•10:24 PM
திடீர் என ஒரு சந்தேகம் வந்தது இப்ப..
யாராவது பதில் தொரிந்தால் சொல்லுங்க.. புண்ணியம் கிடைக்கும்
”கோதாரி விழுந்த” என்றால் என்ன?
பி.கு:
சிட்னிக்கு வந்தாப் பிறகு விசர்த்தனமான சந்தேகங்கள் வருது....ஒரு கிழமைக்கு முன் கொசுவுக்கு எத்தனை கால் என்ற சந்தேகம் வந்தது.. கொசுவை கலை, கலை என கலைத்து கடைசியா அதுக்கு 6 கால் என்று கண்டுபிடிச்சாப் பிறகு தான் நித்திர வந்தது..
அன்புடன்
சஞ்சயன்
யாராவது பதில் தொரிந்தால் சொல்லுங்க.. புண்ணியம் கிடைக்கும்
”கோதாரி விழுந்த” என்றால் என்ன?
பி.கு:
சிட்னிக்கு வந்தாப் பிறகு விசர்த்தனமான சந்தேகங்கள் வருது....ஒரு கிழமைக்கு முன் கொசுவுக்கு எத்தனை கால் என்ற சந்தேகம் வந்தது.. கொசுவை கலை, கலை என கலைத்து கடைசியா அதுக்கு 6 கால் என்று கண்டுபிடிச்சாப் பிறகு தான் நித்திர வந்தது..
அன்புடன்
சஞ்சயன்
9 comments:
Cud say annoying...
கோதரி விழுவான் என்றால் annoying bugger, நாசமறுப்பான் or நாசமறுவான் என்றால் பாவி,கிராதகன், கடங்காரன் என்று இந்திய வழக்கில் விளிப்பவையை குறிக்கும்... ,
இந்த கோதாரி பற்றி நானும் எழுத இருந்தனான் முந்திவிட்டியள்.
எல்லாம் இந்த கோதாரி நேரம் இல்லாமையால் தான் முடியவில்லை.
கோதாரி விழுவாங்கள் வாட்டி எடுக்கின்றார்கள்.
கோதாரியில் போவாங்கள் புளியடிச் சந்தியில் நிற்கின்றார்களாம்.
ஒரு கோதாரியும் இல்லை.
இப்படிக் கோதாரி பல இடங்களில் பலவிதமாக பயன்படுத்தப்படுகின்றது. வசனத்திற்க்கு ஏற்றதுபோல் பொருள் கொள்ளவேண்டியதுதான்.
'கோமாரி' என்பது மாடு, ஆடு போன்ற கால்நடைகளில் வரும் ஒரு கொள்ளை நோய். இதுதான் கோதாரி என்று திரிபடைந்ததாம்.
மற்றவர்கள் மேல் கோவம் வரும்போது சொல்கையில், இந்த கோமாரி போன்ற கொடிய நோயைப்போல் என்று அர்த்தப்படுமாம். சிலர் தன்னைத்தான் திட்டவும் இதனைப் பாவிப்பதைக் கண்டிருக்கிறேன் :). “நானொரு கோதாரியில போவாள், இப்படிச் செய்து போட்டன்” என்று சொல்வார்கள்.
தவிர இப்படி திட்டுவதைத் தவிர, இந்தச் சொல்லை வெகு சாதாரணமாக சொல்பவர்களும் உண்டு. பொதுவாக வயது போனவர்கள்தான் இதை சொல்வார்கள் என்றும், இது ஒரு கூடாத சொல் என்றும் நினைத்திருந்தேன். ஆனா ஒரு இளம்பெண் சர்வசாதாரணமாக, தனக்குப் பிடிக்காதது எது நடந்தாலும், ‘இதென்ன கோதாரி' என்று சொல்வதைக் கண்டு விட்டு, “ஏன் இப்படி கூடாத சொல்லைச் சொல்லுறீங்கள்” என்று கேட்டேன். அவ ‘இதுல என்ன இருக்கு? அது ஒரு வருத்தம்தானே (அதாவது நோய்தானே)' என்றா. அவ கொடுத்த விளக்கம்தான் நான் மேலே சொன்னது :).
கோதாரி என்றால் வாந்திபேதி நோய்....
அர்த்தங்களைத் தேடுகையில் சரியான அர்த்தம் கிடைக்கும் வரை தேடுங்கள் நண்பர்களே.. சோர்ந்து விடக்கூடாது...
அதேபோல 'கொள்ளையில போவான்' என்றும் திட்டுவார்கள்.. கொள்ளை என்றால் பிளேக் நோய்.... இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களை இந்த ஆட்கொல்லிநோய்கள் கடைசியாக எப்போ தாக்கின என்ற விபரம் எனக்குத் தேவை....அறிந்தவர்கள் அறியத் தாருங்கள்...
கோதாரி என்றால் வாந்திபேதி நோய். அதேபோல 'கொள்ளையில போவான்' என்றும் திட்டுவார்கள். கொள்ளை நோய் என்பது பிளேக்... அர்த்தங்களைத் தேடும்போது சரியான அர்த்தம் கிடைக்கும் வரை தேடுங்கள் நண்பர்களே.. சோர்ந்து போகக் கூடாது... இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களை கடைசியாக எப்போது இந்த ஆட்கொல்லி நோய்கள் தாக்கின என்ற விபரம் எனக்குத் தேவை. அறிந்தவர்கள் அறியத் தாருங்கள்...
கொசு எண்டா என்ன? நுளம்பா?
//கொசு எண்டா என்ன? நுளம்பா?//
அதே, அதே :).
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81
http://maniyinpakkam.blogspot.com/2008/11/blog-post_02.html
இதையும் பாருங்கோ.
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+&matchtype=exact&display=utf8