Author: மொழிவளன்
•10:03 AM
குறிப்பாக தமிழ் நாட்டு தமிழரிடையே வழக்கில் இல்லாத ஒரு சொல், ஈழத் தமிழர்களின் பேச்சில் பயன்படுகின்றது. இச்சொல்லை நானும் பலமுறை கேட்டிருப்பினும் அதன் பயன்பாடு குறித்த காரணமோ தெளிவோ தெரிந்திருக்கவில்லை.

அச்சொல் இது தான் "எம்டன்".

"உவன் பெரிய எம்டன் போலக்கிடக்கு."

"உவனிட்ட பழகைக்க கொஞ்சம் கவனமாத்தான் பழக வேணும், ஆள் சரியான எம்டன்".

இப்படியாக ஈழத்தமிழர் பேச்சு வழக்கில் பயன்படும் ஒரு சொல் தான் இந்த "எம்டன்".

இச்சொல்லின் பயன்பாடு குறித்து அறிந்திராதப் போதும், அன்மையில் வாசிக்க கிடைத்த முருகர். குணசிங்கத்தாரின் பொத்தகத்தின் ஊடாக அறியக் கிடைத்தது.

இலண்டன் தேசிய ஆவணக் காப்பகத்தில் ஈழத் தமிழரின் வரலாற்று ஆய்வுக்கான மூலாதாரங்களின் சேகரிப்பின் போது இந்த "எம்டன்" எனும் பேச்சு வழக்கு எம்மிடையே இருப்பதற்கான காரணியையும் வியப்புடன் கூறியிருந்தார்.

"ஜேர்மன் போர்க்கப்பலும் எம்டன் பயணங்களும்" எனும் தலைப்பில் கிடைத்த பதிவுகளின் படி "எம்டன்" எனும் ஜேர்மனிய கப்பல், மிகப் பலம் வாய்ந்த பிரித்தானியக் கடற்படையிடம் சிக்காது, பிரித்தானியக் கடற்படையின் அனுமதியும் இன்றி, பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்த துறைமுகங்களான ஆப்பிரிக்கத் துறைகள், தார்-எஸ்-சலாம், மொம்பாஸா, விக்றோரியா, கொச்சின், உற்பட திருக்கோணமலை, யாழ்ப்பாணம் துறைமுகங்களிற்குள்ளும் ஊடுறுவி பிரித்தானிய கடற்படைத் தளங்களின் தகவல்களை திரட்டி சென்றுள்ளது.

இவ்வாறான ஒரு தந்திரோபாயமான நடவடிக்கையை "எம்டன்" ஜேர்மனியக் கப்பல் செய்து முடித்ததால், இச்செயலின் பின்னரான வியப்பும், அதன் தந்திரோபாய நடவடிக்கையும் ஈழத்து தமிழரிடையே, மிகவும் (தந்திரக்காரனை) தந்திரமாக செயல் படும் ஒருவரை "எம்டன்" என்றழைக்கும் பேச்சு வழக்காக தோன்றியுள்ளது.
This entry was posted on 10:03 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On August 11, 2009 at 10:39 AM , Anonymous said...

எம்டன் மகன் என்ற திரைப்படம் இப்படியான அர்த்தத்தில்தானே வந்தது. ஆக தமிழகத்திலும் உள்ளதென்றுதானே அர்த்தம்

 
On August 13, 2009 at 5:22 AM , கானா பிரபா said...

எம்டன் தமிழகத்திலும் பயன்படுத்தப்படுவதற்கு காரணம் அந்தக் கப்பல் பெயர் தான், நல்லதொரு இடுகை.

 
On April 30, 2020 at 7:30 AM , தமிழ் மொழி said...

அருமையான பதிவு
https://tamilmoozi.blogspot.com/?m=1