Author: சஞ்சயன்
•4:42 AM
மறுகா, கிறுகி இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை ஒரே ஒரு இடத்தைத்தைத் தவிர...மட்டக்களப்பாரின் அழகிய மொழிநடையை நக்கலடிக்கும் போது மற்றைய திசைக்காறர் பாவிக்கும் சொற்பதங்களிவை என்பதை விட.

மறுகா என்பது பின்பு அல்லது பிறகு என்று பொருள்படுகிறது.
உதாரணமாக:
இப்ப பெயித்து மறுகா வா.. என்றால் இப்ப போய் பிறகு வா என்று அர்த்தம்.
ஒருவர் கதைக்கும் போது ம்...ம் போடாமல் மறுகா, மறுகா என்றும் சொல்வதுண்டு.. இது மேற்கொண்டு சொல் என்பதை உணர்த்தி நிற்கும் சொல்லாக இருக்குிறது இவ்விடத்தில். மற்றத் திசைக்காறர் பிறகு பிறகு என்று சொல்வது போல். :-)

கிறுகி என்பது திரும்ப, சுற்றி அல்லது சுளன்று எனறும் பொருள்படும்
உதாரணமாக:
”இதால கிறுகி அதால போ என்றால்” ”இதால திரும்பி அதால் போ” எனறும்
கிறுகாம நில் என்றால் திரும்பாமல் நில் என்றும்
தலை கிறுகுது என்றால் தலை சுற்றுகிறது என்றும்
தலை கிறுகிறுக்குது என்றாலும் தலை சுற்றுகிறது என்றம் பொருள் படுகிறது.

அன்புடன்
பட்டிக்கலோ
|
This entry was posted on 4:42 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On October 27, 2009 at 2:36 AM , கானா பிரபா said...

என்னுடன் கூடப்படித்த மட்டக்களப்பு நண்பன் சொல்வான் "மறுபடியும்" படத்தை பாலுமகேந்திரா ஈழத்துப் படமா எடுத்திருந்தா "மறுகா" என்று பெயரிட்டிருப்பார் என்று ;)

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் மறுகா என்பது இருக்கிறதா என்று தெரியவில்லை. உங்கள் ஊரின் தனித்துவமான சொற்களைத் தொடர்ந்து இப்படித் தர வேண்டுகின்றேன்.

 
On October 27, 2009 at 3:43 AM , Ramesh said...

மறுகா என்பது மறுகால் என்பதன் மருவிய சொல். அதன் அர்த்தம் இதற்குப் பின் அல்லது பிறகு என்பதாகும். கிறுகி என்பது திரும்பி என்று பொருள்.
இது தொல்காபியர் காலத்தில் பயன் படுத்திய "கா" என்ற அசை நிலை இடைச்சொல் பிரயோகம். " மட்டக்களப்பிலே ஆடவர் தோளிலுங்க் கா அரிவையர் நாவிலுங்க் கா" என்று யாழ்ப்பாண தமிழ் அறிஞர் கூறியுள்ளார்.

 
On October 27, 2009 at 10:28 AM , சஞ்சயன் said...

ரமேஸ்

" மட்டக்களப்பிலே ஆடவர் தோளிலுங்க் கா அரிவையர் நாவிலுங்க் கா" என்றால் என்ன? நான் தமிழ் இலக்கியம் படிக்காதவன். தஙவு செய்து அதன் அர்த்தம் விளக்குங்கள்.
”யாழ்ப்பாண தமிழ் அறிஞர் கூறியுள்ளார்”அறிஞர் யார்?

சஞ்சயன்

 
On October 27, 2009 at 10:28 AM , சஞ்சயன் said...
This comment has been removed by the author.
 
On October 31, 2009 at 5:19 AM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

மறுகாக் கிறுகி மடுவுக்குள உழுந்திராதிங்க...

---
//" மட்டக்களப்பிலே ஆடவர் தோளிலுங்க் கா அரிவையர் நாவிலுங்க் கா" என்றால் என்ன? //

ஆடவர் தோளில போட்டிருக்கிற துண்டு/கொண்டு திரியிற கோடாலியை (எதுவென்று நான் மறந்திட்டன்)கா என்டு சொல்லுறது. பெண்கள் வாங்ககா, இரிங்ககா என்டு பேசுவதால் அவ்ர்களின் நாவில் கா. (எஸ்.பொவின் புத்தகத்தில் பார்த்தது.)