Author: தமிழ் மதுரம்
•1:42 AM
இது ஒரு மீள் பதிவு.) ஈழத்து முற்றத்தினூடாக என்னுடைய முதற் பதிவோடு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய நவீன விஞ்ஞான தொழில் நுட்ப மாறுதல்களினூடு தமிழ் மொழியும் பல் வேறுபட்ட மாறுதல்களைக் கண்டபடி பயணித்துக் கொண்டிருக்கிறது. பல் வேறு பட்ட மொழிக் கலப்புக்களின் பயனாக எம் தமிழ் மொழியும் ஒரு கலவையாக மாறி வருவதும் குறிப்பிடத்தக்கது.



நானும் கொஞ்சம் வித்தியாசமாக நினைத்து வழக்கொழிந்து வரும் தமிழ்ச் சொற்களைப் பற்றிய பதிவை ஒரு குரல் பதிவாக போடலாம் எனும் முயற்சியில் களமிறங்கியுள்ளேன். என்னுடைய இந்தக் குரற் பதிவு முயற்சிக்குச் சக பதிவர் ஒருவரும் கை கொடுத்துளார்.

என்னோடு இணைந்து இந்தக் குரற் பதிவை உங்களுக்கு வழங்கும் அந்தச் சகோதரி யார் என்று நீங்கள் முடிந்தால் கண்டு பிடியுங்கள்???

எங்களால் முடிந்த வரை இப் பதிவைச் சுவாரஸ்யமாய் வழங்க முயன்றுள்ளோம். இக் குரல் பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களையும் எதிர் பார்க்கின்றோம்.


எனவே வாசகர்களே…! நண்பர்களே….! நிகழ்ச்சியினைக் கேட்டுப் பாருங்கள்…..! உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்…..!

இன்னும் நிறைய விடயங்களை அலசி ஆராய்ந்திருக்கலாம். நேரம் போதாமை காரணாமாகவும், உங்களைச் சலிப்படையச் செய்யக் கூடாது என்பதற்காகவும் மிகவும் சுருக்கமாக எமது குரல் பதிவைத் தயாரித்துள்ளோம்.

strong>
Get this widget | Track details | eSnips Social DNA
|
This entry was posted on 1:42 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On October 15, 2009 at 3:07 AM , வந்தியத்தேவன் said...

பண்டிதர் பரந்தாமன் எங்கள் பாடசாலை(ஹாட்லிக் கல்லூரி) தமிழ் ஆசிரியர். நல்லதொரு உரையாடல் அந்தப் பெண் பதிவர் எங்கடை மணியக்கா அல்லது தமிழ்நதி. சினேகிதியினதோ தூயாவினதோ குரல் அல்ல.

 
On October 15, 2009 at 3:19 PM , Unknown said...

ஒரு கவளம் வேறை ஒரு கோப்பை வேற... கவளம் எண்டதுக்காக கோப்பை எண்டது பயன்படுகிறது என்பது சரியா தெரியேல்லை

 
On October 16, 2009 at 12:46 AM , கலை said...

ஒரு கவளம் என்பது ஒரு பிடி அல்லது ஒரு உருண்டை என்ற அர்த்தத்தில் பாவிக்கப்பட்டதென நினைக்கிறன்.

இரவில சோறு நிறைய மிச்சமிருந்தா, சோறு கறி எல்லாம் சேர்த்து ஒரு குழையல் குழைச்சு, நிலாமுற்றத்தில இருந்து அம்மா உருட்டி உருட்டி கையில் தர எல்லாரும் சுத்தி இருந்து வாங்கிச் சாப்பிட்டது நினைவில் வருகுது. அதெல்லாம் ஒரு கனாக் காலம் :(.

அப்படி ஒரு உருண்டையாக இருப்பத்தைத்தான் கவளம் எண்டு சொல்லுறதெண்டு நினைக்கிறன். ஒரு கோப்பை சோறு, கோப்பையில ஒருக்கா போடுற சோறு.

 
On October 16, 2009 at 12:48 AM , கலை said...

உங்கட ஒலிப்பதிவில “கலையிட்டத்தான் காதலைப் பற்றி கேக்கோணும்” எண்டு சொல்ல, ‘என்னடா இது, என்னட்டையா' எண்டு ஒரு கணம் யோசிச்சன். பிறகு அது வேற கலையா இருக்குமென நினைச்சன். தொடர்ந்து கேக்கேக்கை தெரிஞ்சுது என்னையில்லை எண்டு :).