•2:14 AM
ஈழத்தின் ஒவ்வொரு ஊருக்கும் விசேடமான அம்சங்கள் அவை உணவுப் பதார்த்தமாகட்டும் அல்லது இயற்கையோடு மையப்படுத்தியதாகட்டும், அல்லது கைத்தொழில் சார்ந்த விடயங்கள் ஆகட்டும் இவற்றை ஒரு பதிவில் அடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எனக்குத் தெரிந்த தகவல்களோடு வருகின்றேன்.
உங்கள் பின்னூட்டங்கள் மூலம் விடுபட்டவையை அறியத் தந்தால் அவற்றை பிற்சேர்க்கையாக இணைத்துக் கொள்வேன்.
இணுவில் - மரவள்ளிக் கிழங்கு (எங்களை எல்லாம் கிழங்கு என்ற அடைமொழியோடு தான் மற்ற ஊர்க்காரர் அழைப்பார்கள்)
தாவடி - புகையிலை
மட்டுவில் - கத்தரிக்காய்
ஆனைக்கோட்டை - நல்லெண்ணை
நிலாவரை - வற்றாத கிணறு
பருத்தித்துறை - பருத்தித்துறை வடை (தட்டையாக மொறு மொறு என்று இருக்கும் பதத்தில் செய்தது)
பளை - தேங்காய் ( நிறைய தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு தேங்காய் விளைவிக்கப்படும் ஊர்)
கீரிமலை - யாழ்ப்பாணத்தவர் பிதிர்க்கடன் தீர்க்கப் போகும் கடல், கூடவே விடுமுறை நாட்களில் நீச்சலடிக்கும் இடம்
கசூர்னா பீச் - கசூர்னா என்ற பெயரோடு அழைக்கப்படும் கடற்கரை
யாழ்ப்பாணப் பிரதேசம் - பனங்காய் பணியாரம், ஒடியற்கூழ், புழுக்கொடியல்
பரந்தன் - இரசாயனத் தொழிற்சாலை (ஒருகாலத்தில் இருந்தது)
ஆனையிறவு - உப்புத் தொழிற்சாலை (ஒருகாலத்தில் இருந்தது)
காங்கேசன் துறை - சீமெந்து தொழிற்சாலை (ஒருகாலத்தில் இயங்கியது)
வாழைச்சேனை - காகிதத் தொழிற்சாலை
மண்டைதீவு - சுருட்டு (வந்தியத்தேவன் பகிர்ந்தது)
மட்டக்களப்பு - தயிர் (மழை ஷ்ரேயா பகிர்ந்தது)
திக்கம் - சாராய வடிசாலை (சயந்தன் பகிர்ந்தது)

15 comments:
திங்கிற விசயங்கள் மட்டும் கிடையாதா? :)
ஆகா..சுவாரசியமான லிஸ்டா இருக்கே!!/புழுக்கொடியல்/ -இப்படின்னா என்ன?
ஆயில்ஸ்
எல்லாமே இருக்கு ;)
சந்தனமுல்லை
புழுக்கொடியல் பற்றி விக்கிபீடியா இப்படிச் சொல்கிறது
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
//பனங்காய் பணியாரம்//
இது எப்படி செய்வாங்க
அண்ணே இன்னொரு முக்கியமான ஒரு விடயத்தை விட்டுவிட்டியள் அதுதான் மண்டான் சுருட்டு. பெரிசுகள் பெரும்பாலும் மண்டான் சுருட்டுத் தான் பிடிப்பார்கள். கடைகளில் சுருட்டு எனக் கேட்காமல் மண்டான் என்றே கேட்பார்கள்.
Meenthulliyaan said...
//பனங்காய் பணியாரம்//
இது எப்படி செய்வாங்க//
வணக்கம் நண்பரே
இது பற்றிய செய்முறையை பின்னர் தருகின்றோம்
மட்டு - தயிர், கடலுணவு
----
9-11ம் ஆண்டு சமூகக் கல்விப் புத்தகங்கள் இருந்தா இன்னும் கொஞ்சம் பட்டியலிட வசதியாயிருக்கும் :O))
திக்கம் - வடிசாலை
ஏதோ என் அறிவுக்கு எட்டியது :)
பனங்காய் பணியாரம் கேட்ட நண்பருக்கு படத்தோட விளக்கம்... அப்பவே எழுதியிருக்கிறம்..
http://sajeek.com/archives/75
வந்தி, ஷ்ரேயா, சயந்தன்
மேலதிக தகவல்களுக்கு நன்றி உங்கள் பகிர்வுகளோடு இன்னும் சில தகவல்களைச் சேர்த்திருக்கின்றேன்
ஆனையிறவு - உப்பளம்.
பரந்தன் - இரசாயணத் தொழிற்சாலை.
வன்னி ( வவுனியா, முல்லைத் தீவு, மன்னார் அடங்கிய பிரதேசம்) -தேன்,நெல்,பாற் பொருட்கள்.
கந்தளாய் - வென்னீரூற்று.
திருமலை - இயற்கைத் துறைமுகம்
மலையகம் - தேயிலை, ரப்பர்,கொக்கோ, தெங்குப் பொருட்கள்.
யாழ்ப்பாணம் - பனம் பொருட்கள்.(பனை)
ஆனையிறவு, பரந்தன்,யாழ்ப்பானம் ஏற்கனவே பகிரப் பட்டிருக்கிறது.மறுபடி பதிவிட்டமைக்கு வருந்துகிறேன்.
பாய் - ஏறாவூர்
மட்டக்களப்பனின்ட பாயில படுத்தால் அவ்வளவு தான் என்று மற்ற திசைககாறர் சொல்லுறதுக்கும் இதுக்கும் தொடர்பில்லை கண்டீங்களோ.
கஜூ (கஜூ பழம் (முந்திரியம் பழம்)இதுக்கும் ஏறாவூர் பக்கம் கொஞ்சம் பிரபல்யமானது.
பாசிக்குடா - கடற்கரை
மாந்தீவு - தொழுநோயாளர்களை பாதுகாப்புதாக சொல்லி அடைத்து வைத்திருக்கும் இடம்
அட மறந்து போச்சு
பட்டிக்கலோ கல்லடிப்பாலம் - ஞாயமான நீட்டுப் பாலம்.
மீன் கோயில் (இதுவும் பட்டிக்கலோ) மீனின் வடிவத்தில் உள்ள தேவாலயம் மார்க்கட் ரோட்டால் கல்லடிப்பாலம் நோக்கிப் போகும் போது வரும்.
1814 இல் (இலங்கை ஆங்கிலேயரால் கைப்பற்பப்பட்ட ஆண்டு)தொடங்கப்பட்ட பாடசாலை Methodist Central College
ஒல்லாந்தர் கோட்டை (கச்சேரி இங்க தான் அருக்கு)
கரடியனாறு விவசாய பாடசாலை (அதை சின்ன குண்டசாலை என்றும் சொல்வர்)
மாமாங்கம் கோயில் (இங்க திருவிழா காலத்தில புட்டும் கத்திரிக்கா குழம்பும் கிடைக்கும்....ஆகா.. அதெல்லோ சாப்பாடு )
வடமராடச்சி குறிப்பா வல்லைல இருந்து சந்நதி வரைக்கும் கள்ளுக்கு பேமஸ் ஆன இடம் எண்டு சொல்லுவினை...
:)