Author: கலை
•3:46 PM
வணக்கம்.

ஏதோ நானும் ரெண்டு இடுகை போட்டுட்டு அப்படியே விட்டிட்டன். சில விசயங்கள் எழுதவேணும் எண்டு நினைச்சிருந்தாலும், நேரம் அனுமதிக்கேல்லை. ஆச்சி சொல்லுமாப்போல சொல்லுறதெண்டா, இந்த நேரப் பொரி கிடைக்காதாம் :).

இப்ப வீட்டில தாத்தா, பேத்திக்கு கதையள், பாட்டுகள், நகைச்சுவை துணுக்குகள், எண்டு என்னெல்லாமோ சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுல கொஞ்சத்தை (கடன் வாங்கி) எடுத்து விடலாமெண்டு பாக்கிறன் :).

தமிழில சொல்லுற Tongue twisters (இதுக்கு என்னப்பா தமிழ்? ஆரும் தெரிஞ்சா சொல்லுங்கோவன்) சிலது சொல்லுறன். இங்க இருக்கிறதை நல்ல கெதியா, திருப்பித் திருப்பிச் சொல்லுங்கோ பாப்பம்.

மு.கு.: நாக்கில ஏதும் பிழை வந்தால், நான் பொறுப்பில்லை :).

1. ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி,
கிழ நரி பிடரியில் ஒரு பிடி நரை மயிர்.

2. கடுந்தரையில, வெறுங்குடுகு, உருளுது, பிரளுது.

3. ஓருடும்பு, உருண்டு, பிரண்டு,
ஒரு பற்றை கடந்து,
ஒரு புற்றில் விழுந்தது.

4. சொத்தித் தச்சன் சித்தன் பெண்டில்,
சித்துளி குத்திச் செத்துப் போனாள்.

5. பணமும் பழம் பணம்,
பரணும் பழம் பரண்.

சொத்தி= முடவன்
பெண்டில் = மனைவி
|
This entry was posted on 3:46 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

On August 3, 2009 at 4:53 PM , soorya said...

சும்மா ஒரு தகவலுக்காக சொல்றன்.
சண் ரிவி யில் ராணி மகா ராணி புறோகிறாமில் மமிதா எனும் பெண், இப்படி நிறையக் கேட்பாள். எல்லாமுமே புதியவை.
நன்றி.

 
On August 3, 2009 at 6:07 PM , ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு

 
On August 3, 2009 at 6:46 PM , வந்தியத்தேவன் said...

கடற்கரையிலை உரல் உருளுது என்பதை மிக வேகமாக சொல்லிப்பாருங்கள் தடுமாறுவீர்கள்.

 
On August 4, 2009 at 1:10 AM , யசோதா.பத்மநாதன் said...

சொல்ல முடியுது:)

 
On August 4, 2009 at 6:12 AM , சினேகிதி said...

முந்தி தமிழ் வகுப்பில ழ ள உச்சரிப்புக்கு என்று தமிழ் ரீச்சர் இதுவும் சொல்றவா.

 
On August 4, 2009 at 4:07 PM , M.Thevesh said...

நான் படிக்கும் காலத்தில் இந்தியாவிலிருந்து ஒரு தமிழ் அறிஞர்
எங்கள் கல்லூரி வந்திருந்தார். நாவுக்கு பயிற்சி கொடுக்க பின்வருவதை சொல்
லித்தந்தார்.

திருச்சிற்றம்பலம்
தில்லைச்சிதம்பரம்
கருத்தில் சஞ்சலம்
திருத்தித்தந்தருள்.

இது ஆணடவனிடம் விண்ணப்பிவது
போல் அமைந்துள்ளது.

 
On August 5, 2009 at 8:35 AM , shangar said...

எங்க சொல்லுங்கோ பாப்பம்..

எங்கட தச்சன் சொத்திச் தச்சன்.. சத்துவம் குத்திச் செத்துப் போனான்..

குடிலுக்குப் பின்னால குருடன் உருளுகிறான்...