"கண்ணுபடப்போகுதய்யா சின்னக்கவுண்டரே! சுத்தி போட வேணுமய்யா சின்னக்கவுண்டரே" இது ஒரு பிரபலமான தென்னிந்திய திரையிசைப்பாடல். இந்தப் பாடலை ஈழத்துப் பாடலாக்கும் வாய்ப்பு வந்தால் "கண்ணூறு படப்போகுதய்யா சின்னக்கவுண்டரே! நாவூறு கழிக்க வேணுமய்யா சின்னக்கவுண்டரே" இப்படித்தான் பாடவேணும் போல.
"கண்ணு படப்போகுது" என்று என்று தமிழக மொழிவழக்கில் பரவலாகப் பேசும் வார்த்தைப் பிரயோகம் ஈழத்து மொழி வழக்கில் "கண்ணூறு பட்டுடும்" என்றே புழக்கத்தில் பயன்படும். கண்ணூறு என்பதைப் பிரித்துப் பார்த்தாலே புரிந்து விடும் இந்த சொல் கொண்டு வரும் விளக்கம். கண்+ஊறு என்று பிரித்துப் பொருள் உணர்ந்தால் பிறரது கண்பார்வை பட்டால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற மூதாதய நம்பிக்கையே இது கொண்டு வரும் விளக்கம். பெரும்பாலும் குழந்தைகளைப் பாதுகாக்கவே இப்படியான சொற்பிரயோகமும் பயன்படுத்தப்படுகின்றது.
திருஷ்டி சுத்தி போட வேணும் என்று தமிழக வழக்கில் இருக்கும் சொற்பயன்பாட்டையே "நாவூறு கழிக்க வேணும்" என்று ஈழமொழி வழக்கில் பயன்படுத்துவார்கள். நாவூறு என்பதற்கு ஈழத்து மொழி அகராதியில் "நாத்தோஷம்" என்றே விளக்கப்படுகின்றது. அதாவது ஒரு அழகான குழந்தையைப் பார்த்து "ஆகா இந்தப் பிள்ளை கொழு கொழுவென்று எவ்வளவு அழகான, துறுதுறுப்பான பிள்ளையாக இருக்கிறதே" என்று ஒருவர் நாவூறு பட்டால் அந்தப் பிள்ளைக்கு தோஷம் வந்து விடும் என்ற மூதாதய நம்பிக்கையே இங்கே சுட்டப்படுகின்றது. பொதுவாக ஈழத்தின் வாழ்வியலில் ஒரு குழந்தை பிறந்து விட்டால், தேங்காச்சிரட்டையில் (கொட்டாங்குச்சி என்று தமிழக வழக்கில் சொல்லப்படுவது)கருநிறப் பொட்டைத் தயாரித்து குழந்தையின் நெற்றியில் ஒரு பெரும் பொட்டை இடுவதோடு கன்னத்தில் சின்னஞ்சிறு குட்டிப் பொட்டு எதுக்குப் போடுவார்கள் வேறு எதெற்கு நாவுறு படாமல் தான்....

20 comments:
ஓ..நாவூறு பற்றி அறிந்துக்கொண்டேன்..நாவூறும் இங்கே இருந்திருக்கலாம்..காலப்போக்கில் கண்ணூறுவின் பின் மறைந்திருக்கும் போல! :)) நல்லாருந்துது கானாஸ்!
அந்த திருஷ்டி பொட்டில் பலவகை இருக்கு பாஸ்...கன்னத்தில் வைக்கிறது, தாடையில் இடுவது..அப்புறம் மிளகாய் -உப்பு சுற்றுவது- கற்பூரம் சுற்றுவது! :)))
அட திருஷ்டி கழிக்கறதா பாஸ் எங்கூர்ல எல்லாம் ரொம்ப பேமஸு! எனக்கெல்லாம் 5 வயசு வரைக்கும் கன்னத்துல மை விட்டுத்தான் வெளியே அனுப்புவாங்க! அம்புட்டு அழகா இருப்பேனாம் ! இங்க வந்துதான் வெயில்ல காஞ்சிப்போயி பொட்டு வைச்சாகூட தெரியாத அளவுக்கு முகம் மட்டும் கறுத்துப்போச்சு :((((
சரி அதை விடுங்க !
குழந்தை அழகு :)
//திருஷ்டி பொட்டில் பலவகை இருக்கு பாஸ்...கன்னத்தில் வைக்கிறது, தாடையில் இடுவது..அப்புறம் மிளகாய் -உப்பு சுற்றுவது- கற்பூரம் சுற்றுவது! :)))//
திருஷ்டி பொட்டு ஒரு டைப்பு
திருஷ்டி கழிக்கறது ஒரு டைப்பு :)
நானெல்லாம் ஊரை சுத்திட்டு வந்தா உப்பு மிளகாய் சுத்தி போடுவாங்க எங்க பாட்டி ! :)
பாஸ்..அது சின்ன பாண்டியும் பெரிய பாண்டியுமா பாஸ்!! :)) ரெண்டு பேரும் சின்னதுலே அழகாத்தான் இருக்கீங்க...ஆனா..சரி விடுங்க!! :))))
//கண்ணுபடப்போகுதய்யா சின்னக்கவுண்டரே! சுத்தி போட வேணுமய்யா சின்னக்கவுண்டரே" இது/
அட சும்மா ரெண்டு லைன் மட்டும் எடுத்து சொல்லிட்டீங்களே அதுல ஒரு லிஸ்ட் ஆப்
ஊருக்கண்ணு உலகுகண்ணு நாய் கண்ணு நரிக்கண்ணு நொள்ளை கண்ணு நல்லக்கண்ணு எல்லா கண்ணும் அப்படின்னு பயங்கர ஃப்ளோவுல வரும் சரியா கவனிங்க ! :))
/
நானெல்லாம் ஊரை சுத்திட்டு வந்தா உப்பு மிளகாய் சுத்தி போடுவாங்க எங்க பாட்டி ! :)
அப்புறம் பாட்டிக்கு திருஷ்டி சுத்தி போடவேண்டியிருக்குமே!! :))
ஓகோாாாாா!
சிலபேர் பெரிய ஆக்களுக்கும், இந்த நாவூறு கழிப்பார்கள்.
சந்தனமுல்லை
நீங்க சொன்ன கருத்துக்கள் ஏற்க வேண்டியவை, பாட்டிக்கு சுத்தி போடுவது வரை ;-)
ஆயில்யன்
மலரும் நினைவுக்கு போய்விட்டீர்களா
கலையரசன்
பலமா ஒரு ஓகோவா ;)
வணக்கம் கலை
பெரிய ஆட்களுக்கும் தான் ;-))
நல்லாயிருக்குது
சிங்களவர்கள் திருஸ்டி கழிக்கும் போது சில தானியங்களையும் (கடுகு,காஞ்ச மிளசாய் மிச்சம் மறந்து விட்டது) உப்பையும் கையில் எடுத்து நாவூறு கழிக்கப்பட வேண்டியவரின் உடலை மூன்று தரம் சுற்றி அவர் தூ..தூ..தூ என்று துப்பி (துப்புற மாதிரி) பிறகு அதை நெருபபுத்தணலில்போடுவார்கள். பெரிதாய் வெடித்து சத்தம் கேட்டால் கனக்கு நாவூறு பட்டிருக்கு என்று அர்த்தமாம்...
தியா
உங்களையும் ஈழத்து முற்றத்தில் பங்களிக்க அழைக்கிறேன், என் மின்னஞ்சலுக்கு kanapraba@gmail.com ஒரு மடல் இடுங்கோ
சஞ்சயன்
சிங்கள நாட்டு பழக்க வழக்கத்தைத் தந்தமைக்கு நன்றி
நான் இவ்வளவு நாளும் கண்+ஊறு என்று நினைத்திருந்தேன் பிரபா..
மழை
நீங்கள் சொல்வது தான் சரி, திருத்திட்டோம், மிக்க நன்றி
உதுக்குத் தான் சொல்றது உங்களைப் போல பெரியவை தொடர்ந்தும் ஈழத்து முற்றத்தில் பங்களிக்கோணும் எண்டு
//மழை
நீங்கள் சொல்வது தான் சரி, திருத்திட்டோம், மிக்க நன்றி
உதுக்குத் தான் சொல்றது உங்களைப் போல பெரியவை தொடர்ந்தும் ஈழத்து முற்றத்தில் பங்களிக்கோணும் எண்டு///
பெரியவங்க அவ்வப்போது வந்து கருத்துரைத்து செல்லவேண்டும் என்ற கருத்தினை வழிமொழிகிறேன் :)
இப்புட்டு மேட்டர் இருக்கா இதுல?!?!!?
நல்ல இடுகை. கண்ணூறு படப்போகுது இந்த இடுகைக்கு :)
மிக்க நன்றி அப்துல்லா
யாழ்ப்பாணத்து வழமையை கொழும்ம்பிலும் சிலர் கடைப்பிடிக்கிறார்கள்.நாவூறு,கண்ணூறுபடாமல் உப்பும்,மிளகாயும் சுத்தி தணலிலை போடுகிறார்கள்.
அன்புடன்
வர்மா
பதிவு நல்லா இருக்கு..
உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்.