•1:05 AM
இஞ்சை தங்கமக்கா ! எல்லுப் போல சீனி நல்லெண்ணை இருந்தாத் தாங்கோ, ஆனைக்கோட்டைக்கு இவர் வாங்கப் போயிட்டார், வந்தவுடனை தாறன்"
மேற் சொன்ன உதாரணத்தில் வரும் எல்லுப் போல என்ற சொற் பிரயோகம் கொஞ்சம் சிறிய அளவில், அல்லது தமிழக வழக்கில் பயன்படுத்துமாற் போல "கம்மியா" என்ற பொருட் பதத்திற்கு ஒப்பானது.
தாயகத்தில் இருக்கும் காலத்தில் பக்கத்து வேலியால் எட்டி நின்று சீனி, உப்பு, எண்ணெய் போன்ற சாமன்களைப் பக்கத்து வீட்டுக்காரரிடம் அவசரம், ஆபத்துக்கு என்று வாங்கும் போது இப்படியான "எல்லுப் போல" என்ற சொல் பயன்பாட்டில் இருக்கும். கொஞ்சம் அதிகப் படியாகக் கேட்கும் தொனியில் கேட்டால் பக்கத்து வீட்டுக்காரர் பயந்து விடுவார்களோ என்ற காரணமாக இருக்குமோ என்னமோ.
"எல்லு" என்பதற்கு அகராதியில் என்ன விளக்கம் கொடுத்திருக்கின்றார்கள் என்று பார்த்தால் "நாள்", "சூரியன்" என்று மட்டுமே விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே அகராதியின் விளக்கத்தை இங்கே பொருத்திப் பார்க்க முடியாது. "எள்ளுப் போல" என்பது மருவி "எல்லுப் போல" ஆகியிருக்கலாமோ என்னவோ.
ஜாஸ்தி என்று தமிழகத்தில் வழங்கும் சொற்பதத்துக்குச் சம அர்த்தமாக ஈழத்து மொழி வழக்கில் "கனக்க" என்பது அமையும்.
"கனக்கப் போசாதையும், கண்டீரோ"
"திருவிழாவுக்கு கன சனம் வந்தது"
"கன சாமான்கள் கடையில் வந்திருக்காம்"
போன்ற உதாரணங்கள் "கனக்க" என்பதற்குப் பொருத்திப் பார்க்கப்படும் வார்த்தைப் பிரயோகங்களாகும்.
10 comments:
'கனக்க பேசாதயும் (கதையாதையும்)' எண்டு வந்தால், பின்னால அனேகமா 'கண்டீரோ' எண்டு வரும்போல கிடக்கு. பொதுவா 'நீர்' என்ற சொல்லோடதான், ந்த ‘யும்' முடிவதாய் நினைவு. நான் சொல்லுறது சரியா தெரியேல்லை :)
கனக்க பேசாதீங்க அப்படிங்கறது எனக்கு ரொம்ப நாளா ரொம்ப பெரிய சப்ஜெக்ட்டெல்லாம் பேசாதீங்கன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் பிறகு ஒரு நாள் நண்பர் நீங்க கொஞ்சம் ஓவராத்தான் பேசுறீங்க அப்படின்னு சொல்லுறதுக்கு யூஸ் பண்ணுவோம்ன்னு சொல்லி புரியவைச்சாரு!
'கனக்க பேசாதயும் (கதையாதையும்)' எண்டு வந்தால், பின்னால அனேகமா 'கண்டீரோ' எண்டு வரும்போல கிடக்கு.//
நீங்கள் சொன்னபடிதான் பேச்சு வழக்கிருக்கும், மாற்றி விட்டேன் ;) நன்றி
நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்ஸ் மற்றும் சந்ரு
கனதியான விடயத்தை கதைச்சிருக்கிறியள்
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின்
தமிழ் வேர்ச் சொல்லகராதி,
இங்கே பலருக்கும் பயன் பெறும்.
நன்றி.
'கனக்க பேசாதயும் கண்டீரோ.' இதில 'பேசாதயும்' என்ட சொல்லு ஈழத்து வழக்கில இருக்கோ பிரபா அண்ணை? பெரும்பாலும் 'கனக்க கதையாதையும் கண்டீரோ' இப்படித்தானே ஈழத்து வழக்கில இருக்கும். 'பேச்சு, நீ பேசு,நீ பேசினியா? நீங்கள் பேசுங்கள்'. என்பதெல்லாம் தமிழக வழக்கு தானே?
மட்டக்களப்பில் "எள்ளொப்பம்" ( எள்+ஒப்பம்= எள் அளவு) எண்டு சொல்லுவம்
மட்டக்களப்பார் "எள்ளொப்பம்" எண்டு சொல்லுவாங்க.