Author: வர்மா
•5:28 AM
ஊரைவிட்டு வெளியேறியபின்னர் அந்நியமானவைகளில் சூரன்போரும் அடக்கம்.சூரன்போர் என்றபெயரில் சூரனை முன்னும் பின்னும் கொண்டோடுகிறார்கள்.செல்வச்சந்னதி,பொலிகண்டி கந்தவனம்,நெல்லியடிமுருகமூர்த்தி போன்றவற்றில் நடைபெறும் சூரன்போர் உணர்ச்சிவசமாக இருக்கும்.சூரனைக்கொண்டோடுவது,உயர்த்துவது,பதிப்பது,ஒற்றைக்கையில் தூக்கி லாவகமாக ஆட்டுவதைப்பார்க்கும்போது உண்மையான யுத்தம்போல் இருக்கும்.சூரனின் பககத்தில் இருந்து ஒலிக்கும் பறைமேளம் ஆடுபவர்களுக்கு உற்சாகத்தைக்கொடுக்கும்.

கொழும்பில் நடைபெறும் சூரன்போர் வித்தியாசமானதாக உள்ளது.பெருந்திரளான மக்கள்மத்தியில் சூரன்போர் நடைபெற்றது.பக்தியுடன் வந்தவர்கள்கொஞ்சப்பேர். முசுப்பாத்திபாக்கவந்தவர்கள் அதிகமானோர்.சூரனின் சகோதரர்களின் தலையை முருகன் வெட்டும்போது அரோகரா,வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்றகோசம் வானைப்பிளக்கும்.கொழும்பில் நடந்தசூரன்போரின்போது யாரோஒரு லூசுப்பயல் கைதட்டினான் எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

கடைசிக்கட்டத்தில் சூரன் மாமரமாக வருவார்.சூரனை ஆட்டுபவர் மாங்காயையும் மாவிலையையும் பக்தர்களூக்கு எறிவார் பக்தர்கள் அதை பூஜை அறையில் வைப்பார்கள்.கொழும்பில் நடந்த சூரன்போரின் வானரக்கூட்டம் ஒன்று மாங்காயை பறித்து சுவைத்தது. சிலபக்தர்கள் வானரத்திடம் மாங்காய் கேட்டு கெஞ்சினார்கள்.

கொழும்புக்கு வந்தபுதிதில் எனதுமகளை சூரன்போருக்கு கூட்டிச்சென்றோம்.அப்போது மகளூக்கு நான்குவயது. சூரன்போர்பற்றிய கதை தெரிந்தபடியால் சூரன்போரை ஆர்வமாகப் பார்த்தார். முருகன் அசையவிலலை.சூரன் ஓடித்திரிந்தது மகளூக்கு சந்தோசமாக இருந்தது. உணர்ச்சிவசப்பட்ட மகள் கமோன் சூரன் என்றார்.
This entry was posted on 5:28 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On October 24, 2009 at 3:59 PM , கானா பிரபா said...

சூரன் போர் குறித்து நானும் ஒரு இடுகை இட இருந்தேன், அருமையான பகிர்வுக்கு நன்றி

 
On October 25, 2009 at 4:02 AM , வர்மா said...

சூரன்போர்பற்றிய கானாபிரபாவின் இடுகையை எதிர்பார்ககிறேன்.
அன்புடன்
வர்மா

 
On October 25, 2009 at 4:53 AM , Unknown said...

///சூரன் ஓடித்திரிந்தது மகளூக்கு சந்தோசமாக இருந்தது. உணர்ச்சிவசப்பட்ட மகள் கமோன் சூரன் என்றார்///
அபாரம்... பிள்ளைக்கு என்ர வாழ்த்துக்கள். இப்பிடியே அப்பாவுக்கு அடிக்கடி மூக்குடையுங்கோ

 
On October 25, 2009 at 6:40 AM , Anonymous said...

/////
உணர்ச்சிவசப்பட்ட மகள் கமோன் சூரன் என்றார்.
////////
Super!

 
On October 25, 2009 at 7:09 AM , வர்மா said...

மழலைக்குறும்பு சந்தோசமானது.
அன்புடன்
வர்மா

 
On October 26, 2009 at 2:47 AM , யசோதா.பத்மநாதன் said...

மகளின் குழந்தைத் தனம் ரசிக்கும் படியாக இருந்தது வர்மா.

இப்படித் தான் பல பல வருடங்களின் முன் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்கு அப்பா நான் என் 5 வயது மச்சாள் எல்லோரும் போனோம்.சூரன் ஓடி வர அதைக் கண்ட பயத்தில் என் மச்சாள் யாருடயவோ காலுக்குள் அவளது முழுப்பாவாடை அகப்பட்டுக் கொள்ள அதை அப்படியே கழட்டி விட்டு விட்டு கத்தியபடி ஓடினாள்.

இப்போதும் அதை நாம் அவளோடு சொல்லிச் சிரிப்பதுண்டு.

 
On October 27, 2009 at 6:59 AM , வர்மா said...

சூரனைக்கண்டால் பிள்ளைகள் பயப்படுவதுவழமை
அன்புடன்
வர்மா

 
On November 12, 2010 at 8:31 AM , Muruganandan M.K. said...

இருவிதமான சூரன்போர் களையும் ஒப்பிட்டுக் கூறியது நல்லாக இருந்தது.