கள் பேராதரவைத் தாங்கோ!
This entry was posted on 8:01 PM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments:

On May 4, 2010 at 5:54 AM , தாருகாசினி said...

வித்தியாசமான ஒரு பதிவு....அப்புக்குட்டியின் பேட்டியினை மிகவும் ரசித்தேன்....இலங்கை வானொலிகளில் சுப்புக்குட்டி என்று இருந்தவர் மெல்பேர்னுக்கு வந்தவுடன அப்புக்குட்டியா மாறிட்டார் போல...;)

இருநூறு பதிவுகள் இல்லை இருநூறாயிரம் பதிவுகள் காணவேண்டும் எங்கள் ஈழத்து முற்றம்...

 
On May 4, 2010 at 6:13 AM , தமிழ் மதுரம் said...

வாங்கோ தாருகாசினி! இலங்கையில் இருந்த சுப்புக் குட்டியின் வம்சம் தான் இவரும். ஆனால் சுப்புக் குட்டி இல்லை.

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

 
On May 4, 2010 at 3:45 PM , வந்தியத்தேவன் said...

அப்புக்குட்டி நல்லாத்தான் இருக்கின்றது ஆனால் நீங்கள் உங்களைக் கடைக்குட்டி என்பது சரியாகப்படவில்லை.

 
On May 4, 2010 at 6:00 PM , யசோதா.பத்மநாதன் said...

நன்றாகச் செய்திருக்கிறீர்கள் கமல். ஒலிப்பதிவும் தரமாக இருக்கிறது.

முசுப்பாத்தி,குஞ்சியப்பு,சீனியப்பு,சீனியாச்சி,கொடி(பட்டம்),பழமொழி,அலம்புறது,முசுப்பாத்தி என்று பல ஈழத்துச் சொற்களையும் தந்திருக்கிறீர்கள்.

சுருக்கமான செறிவான பதிவு.

கேட்கின்ற வசதி இல்லாதவர்களுக்கு சற்றுச் சிரமமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

 
On May 5, 2010 at 3:14 AM , கானா பிரபா said...

ஈழத்துமுற்றம் இரட்டைச் சதம் அடித்தது பெரு மகிழ்வு. கூடவே ஈழத்தவர்கள் அநேகரை பதிவர்களாகத் திரட்டி வைத்திருக்கும் குழுமமாகவும் செயற்படுகின்ற அதேவேளை எல்லோரின் பங்களிப்பும் இருந்தாலே மாதம் 50 பதிவு வரும் என்பதில் ஐயமில்லை. அந்த எதிர்ப்பார்ப்போடு இன்னும் இருக்கிறோம். தொடர்வோம்.

 
On May 5, 2010 at 3:19 AM , பனித்துளி சங்கர் said...

இன்னும் பல எழுத்து சாதனை நிகழ்த்த என் வாழ்த்துக்கள் !

 
On May 5, 2010 at 3:19 AM , ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் :)

 
On May 5, 2010 at 3:22 AM , வந்தியத்தேவன் said...

ஓம் அண்ணை பலர் இருந்தும் தற்போது பங்களிப்பு குறைவாகவே இருக்கின்றது. அனைவரும் மீண்டும் பழைய உற்சாகத்துடன் எழுதினால் ஈழத்து முற்றம் பழைய கலகலப்பாக இருக்கும்.

 
On May 5, 2010 at 8:14 AM , தமிழ் மதுரம் said...

வந்தியத்தேவன் said...
அப்புக்குட்டி நல்லாத்தான் இருக்கின்றது ஆனால் நீங்கள் உங்களைக் கடைக்குட்டி என்பது சரியாகப்படவில்லை.//




வந்தி...நான் சின்னப் பொடியன் என்றதாலை கடைக்குட்டி என்று சொன்னன்.. இந்த வார்த்தைகள் ஏதாவது தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தால் மன்னிக்கவும்.

 
On May 5, 2010 at 8:17 AM , தமிழ் மதுரம் said...

அப்புறம்...மணிமேகலா, கானபிரபா, ஆயில்யன், பனித்துளி சங்கர் அனைவரது கருத்துக்களுக்கும், விமர்சனங்களுக்கும் நன்றிகள் நண்பர்களே!

 
On May 5, 2010 at 3:12 PM , வந்தியத்தேவன் said...

//வந்தி...நான் சின்னப் பொடியன் என்றதாலை கடைக்குட்டி என்று சொன்னன்.. இந்த வார்த்தைகள் ஏதாவது தாக்கத்தை உண்டு //பண்ணியிருந்தால் மன்னிக்கவும்.//

ஐயோ கமல் நான் சும்மா சொன்னேன் இதையெல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ளவேண்டாம்

 
On May 18, 2010 at 7:50 AM , KANA VARO said...

மத்திய கல்லூரி சோசியல் இக்கு கதைச்சது ஞாபகமோ!