•1:30 AM
கொழுவல்!
.......................................
விடுப்பு (பூராயம்) கதைக்கிறவர் ஒருவர்: “அந்த கமலன் வீட்டில அண்ணனுக்கும், தம்பிக்குமிடையில நல்ல கொழுவலாம்”. (சிலபேர் இதை ஒருவித மகிழ்ச்சியுடன் சொல்வார்கள். மற்றவை கொழுவுப்படுறதில இவைக்கு அவ்வளவு மகிழ்ச்சி :)
(பூராயம் என்பது நல்ல பழங்காலத்தில பாவித்த ஒரு சொல் என்று நினைக்கிறன். ஆச்சி சொன்னதைக் கேட்டிருப்பதாக சின்ன ஞாபகம்.)
........................................
அம்மா மகனிடம்: “தங்கச்சியோட ஏன் நீ கொழுவிக்கொண்டு இருக்கிறாய். சும்மா உன்ரை வேலையைப் பாத்துக்கொண்டு போ பாப்பம்”
மகன்: “நானெங்கை கொழுவுறன். அவள்தான் என்னோட கொழுவலுக்கு வாறாள்”.
.........................................
நல்ல நோக்கமுள்ள ஒருவர்: “இவ்வளவுநாளும் நல்ல சினேகிதமா இருந்திட்டு, இப்ப சும்மா தேவையில்லாம கொழுவுப்பட்டுக் கொண்டு இருக்கிறாங்கள். நாந்தான் ஒருமாதிரி சமாதானம் பிடிச்சு விட்டனான்”
..........................................
எனக்கொரு சந்தேகம். 'கொழுவுதல்' என்பதை நேரடியாக யோசித்துப் பார்த்தால், ‘இணைதல் அல்லது இணைத்தல் என்ற பொருள்தானே வரும். அப்படியிருக்க, அதற்கு நேரெதிரான சண்டை பிடித்தல் என்னும் பொருளில் ஏன் ‘கொழுவுத' பாவிக்கப்படுகிறது?
...................................
பி.கு; என்ன கானா பிரபா ஏதாவது சந்தம் தொனிக்குதா? :). ஒரு ‘ழு' எழுத்து வருகுதெண்டு நினைக்கிறன் :)

2 comments:
கோதரியில போனவனுக்கு எத்தனை சந்தேகங்கள்.. ஹி ஹி...
கொழுவுதல் என்றால் வம்புக்கிழுத்தல்.. கொக்கி போட்டு வில்லங்கத்தை இழுத்தல் என்டும் சொல்லலாம்..
கொழுவல் நல்லாத் தான் இருக்கு ;)