Author: வர்மா
•12:10 AM
எனது மகளுக்கு ஒன்றரை வயதானபோது குடும்பத்துடன் கொழும்புக்குவந்துவிட்டேன். அப்போது எனதுசகோதரிக்கு ஒருபெண்குழந்தை பிறந்துஆறு மாதமாகியது. ஐந்துவருடங்களீன் பின்னர் சகோதரிக்கு சத்திரசிகிச்சை செய்யவேண்டியதால் சகோதரிகுடும்பத்துடன் கொழும்புக்குவந்து என்னுடன் தங்கினார்.

பிள்ளைகள் இருவரும்முதலில் சேரத்தயங்கினர்.பின்னர் பிரிக்கமுடியாதபடி இணைந்துவிட்டனர்.

ஒருநாள் இரவு ஊரைப்பற்றியும் கொழும்பு வாழ்ககையைப்பற்றியும் நாங்கள் கதைத்தோம்.அப்போதுதிடீரென சகோதரியின் மகள் வீரிட்டு அலறியபடி ஓடிப்போய் தாயைக்கட்டிப்பிடித்தார். எனதுமகள் ஏங்கியபடி எல்லோரயும்பார்த்தார்.சகோதரியின் மகளிடம் காரணம் கேட்டோம்.அழுகைகூடியதேதவிர காரணத்தை அவர் சொல்லவில்லை.என்ன நடந்ததென மகளிடம் கேட்டேன்.

"நீங்கசத்தமா கதைச்சீங்க.சந்தைமாதிரிகிடக்கெண்டா.பக்கத்துகாம்பராவிலை போயிவிளையாடுவம் எண்டுநான்சொன்னேன். உடனை அழுதா."

என்று எனதுமகள் கூறினார்.கொழும்பிலை காம்பறா<சிங்களம்> என்றால் அறை. வைத்தியசாலையில் பிரேத்தை வைக்குமிடத்தை காம்பறா என ஊரில் சொல்வார்கள்.கொழும்பில் அதனை மய்யக்காம்பறா என்பார்கள்.

எனது நண்பரொருவர் கொட்டாஞ்சேனையிலிருந்து தெஹிவளைக்கு தனதுமைத்துணருடன் போனார். நண்பனுக்கு சிங்களம் அரைகுறையாகத்தெரியும். மைத்துணருக்கு சிம்க்களம் தெரியாது. பஸ்ஸில் ஏறியதும்" தெஹிவளை தெக்காய்" என்றார் நண்பர்.மற்றவர் யாரென சிங்களத்தில் நடத்துனர் கேட்டார். "அத்தான் எக்காய். நான் எக்காய் .தெஹிவளை தெக்காய் என்று நண்பைகூறினார்.

சாப்பாட்டுக்கடை ஒன்றில் மலையாள‌ நண்னபரொருவர்சப்பிட்டுக்கொண்டிருந்தார்.பரிமாறுபவர் குழம்புவிட்டதும் மதிமதி என்றார். பரிமாறுபவர் மீண்டும் குழம்பு ஊற்றினார். மலையளநண்பர் சத்தமாக மதிமதி ந்ண்றுகத்தினார். மலையாளத்தில் மதி என்றால் போதும். சிங்களத்தில் மதி என்றால் போதாது.

இவை தொடற்பாடலை தவறாக விளங்கிக்கொண்டதால் ஏற்பட்ட குழப்பங்கள்.நாயும் பூனயு கண்டதும் சண்டைப்படுவதற்கும் தவறானதொடர்பாடல்தான் காரணம்.

நண்பனைக்கண்டதும் நாய் வாலை ஆட்டும்.இரையைக்கண்டால் பூனைவாலை ஆட்டும்.நான் உன்நண்பனென்று வாலை ஆட்டி நாய் கூறுவதை ,தன்னை இரையாக நாய் நினைப்பதாக பூனை தவறாக விள்ங்கிவிடுகிறது.

நான் உன் எதிரியல்ல நண்பன் என்று வாலை உயர்த்தி த்னது நட்பைவெளிப்படுத்துகிறது பூனை.நாய் எதிரியைக்கண்டால் வாலை உயர்த்தும்.தொடர்பாடலில் ஏற்பட்டகுழப்பத்தால் நாயும் பூனையும் சண்டையைஆரம்பித்துவிடும்.
This entry was posted on 12:10 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On October 31, 2009 at 5:50 AM , கலை said...

நாய், பூனைக்கிடையான இந்த பிழையான தொடர்பாடல் இப்போதான் அறிகிறேன். நல்ல விளக்கம்.

 
On October 31, 2009 at 6:06 AM , கானா பிரபா said...

வித்தியாசமான பதிவு , ரசித்தேன்

 
On October 31, 2009 at 9:04 AM , Subankan said...

கலக்கல் பதிவு.

 
On November 1, 2009 at 2:17 AM , வர்மா said...

புதியதகவல் எனக்கூறிய கலை,வித்தியாசமானபதிவை ரசித்த கானாபிரபா,கலக்கல் என புகழ்ந்த சுபாங்கன் ஆகியாமூவருக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா

 
On November 4, 2009 at 2:00 PM , கரவைக்குரல் said...

”மதிக்கு மதி மதி” எண்டு சொல்லிப்பாருங்கோ,முதலில் வரும் ”மதி” பெயர்,மற்றது எங்கள் தமிழில் ”மதி” அது புத்தி,
மற்ற ”மதி” சிங்களத்திலை “குறைவு” எண்டு வைச்சுக்கொள்ளுங்கோவன்,
இந்த பதிவில் எங்களுடன் படித்த மதியை கிண்டல் இப்படி பண்ணியது தான் நினைவு வந்தது

நல்ல ஒரு நடமுறைகளில் மக்கள் மொழித்தடுமாற்றத்தால் அனுபவிக்கும் ஒரு பதிவு வர்மா

இன்னும் எழுதுங்கோ

 
On November 4, 2009 at 2:05 PM , கலை said...

//”மதிக்கு மதி மதி” எண்டு சொல்லிப்பாருங்கோ,முதலில் வரும் ”மதி” பெயர்,மற்றது எங்கள் தமிழில் ”மதி” அது புத்தி,
மற்ற ”மதி” சிங்களத்திலை “குறைவு” எண்டு வைச்சுக்கொள்ளுங்கோவன்,
இந்த பதிவில் எங்களுடன் படித்த மதியை கிண்டல் இப்படி பண்ணியது தான் நினைவு வந்தது//

அட, இதுவும் நல்லாத்தான் இருக்கு. எங்கட வீட்டில 2 மதி. இனி அவையை இதைச் சொல்லி மடக்க வேண்டியதுதான் :).

 
On November 7, 2009 at 10:52 PM , vignathkumar said...

mam i apericate, admire, ur writing style in tamil in explanation style. it very good.
am proud and wonder a tamil women with this much talent in writing style.
many writers have knoladge but they to have good style.

 
On November 7, 2009 at 10:52 PM , vignathkumar said...

i heard about ur partisipation in valpari event also

 
On November 8, 2009 at 5:15 AM , வர்மா said...

கலை ,கரவைக்குரல் பாவம் மதியைத்தொந்தரவு செய்யாதீர்கள் .அப்படியே சங்கருக்கும் விக்கய்குமாருக்கும் நன்றி
அன்புடன்
வர்மா