Author: கானா பிரபா
•12:00 AM
நல்லூர் விழாக் காலப் பதிவுகளில் இன்றைய படையலாக வருவது சிவயோக சுவாமிகளின் இரண்டு நற்சிந்தனைப் பாடல்களின் ஒலி வடிவமும், அவற்றின் எழுத்து வடிவமும். முதலில் வரும் "எந்நாளும் நல்லூரை" என்ற பாடலைத் தாங்கிய இசைப் பேழை யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் சிவதொண்டன் நிலையத்தினரால் வெளியிடப்பட்டது. இப்பாடலை உருவாக்கியதோடு தகுந்த சங்கீத இலட்சணமும் கொடுத்தவர் சிவயோக சுவாமிகள். எளிமையான வரிகளில் வலிமையான பக்தியுணர்வைத் தூண்டும் இப்பாடல் நல்லூர் நாயகன் திருவிழாக் காலத்தில் உங்களுக்கும் அவன் பால் சித்தத்தைக் கொண்டு செல்ல உறுதுணையாக அமையும். பாடலைப் பாடியவர் விபரம் கிட்டவில்லை


Get this widget
Share
Track details


ராகம்: பிலஹரி
தாளம்: ரூபகம்

பல்லவி

எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே

அனுபல்லவி

அந்நாளில் ஆசான் அருந்தவஞ் செய்த இடம்
அது ஆதலாலே அதிசயம் மெத்தவுண்டு
(எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)

சரணம்

வேதாந்தம் சித்தாந்தம் கற்றதனால் என்ன
வேடிக்கைக் கதைகள் பேசினால் என்ன
வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால்
வில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே
(எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)

சத்தியம், பொறுமை, சாந்தம், அடக்கம்
நித்தியா நித்தியம் பெறினும் - நிபுண
பக்தி செய் உத்தமர் பரவும் நல்லூரில்
நித்தியம் வந்து பார்த்தால் முத்தி நிச்சயமே

(எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)

0000000000000000000000000000000000000000000000000000000000000000

சிட்னியில் இயங்கும் யோகர் சுவாமி நிலையம் யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைப் பாடல்கள், மற்றும் சொற்பொழிவுப் பகிர்வுகளை தொடர்ந்து மாதாந்தோறும் நடாத்தி வருகின்றது. அது குறித்த இன்னும் மேலதிகத் தகவல்களை அடுத்து வரும் பதிவொன்றில் தருகின்றேன். இன்றைய பதிவிலே அக்கூட்டுப் பிரார்த்தனையில் பாடப்பெற்ற "நல்லூரான் திருவடியை" என்ற பாடலின் ஒலிப்பதிவையும், எழுத்து வடிவையும் தருகின்றேன். ஒலிப்பதிவின் இறுதியில் சில அடிகள் மட்டும் பதியப்படாமைக்கு மனம் வருந்துகின்றேன்.



Get this widget
Share
Track details


நன்றி:
எனது இந்த நல்லூர்க்காலப் பதிவுகளில் உதவியளிக்க வேண்டும் என்ற விருப்போடு, இந்தப் பதிவில் இடம்பெற்ற "எந்நாளும் நல்லூரை", மற்றும் "நல்லூரான் திருவடியை" பாடல்களின் ஒலிப்பதிவைத் தந்துதவிய திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள்.

நல்லூர் முருகன் உள் ஆலயப் புகைப்படம்: http://www.tamilshots.com/



இவ்வாண்டின் நல்லைக்கந்தன் ஆலய 14 ஆம் நாள் திருவிழாப் படங்களை அனுப்பிய கிழவிதோட்டம் செந்தூரனுக்கு நன்றிகள்











This entry was posted on 12:00 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On August 11, 2009 at 12:04 AM , தங்க முகுந்தன் said...

அருமை! இன்றுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன்! எங்கே உங்கள் பழைய பதிவுகளில் நல்லூரைக் காணவில்லை என்றிருந்தேன் - பரவாயில்லை என் ஏமாற்றத்தை நீக்கிவிட்டீர்கள்! நன்றிகள்!!!

 
On August 11, 2009 at 4:17 AM , கானா பிரபா said...

மிக்க நன்றி தங்கமுகுந்தன்