•6:41 AM
புழுகமும், புழுகுதலும்!
இந்தச் சொற்கள் எங்கெல்லாம் பாவிக்கிறவை எண்டு எனக்குத் தெரியாது. ஆனால் நான் கேள்விப்பட்டது தென்மராட்சியில.
1. புழுகம்/புழுகு = மகிழ்ச்சி
- இண்டைக்கு கானாப் பிரபாட இடுகைக்கு நிறைய பாராட்டு கிடைச்சதுல, ஆளுக்கு நல்ல புழுகம்.
- ஷ்ரேயாட வீட்டை அவடை பெரியண்ணா ஆக்கள் போயிருக்கிறதினால, அவ பெரிய புழுகில நிக்கிறாவாம்.
2. புழுகுதல் = மற்றவரைப் பாதிக்காத பொய்களைச் சொல்லுதல் அல்லது உண்மைகளையே மிகைபடச் சொல்லுதல் / பெரிதுபடுத்திச் சொல்லுதல்
- அவன், நல்லா புழுகுவான். அவன் சொல்லுறதில பாதியைத்தான் உண்மையெண்டு எடுக்கலாம்.
- அவள் புழுகுறதை கேட்டுக் கொண்டு நிண்டா, எனக்கு விசர்தான் (விசரெண்டா இந்த இடத்தில பையித்தியமில்லை, ஒரு எரிச்சல்) வரும். ஏதோ எங்களுக்கு ஒண்டும் தெரியாதெண்ட நினைப்பில புழுகிக் கொண்டே போறது.
சரி, இனி எப்பவாவது, இப்பிடி ஏதாவது ஒரு சொல்லு, அல்லது எங்கட ஊர்ப் பழக்கம் நினைவுக்கு வரும்வரை நான் போட்டு வாறன்.

4 comments:
//புழுகமும்//
புழுக்கம்னு கொங்கு பாசையில ஒரு சொல் உண்டு. புழுகம் ஒரு வார்த்தை இப்பத்தான் கேள்விப்படறேங்க.
கனக்க புழுகாம அளவா புழுகி இருக்கிறியள்.
:)
ஆகா , புழுகத்தையும் புழுகையும் ஒண்டாப் போட்டுக் கலக்கி விட்டியள், இதே சந்தத்தில் வருகின்ற சொற்களைத் தேடி எடுத்து இட்டாலும் சிறப்பாக இருக்கும்
புழுத்தின வேல பாக்காத எண்டும் சொல்லுவாங்க.யாராவது பிரயோசனமல்லாத வேலை செய்தால் இப்படியும் திட்டுவாங்க ஊரில...இப்படி கனக்க திட்டுவாங்கியிருக்கிறன் நான்