Author: மொழிவளன்
•10:06 PM
இது ஒரு வட்டார வழக்குச் சொல் என்று கூறமுடியாது. ஆனால் கிட்டத்தட்ட வட்டார வழக்குச் சொல் போலவே பயன்பட்டது.

மண்டையில போடுதல், மண்டைக்கப் போடுவன், மண்டைக்கப் போட்டிருக்கினம் போன்ற சொற்கள்.

இச்சொற்கள் ஒருக்காலக் கட்டத்தில் சிறுக்குழந்தைகளின் விளையாட்டுச் சொல்லாகவும் அதிகம் பயன்பட்ட ஒரு சொல் என்றும் கூறலாம். சிறு சண்டைகளுக்கும் “டேய், அடி வேண்டுவாய்” எனும் சொற்களுக்கு பதில் இந்த “டேய், உண்ட மண்டைக்கப் போடுவன்” என்ற சொல் அடிக்கடி பயன்படும் சொல்லாகியிருந்தது.

இச்சொல்லில் எனக்கு ஒரு சுவையான அனுபவம் உண்டு. நாங்கள் கொழும்பு வந்து வாடகை வீட்டில் தங்கியிருந்தக் காலங்கள். 2002 ஆம் ஆண்டு என்று நினைக்கிறன். தேர்தல் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. தொலைக்காட்சியில் தேர்தல் விளம்பரங்கள் அதிகம் இடம்பெற்றிருந்தக் காலக்கட்டம். அறிமுகமே இல்லாத சில சுயேட்சை வேட்பாளர்களும் தொலைக்காட்சியில் தமது முகத்தைக் காட்டி சென்றனர்.

அப்போது எனது சகோதரி தனது குழந்தையுடன் எங்கட வீட்ட வந்திருந்தவா. சகோதரியின் மகனுக்கு இரண்டு அல்லது அதற்கு குறைவான வயது தான் இருக்கும். சரியானக் குளப்படிக்காரன். இவன்ர குளப்படிகளைத் தடுக்கும் பொருட்டு கையில் ஏதாவது கடிக்கக் கொடுத்துவிட்டு, தொலைக்காட்சி முன் கதிரையில் இருத்திவிடுவம். இவனுக்கு இன்னமும் சரியாகப் பேசவும் வராது.

அப்பொழுது தொலைக்காட்சியில் ஒரு சுயேட்சை வேட்பாளர் முன் தோன்றி இப்படிக் கூறினார். “எனது சின்னம் மயில் சின்னம், உங்கள் ஓட்டுக்களை மயிலுக்குப் போடுங்கள்.”
இதைக் கேட்டுக்கொண்டிருந்த சகோதரியின் மகன் இவ்வாறு கூறினான். “மண்டையில் போடுங்கள்.”

அதன் பிறகு அந்த சுயேட்சை வேட்பாளர் தொலைக்காட்சியில் தோன்றும் போதெல்லாம், இவனும் “மண்டையில் போடுங்கள்” என்று சொல்லிக்கொண்டிருப்பான்.

எல்லோருக்கும் ஒரே ஆச்சரியமாக போட்டுது. இவன் எப்படி உப்புடிச்சொல்லுறான். இவனிடம் யாரும் இப்படியான சொற்களைப் பேசவும் இல்லை, கதைக்கவும் இல்லை. இன்னும் சரியாக கதைக்கவும் வராது. பிறந்து சில மாதங்களிலேயே கொழும்புக்கு கொண்டு வந்திட்டம். இப்படி ஆச்சரியங்கள் பல.

ஒரு வேலை எல்லாம் மண்வாசனையாக இருக்கும் எண்டு நினைக்கிறன்.
This entry was posted on 10:06 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments:

On June 15, 2009 at 12:25 AM , திகழ்மிளிர் said...

/அப்பொழுது தொலைக்காட்சியில் ஒரு சுயேட்சை வேட்பாளர் முன் தோன்றி இப்படிக் கூறினார். “எனது சின்னம் மயில் சின்னம், உங்கள் ஓட்டுக்களை மயிலுக்குப் போடுங்கள்.”
இதைக் கேட்டுக்கொண்டிருந்த சகோதரியின் மகன் இவ்வாறு கூறினான். “மண்டையில் போடுங்கள்.” /

சிலர் மண்டைப் போட்டதால் தான் நாடுக்கு நல்லது என்று மண்டையில் உறைக்க சொல்வதாக தோன்றுகிறது ,அதுமட்டுமல்ல சிரிப்பாக இருந்தாலும் சிந்தனை தூண்டுவதாகத் தோன்றுகிறது

 
On June 15, 2009 at 3:11 AM , கானா பிரபா said...

:) ஆகா

 
On June 15, 2009 at 4:35 AM , மொழிவளன் said...

இப்பதிவு ஒரு நினைவு மீட்டல் மட்டுமே! உள்ளர்த்தங்கள் எதனையும் கொண்டு எழுதப்படவில்லை.

//சிலர் மண்டைப் போட்டதால் தான் நாடுக்கு நல்லது என்று மண்டையில் உறைக்க சொல்வதாக தோன்றுகிறது//

மண்டையப் போடவேண்டியவர்கள் போடாமல் அரச கைக்கூலிகளாக மாறியது தான் தமிழரின் அழிவுக்கு காரணமானது.

அதன் உண்மை நிலைப்பாட்டை புரிந்தக்கொள்ளாத இவ்வுலகம் உண்மையில் விசித்திரமானது.

ஆனால் எந்த சுயநல நோக்கும் அற்று, எமது இனம் வாழ தம்மையே அர்ப்பணித்த அற்புத மனிதர்கள் என்றும் எம்முடனேயே வாழ்வர்.

 
On June 15, 2009 at 6:03 AM , கொண்டோடி said...

மண்டையில போடுறதெண்டால் எங்களுக்கெல்லாம் ஒரேயொரு விளக்கம்தான் இருக்கு. அது 'மண்டையில போடுறது' தான்.

யாழ்ப்பாணம், வன்னி போன்றவிடங்களில் மண்டையில் போடுவதென்பது கொலை செய்வது. ஏன் பிறபகுதிகளிற்கூட மண்டையில போடுறதெண்டது கொலை செய்வதைத்தான் குறிக்குமென்று நினைக்கிறேன். கொழும்பில் இப்படியொரு விளக்கம் இருக்கிறதென்பது ஆச்சரியம்தான்.

ஏனென்றால் கடல்கடந்து தமிழ்நாட்டிற்கூட இந்த 'மண்டையில போடுறது' படு பிரபலம். மேதகு மாலன் சார்கூட சொல்லியிருந்தார், நாங்கள் மண்டையில் போடும் பரம்பரை என. மேலதிக விவரங்களுக்கு அவரை அணுகி ஆய்வுக்கட்டுரை பெறலாம்.

 
On June 15, 2009 at 6:05 AM , கொண்டோடி said...

அண்ணை,
உந்த 'குலப்படி' குலப்பனடிக்குதண்ணை.
ஒருக்கா மாத்திவிடுங்கோ.

 
On June 15, 2009 at 6:27 AM , திகழ்மிளிர் said...

/இப்பதிவு ஒரு நினைவு மீட்டல் மட்டுமே! உள்ளர்த்தங்கள் எதனையும் கொண்டு எழுதப்படவில்லை.//

உண்மை தான் நண்பரே


/மண்டையப் போடவேண்டியவர்கள் போடாமல் அரச கைக்கூலிகளாக மாறியது தான் தமிழரின் அழிவுக்கு காரணமானது.

அதன் உண்மை நிலைப்பாட்டை புரிந்தக்கொள்ளாத இவ்வுலகம் உண்மையில் விசித்திரமானது.

ஆனால் எந்த சுயநல நோக்கும் அற்று, எமது இனம் வாழ தம்மையே அர்ப்பணித்த அற்புத மனிதர்கள் என்றும் எம்முடனேயே வாழ்வர்.//

இது தான் என்னுடைய கருத்தும் நண்பரே

அன்புடன்
திகழ்

 
On June 15, 2009 at 7:23 PM , மொழிவளன் said...

நன்றி திகழ்மிளிர்

 
On June 15, 2009 at 7:32 PM , மொழிவளன் said...

//கொழும்பில் இப்படியொரு விளக்கம் இருக்கிறதென்பது ஆச்சரியம்தான்.//

ஆச்சரியத்திற்கு இன்னும் சரியாகப் பேசவராத, இப்பொழுதுதான் பேசும் ஒரு சிறுக்குழந்தை இவ்வாறு பேசியதுதான்.

தவிர கொழும்பில் "மண்டையில போடுறது" என்பது பலருக்கும் தெரிந்திருந்த ஒரு சொல் என்றாலும், யாழ், வன்னி போன்றவிடங்களில் போன்று பேச்சுப் பயன்பாட்டில் நானறிந்தவரையில் இல்லை.

 
On June 17, 2009 at 8:29 AM , சயந்தன் said...

எனக்கும் மண்டையில போடுவதென்றால் ஒரே அர்த்தம்தான் தெரியும். அது மண்டையில போடுறதுதான்.

மற்றும்படி மண்டையைப் போடுறதென்றால்.. இறக்கிறது..

அந்தாள் மண்டையைப் போட்டுட்டுது.. என்று வரும்.

 
On June 18, 2009 at 9:35 PM , மொழிவளன் said...

ஒரு பொருளை உயர்த்தி, அதனைப்பற்றியிருக்கும் கையின் வலு நிலையை தளர்த்தியவுடன், அப்பொருள் கீழே விழும் நிலையை "போடுதல்" எனப்படுகின்றது.

சிலநேரம் வேகமற்று மெதுவாக ஒரு பொருளை எறிதல் அல்லது வீசுதலையும் "போடுதல்" எனக் குறிப்பது உண்டு.

ஆனால் ஒருவரின் தலைக்கு மேலாக ஒரு தடியை ஓங்கிக்கொண்டு "கணக்கப் பேசாத, கணக்கப் பேசுனநீயென்ரால் மண்டைக்கப் போடுவன்" என்று ஒருவர் கூறுவறானால், அங்கே இவ்வார்த்தை தடியால் மண்டையை அடிக்கப்போவதைக் குறிக்கிறது.

இதனையே ஒருவர் கையில் கத்தியையோ, வாளையோ தலைக்கு மேல் துக்கிப்பிடித்துக்கொண்டு கூறினால், அது வெட்டப்போதலைக் குறிக்கிறது.

இதுவே இயக்கங்கள் தோற்றம் பெற்றக் காலங்களில் "மண்டையில போடுதல்" என்பது துப்பாக்கியால் மண்டையில் சுடுதலைக் குறிக்கிறது.

அதுவும் குறிப்பாக காட்டிக்கொடுப்போர் மற்றும் சமூகவிரோதிகளை மின்விளக்குக் கம்பங்களில் கட்டி தண்டிக்கும் செயலை குறித்த ஒரு வழக்கு சொல் போன்றே பயன்பட்டது எனலாம்.