Author: கானா பிரபா
•3:10 AM
வல்வை நலன்புரிச் சங்கம் அவுஸ்திரேலியா பிரிவு ஜூலை 2005 இல் வெளியிட்ட மலரைப் புரட்டியபோது அதன் ஆசிரியர் வல்வை சு.சக்திவடிவேல் இந்த "மாப்புக்கட்டு" பற்றி இப்படிச் சொல்கின்றார்.

1972 ஆம் ஆண்டு காலப்பகுதி அது. ஆசிரிய சேவையில் என்னை இணைத்துக் கொண்ட காலம். எனது ஆசிரியப்பணி அல்வாய் சிறீலங்கா வித்தியாசாலையில் தான் தொடங்கியது.

அன்று மாணவர்களுக்கு கணிதம் படிப்பித்துக் கொண்டிருந்தேன். ஒரு மாணவன் வீட்டுப்பாடம் செய்து வரவில்லை.

"பாரதிதாசன்! எழும்பு.....வா இங்கை"
கதிரையிலிருந்து கொண்டு அவனை அழைத்தேன்.
அவன் பவ்யமாக என் முன்னே வந்து நின்றான்.
என் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, கடுப்பான தொனியில்....
"மாப்புக் கட்டடா" என்றேன் நான்.

அவன் அப்படியே நின்று கொண்டிருந்தான்.
எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. எனது சொல்லுக்குக் கட்டுப்படாமல்...அவன் பணிவான மாணவன் தான்! என்றாலும் நான் சொல்லும் பொழுது..அவனை அடிப்பதற்காக கையை ஓங்கினேன்.

எனது கை அவனது முதுகில் இறங்குவதற்கு முன்... எனது மனசில் ஒரு சிறு பொறி.
"கையைக் கட்டடா"
அவன் உடனடியாகக் கைகளைக் கட்டிக்கொண்டு பரிதாபமாக என்னைப் பார்த்தான்.
அப்பொழுதுதான் "மாப்புக் கட்டு என்பது எமது வல்வெட்டித்துறைப் பிரதேசத்துக்கே மட்டுமான சொல்வழக்கு என்பது எனக்குப் புரிந்தது.

மாப்புக்கட்டு என்றால் மார்பைக் கட்டு, கையைக் கட்டு என்று அர்த்தப்படும். அதாவது இரண்டுகைகளையும் மார்பை நோக்கிக் கட்டிப் பணிவாக நின்றிருத்தல் என்பதேயாகும்.
This entry was posted on 3:10 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On June 10, 2009 at 3:35 AM , ஆயில்யன் said...

சினிமாவுல போலீஸ் ஸ்டேஷன்ல உக்காந்திருப்பாங்களே அந்த ஸ்டைலா?

அய்யா என்னைய மன்னிச்சிடுங்க ரேஞ்சுல ஒரு படத்துல கவுண்டமணி அழுதுக்கிட்டு குத்தவைச்சு உக்காந்திருப்பாரு !

:)))

 
On June 10, 2009 at 3:36 AM , கானா பிரபா said...

பாஸ்

கவுண்டருக்கு கிடைத்த தண்டனையை குந்தியிருத்தல் என்று சொல்வோம். இது நின்று கொண்டே கைகட்டி நிற்றல்.

 
On June 10, 2009 at 3:59 AM , சந்தனமுல்லை said...

கானாஸ்...பாவம் சின்னபாண்டி..அவருக்கு தெரிஞ்சதை சொல்றாரு விட்டுடுங்க! :-))

 
On June 10, 2009 at 4:24 AM , வாசுகி said...

நானும் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.எங்கட ஊரிலயும் பாவிக்கிறதில்லை.
ஒரு படம் போட்டிருந்தால் இன்னும் விளக்கமாக இருக்கும்.
வட்டார வழக்கு நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு.

 
On June 10, 2009 at 4:30 AM , வாசுகி said...

முதல் 3 பின்னூட்டமும் ஒரே பகிடியாய் இருக்கு.:))
//இது நின்று கொண்டே கைகட்டி நிற்றல்.//
இதென்ன நின்றுகொண்டே நிற்றல்.
ம்ம் குழப்புதே,

நீங்கள் நல்லா படம் கீறுவீங்களெல்லே (?)ஒரு படம் போட்டுவிடுங்கோவன்.

 
On June 10, 2009 at 4:43 AM , நாகு (Nagu) said...

சும்மா கும்மும் எல்லோரும் ஒரு மூலைல மாப்புக்கட்டுங்க...

மாப்புக்கட்டி நில்லுங்கன்னு எழுதனேன் முதல்ல. அப்புறம் வாசுகி பாயப்போறாங்கன்னு மாத்திட்டேன்.

எனக்கு இதுவரை மப்பு கட்டுவதுதான் தெரியும் :-)

 
On June 10, 2009 at 8:03 PM , கானா பிரபா said...

ஆச்சி

சின்னப்பாண்டி இன்னும் பழைய நினைப்பிலேயே இருக்கார் இல்லையா :)

வாங்கோ வாசுகி

விளக்கம் கொடுத்து நானும் குழம்பிப்போனன் போல :) எனக்கு படம் எடுக்க வரும் படம் வரைய வருமா எண்டு இனித்தான் முயற்சிக்கோணும். நீங்களும் இந்தக் குழுமத்தில் இணையலாமே?

வாங்க நாகு நண்பா

மப்பு நாங்களும் பாவிப்போம்ல :)

 
On June 10, 2009 at 10:32 PM , தமிழன்-கறுப்பி... said...

வல்வெட்டித்துறையைப்பற்றி இன்னும் நிறையக்கதைக்கலாம்.. வடமராட்சியில் வித்தியாசமான மொழிநடை அவர்களுடையது..