Author: கானா பிரபா
•3:09 AM

கடந்த பதிவுகளில் நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பில் வரலாற்றுப் பதிவுகள் அமைந்திருந்தன. தொடர்ந்து வரும் நல்லைக் கந்தன் திருவிழாக் காலத்தில் மேலும் சில படையல்களோடு அமைய இருக்கும் இவ்விசேட பதிவுகளில் இன்று நான் தருவது, நல்லூர்க் கந்தன் புகழ் பாடும் பொப்பிசைப் பாடல். ஈழத்தின் பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் அவர்கள், அரவிந்தன் இசையில் பாடும் இப்பாடல் வழக்கமான பக்திப் பாடல்களில் இருந்து விலகிப் மெல்லிய இசை கலந்த பொப்பிசைப் பாடலாக மலர்ந்திருக்கின்றது. தொடர்ந்து பாடல் வரிகளையும் கீழே தந்திருக்கின்றேன்.


Get this widget | Share | Track details

மால் மருகா எழில் வேல் முருகா நீயே
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே
மால் முருகா எழில் வேல்முருகா நீயே
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே

முருகா வடிவேலா...........
தருவாய் அருள் குமரா.....
முருகா வடிவேலா.......
தருவாய் அருள் குமரா......

நல்லூர் நாயகனே....! நல்வழி காட்டுமைய்யா
நம்பிய பேர்களது துன்பங்களைத் தீருமய்யா
நல்லூர் நாயகனே....! நல்வழி காட்டுமைய்யா
நம்பிய பேர்களது துன்பங்களைத் தீருமய்யா

நல்லூர் எம்பதியே
நம்பிக்கையின் ஒளியே
நல்லூர் எம்பதியே
நம்பிக்கையின் ஒளியே

கனிமலைக் கந்தவேளே காப்பது நீயய்யா
கதியே நீயென்றால் பதியே சரணமய்யா
கனிமலைக் கந்தவேளே காப்பது நீயய்யா
கதியே நீயென்றால் பதியே சரணமய்யா
கந்தா கதிவேலா...வருவாய் சிவபாலா....
கந்தா கதிவேலா...வருவாய் சிவபாலா....

ஏழுமலை இறையினிலே எழுந்திடும் குமரேசா
ஆறுதலைத் தந்திடுவாய் ஆறுமுகா அழகேசா
ஏழுமலைப் இறையினிலே எழுந்திடும் குமரேசா
ஆறுதலைத் தந்திடுவாய் ஆறுமுகா அழகேசா
குமரா எழில் முருகா......
குறுகுறு நகை அழகா......
குமரா எழில் முருகா........
குறுகுறு நகை அழகா........

தோகைமயில் ஏறிவரும் சேவல் கொடியழகா
பழமுதிர்ச்சோலைகளில் பவனி வரும் வடிவழகா
தோகைமயில் ஏறிவரும் சேவல் கொடியழகா
பழமுதிர்ச்சோலைகளில் பவனி வரும் வடிவழகா
அரகர ஆறுமுகா..........
அருளீர் திருக்குமரா.....
அரகர ஆறுமுகா..........
அருளீர் திருக்குமரா.....

லண்டன், பாரிஸ், சுவிஸ், ஜேர்மனி, நேர்வே, ஒஸி
கனடா வாழ்த் தமிழன் நாயகனே முருகய்யா
லண்டன், பாரிஸ், சுவிஸ், ஜேர்மனி, நேர்வே, ஒஸி
கனடா வாழ்த் தமிழன் நாயகனே முருகய்யா
உலகாள் தமிழ்த் தலைவா.......
உமையாள் திருக்குமரா............
உலகாள் தமிழ்த் தலைவா.......
உமையாள் திருக்குமரா.............

சிவனின் மைந்தனய்யா சிங்கார வேலனய்யா
தகப்பனுக்குபதேசம் செய்த சுவாமி நீயய்யா
சிவனின் மைந்தனய்யா சிங்கார வேலனய்யா
தகப்பனுக்குபதேசம் செய்த சுவாமி நீயய்யா

தவறுகள் பொறுத்திடுவாய்.....
தமிழரைக் காத்திடுவாய்..........
தவறுகள் பொறுத்திடுவாய்.....
தமிழரைக் காத்திடுவாய்..........

அரகர ஆறுமுகா..........
அருளீர் திருக்குமரா.....
அரகர ஆறுமுகா..........
அருளீர் திருக்குமரா.....

இந்த ஆண்டின் நல்லைக்கந்தன் ஆலய 12 ஆம் திருவிழாப்படங்களை அனுப்பிய கிழவித்தோட்டம் செந்தூரனுக்கு நன்றிகள்








This entry was posted on 3:09 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On August 10, 2009 at 5:45 AM , வந்தியத்தேவன் said...

இப்போதான் பாட்டுக்கேட்டேன் அச்சு அசல் பொப் இசை. முருகன் எழுந்து ஆடினாலும் ஆடுவார்.

 
On August 10, 2009 at 7:56 PM , கானா பிரபா said...

;) நன்றி வந்தி