•2:33 AM
"எடியே! ஏனடி இடி விழுந்த மாதிரி கன்னத்திலை கை வச்சுக்கொண்டு யோசினை, கையை உப்பிடி கன்னத்திலை வச்சுக் கொண்டிருக்காதை, தரித்திரம் பிடிச்சுடும்".
மேற்கண்ட ஏச்சு வழக்கமாக ஈழத்துக் கிராமத்தின் பெரியவர்களால் சம்பாஷிக்கப்படும் ஏச்சுக்களில் ஒன்றாக இருக்கும்.
அடியே என்று தமிழக வழக்கில் இருப்பது தான் ஈழத்தில் எடியே என்று அமைந்து காணப்படும்.
எடியே என்பதற்கு ஒத்திசைவாக கேரளத்தின் மலையாளப் பேச்சு வழக்கிலும் "எடி" என்று வழங்கப்படுவதை மலையாளப் படங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அதே போன்று மலையாளத்தில் "எடா" என்று புழங்கப்படும் வார்த்தைப் பிரயோகம், தமிழகத்தில் "அடே" என்று வழங்கப்படும் அதே சமயம் ஈழத்தில் "எடேய்" என்று பயன்படுத்தப்படும்.
தமிழகத்தின் ஊர்களில் எடியே, எடி, எடே, எடேய் என்று ஈழத்தில் பயன்படுத்துவது மாதிரி வழக்கம் உண்டா தெரியவில்லை.
"எடேய் தம்பி" என்று அன்பாக வழங்கப்படும் சொல் அடிகளை கொஞ்சம் அழுத்திக் கடுமையாகப் பேசினால் அதுவே வன் சொல்லாக அமைகின்றது.
என்னடா இது ஈழத்து முற்றத்தில் எடியூரப்பா என்று நினைத்து வந்தவர்களுக்கு இப்போது விடை கிடைத்திருக்குமே ;)
படம் உதவி: விடை நோக்கி இணையத்தளம்

12 comments:
பதிவின் தலைப்பு - :-)) நல்ல பகிர்வு கானாஸ்!
"எடேய் தம்பி" (அன்பாக) அசத்திறியேயப்பா. எங்கையெல்லாம் படிச்சே!
நல்ல பதிவு.
"எடேய்" என்பதற்குப் பதில் தமிழகத்தில் பல ஊர்களில் "அடேய்" என்று சிறுவர்களை விளிப்பதுண்டு. அது செல்லமாகவும் கடுஞ்சொல்லாகவும் பயன்படும்.
எடோ, எடா, போன்ற வார்த்தைகள் ஒருவேளை கன்னியாகுமரி, நாகர்கோவில் பக்கம் கேட்கலாம் என்று நினைக்கிறேன்...
எடியூரப்பா என்று சொன்னதும் ஈழத்துக்கும் கர்னாடகத்துக்கும் என்ன சம்பந்தம் என்று வந்து பார்த்தேன்...
வருகைக்கு நன்றி சந்தன முல்லை ;)
மாதேவி
மிக்க நன்றி
வாங்க வஜ்ரா
;) எடியூரப்பா என்று நினைத்தா வந்தீர்கள். எடா என்பது நான் குறிப்பிட்டது போல மலையாளத்தில் வரும், எடேய் என்பது வழக்கில் உள்ளதா என்பதை அறிய ஆவல்
சிங்களத்தில் ”அடோ” என்றால் டேய் என்றதுக்கு சமம். ஆமிக்காறன் ”அடோ” என்று கத்தும் போது ஓடினால் ”சங்கு” தான்.
நாகர்கோயில் பக்கம் இப்படி மலையாள வாசனை தெறிக்க தமிழ் பேசுவார்கள்
தென் தமிழகத்தின் கடலோர ஊர்களில் ‘ஏக்கி’என்பது ‘என்னடி’ என் அர்த்தப்படும். வாக்கி என்றால் வாடி என்று அர்த்தம்.அதுபோல போக்கி என்றால் போடி.
விசரன் said...
சிங்களத்தில் ”அடோ” என்றால் டேய் என்றதுக்கு சமம். //
நன்றி அண்ணை ;)
சின்ன அம்மிணி
தகவலுக்கு நன்றி
மோகன ரூபன்
நீங்கள் சொன்ன வார்த்தைப் பிரயோகங்களை இன்று தான் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி
//"எடி" என்று வழங்கப்படுவதை மலையாளப் படங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.//
எந்த படம் பாஸ்? :))))
எடியூரப்பா இப்போ அடிவாங்கியயூரப்பாவா இருக்காரு இங்க. :)
அம்பி
உங்க பேரைப் போல அம்பியா இருக்கிறேன், மலையாளத்தில் நல்ல படம் தான் ;)
தென் தமிழகத்தின் கடலோர ஊர்களில் ‘ஏக்கி’என்பது ‘என்னடி’ என் அர்த்தப்படும். வாக்கி என்றால் வாடி என்று அர்த்தம்.அதுபோல போக்கி என்றால் போடி.//
தாக்கி என்றால் தாடிதானே :)
எடே என்பது மிகான்புடன் அழைக்கும் சொல்
அன்புடன்
வர்மா