Author: கரவைக்குரல்
•10:10 AM
ஈழத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள பல்வகையான சொற்களை ஈழத்தின் முற்றம் வாயிலாக கொண்டுவரும் பதிவர்களோடு நானும் கைகொடுக்கலாம் என்னுடைய எண்ணம்,அப்படியான சில சொற்கள் காலப்போக்கில் இல்லாது போய்விடுமோ என்ற அச்சம் ஒருபுறமிருக்க அதை என்றும் நிலைத்துவிட வேண்டும் என்ற பெருமுயற்சியில் ஈழத்துமுற்றம் பங்களித்துக்கொண்டு இருக்கிறது.சில சொற்கள் சொல்லும்போது அவை ஈழத்து மொழி நடையில் ஒரு அழகைத்தரும் சொற்களாகக்கூட இருக்கின்றன,

ஆனால் ஈழத்து வழக்கில் எத்தனையோ பல சொற்கள் கொஞ்சம் வழக்கில் குறைந்துகொண்டு போவதை அவதானிக்க முடிகிறது,கவலைக்குரிய விடயமும் கூட
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............

இவையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் சொல்ல வந்த விடயத்தை நான் அயத்துப்போடுவன் போல கிடக்கு.

பொதுவாக அயத்துப்போனன் எண்டு இப்போதும் சில வயது வந்தவர்களால் தான் சொல்லப்படுவதை இன்றைய காலங்களில் அவதானிக்கமுடியும்,

“என்னணை அம்மா நேற்று உங்களை ரெலிபோன் (தொலைபேசி) கதைக்க வரச்சொன்னனான் எல்லோ ஏனெணை வர இல்லை?" எண்டு அடிக்கடி தன் தாயின் மீது அக்கறையாக வெளி நாட்டிலை இருந்து கதைக்கும் மகன் கேட்க

”அட ஒம் தம்பி் நான் உன்ணாணை தீர அயத்துப்போனனெடா,என்னடா இங்கை வீட்டுவேலையும் முத்தம் வாசல் கூட்டி ஆட்டுக்கு குழையும் வெட்டிபோட்டு அந்த இந்த வேலையெல்லாம் பாத்துக்கொண்டிருந்ததாலை தீர அயத்துப்போனனெடா தம்பி” எண்டு அந்த வயது வந்த அம்மா சொல்கிறார்,

இந்த உரையாடல் மூலம் இப்போது அந்த “தீர அயத்துப்போதல்” என்பதன் அர்த்தம்
புரியாதவர்களுக்கு புரிந்திருக்கும்.”தீர” எனபது ”முழுவதும்” என்பதாகவும் ”அயத்துப்போதல்” என்பது ”மறந்துவிடுதல்” என்று பொருள் கொடுக்க முடியும்,இதை பொதுவாக இந்தக்காலங்களில் பேச்சுவழக்கில் ”முழுக்க மறந்துபோச்சு” என்று சொல்லுவினம்.

பொதுவாக இந்த காலத்து இளம்பாரயம் மட்டுமல்ல அதைவிட கொஞ்சம் வயது கூடிய மட்டங்கள் கூட ”அயத்துப்போனன்” என்ற சொல்லை பாவிப்பதே இல்லை என்றுதான் சொல்லலாம்.அப்படியிருக்கும்போது அது எப்படி அடுத்த பராயத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என்பது கேள்விதான்,காலப்போக்கில் இந்த சொல்லை அயத்துப்போவார்களோ என்ற ஏக்கமும் இருக்கு,


இங்கு முத்தம்- முற்றம், உன்ணாணை-பொதுவாக சத்தியம் செய்யும் முறைகளில் இதுவும் ஒன்று,
This entry was posted on 10:10 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On October 26, 2009 at 3:22 PM , வேந்தன் said...

ம்ம்.. எங்க வீட்டில் 'அப்பாச்சி' இந்த சொல்லைப் பாவிப்பா. எதாவது பழைய கதைகள் சொலும் போது "அவன்ட பெயரை அயத்துப்போனன்...." என்பா.

 
On October 26, 2009 at 6:31 PM , கிடுகுவேலி said...

ம்ம்ம்ம்...ஒரு புறம் மனதுக்குள் சிரிப்பாக இருக்கிறது. ‘மேனை தீர அயத்துப்போனன் அப்பு’ என மூதாட்டிகள் சொல்வது இன்றும் என் காதுக்குள் ஒலிக்கிறது. நன்றி....!! தொடரட்டும் வாழ்த்துக்கள்.

 
On October 27, 2009 at 2:30 AM , கானா பிரபா said...

என்ர அம்மம்மா அடிக்கடி பாவிக்கும் சொல் ;)

 
On October 27, 2009 at 3:50 AM , கலை said...

நானும்தான் உந்த ‘உண்ணாணை', ‘அயத்துப்போனன்' சொற்களை தீர அயத்துப்போனன். இந்தச் சொற்கள் முன்னர் ஆச்சி அடிக்கடி பாவித்த சொற்கள். இப்போ வயது முதிர்ந்தவர்கள் உட்பட யாரும் பாவிப்பதாகத் தெரியேல்லை.

 
On October 27, 2009 at 4:57 AM , ISR Selvakumar said...

இது போன்ற செழுமையான குழு பதிவுகள், உலகத் தமிழ் மாநாட்டை விட அதிகம் சங்கதிகளை உலகத்திற்கு தரும்.

 
On October 27, 2009 at 9:49 AM , Unknown said...

///ம்ம்.. எங்க வீட்டில் 'அப்பாச்சி' இந்த சொல்லைப் பாவிப்பா. எதாவது பழைய கதைகள் சொலும் போது "அவன்ட பெயரை அயத்துப்போனன்...." என்பா.///

அந்த சொல் ஆச்சிக்குப்பிறகு யாரும் பாவிக்கிறார்களா?
நன்றி கருத்துக்கு

 
On October 27, 2009 at 9:55 AM , Unknown said...

///ம்ம்ம்ம்...ஒரு புறம் மனதுக்குள் சிரிப்பாக இருக்கிறது. ‘மேனை தீர அயத்துப்போனன் அப்பு’ என மூதாட்டிகள் சொல்வது இன்றும் என் காதுக்குள் ஒலிக்கிறது///

ம்ம்ம்ம் ஆனால் அந்த சொல் ஈழத்து வழக்கில் குறைந்துகொண்டுபோவதாக நீங்கள் உணரவில்லையா?


//நன்றி....!! தொடரட்டும் வாழ்த்துக்கள்.///

நன்றி

 
On October 27, 2009 at 9:57 AM , Unknown said...

///என்ர அம்மம்மா அடிக்கடி பாவிக்கும் சொல் //

ம்ம்ம்ம்

///நானும்தான் உந்த ‘உண்ணாணை', ‘அயத்துப்போனன்' சொற்களை தீர அயத்துப்வ்போனன். இந்தச் சொற்கள் முன்னர் ஆச்சி அடிக்கடி பாவித்த சொற்கள். இப்போ வயது முதிர்ந்தவர்கள் உட்பட யாரும் பாவிப்பதாகத் தெரியேல்லை.////

ம்ம்ம்

 
On October 27, 2009 at 9:59 AM , Unknown said...

//இது போன்ற செழுமையான குழு பதிவுகள், உலகத் தமிழ் மாநாட்டை விட அதிகம் சங்கதிகளை உலகத்திற்கு தரும்///

அப்ப நாங்க எல்லாரும் உலகத்தமிழ் மாகா நாட்டுக்கு போகப்போறம் எண்டு சொல்லுறீங்களோ
ஹி ஹி ஹி ஹி

நன்றி கருத்துக்கு

 
On November 10, 2009 at 9:59 AM , Anonymous said...

தீர அயந்துபோனேன் என்றால் நல்லா நித்திரையாப்போனேன் என்டல்லோ நினைச்சனான்... மறதியையே குறிக்கும்.. கடவுளே. 3 வருசத்தில் எல்லாத்தையும் மறந்திட்டனே.. நல்லாத் தெரியுமே அயந்து போனன் என்டால் மறதி என்டு...

 
On November 10, 2009 at 2:12 PM , கலை said...

Mukilini! திருப்பி இங்க குழம்பிறீங்கள் போல கிடக்கு. அயந்துபோனன் = நித்திரையாப் போனன், அயத்துப்போனன் = மறந்துபோனன்.