•10:38 PM
இந்த கிழம பிளமிங்டன் (சிட்னி) போன போது அங்க ஒரு கடையில (கானா பிரபா மாதிரி எந்தக் கடை என்றெல்லாம் கேக்கக் கூடாது...... அழுதுடுவன்) தமிழ் மரபு எண்டு ஒரு புத்தகம் வாங்கின நான். அதில கனக்க விசயமிருக்கு. வித்துவான் பொன். முத்துக்குமரன் பி.ஓ.எல் (யாழ்ப்பாணம்) எழுதின புத்தகம். என்னைப் போல தமிழ் வகுப்பை கட் அடித்து படம் பார்க்க போன அறிவுக் கொளுந்துகளுக்கு வயது வந்த பின் தமிழ் படிக்க நல்ல புத்தகம்..
அதில நாம கதைக்கிற இணை மொழிகள் கனக்க இருந்தது. அதில சிலது விளங்கேல்ல. தெரிந்த புண்ணியவான்கள் பதில் சொல்லுங்கோ (பாவிகளும் சொல்லலாம்).
1. கன்று காலி
2. கூட்டம் நாட்டம்
3. போக்குப் புகல்
4. விருந்தாள் வேற்றாள்
5. வேரும் தூரும்
அதில நாம கதைக்கிற இணை மொழிகள் கனக்க இருந்தது. அதில சிலது விளங்கேல்ல. தெரிந்த புண்ணியவான்கள் பதில் சொல்லுங்கோ (பாவிகளும் சொல்லலாம்).
1. கன்று காலி
2. கூட்டம் நாட்டம்
3. போக்குப் புகல்
4. விருந்தாள் வேற்றாள்
5. வேரும் தூரும்
2 comments:
மூளையை கொஞ்சம் கசக்கி ( மூளை இருந்த )
சொல்லுகின்றேன்.
இந்த இடுகையை வாசித்துப் பாருங்கள்
1.கண்டு காலி - "இந்த ஆமிக்காரர் கண்டுகாலி ஒண்டும் விடாமல் இடம் எல்லாத்தையும் வெட்ட வெளியாக்கிப் போட்டாங்கள்"- என்றால் பூக்கன்று அளவில் இருக்கும் சிறு மரங்களும் அதனைப் போன்று இருக்கின்ற சிறு சிறு பூடுகளும் கூட இல்லாமல் என்று பொருள்.
2.கூட்டம் நாட்டம் - " என்ன இண்டைக்கு கூட்டம் நாட்டம் ஒண்டையும் காணேல்லை"-என்றால் வழக்கமாக வருகின்றவர்களை அல்லது கூடுகிறவர்களைக் காணவில்லை என்று அர்த்தம்.
3.விருந்தாள் வேற்றாள் -"விருந்தாள் வேற்றாள் என்று பாராமல் எல்லோரையும் அவள் உபசரித்தாள்".என்பதன் பொருள் விருந்தாளி, பிறத்தி என்று பாராமல் எல்லோரையும் உபசரித்தாள் என்பதாகும்.
4.வேரும் தூரும் - வேர் நிலத்திற்கு அடியில் இருப்பது. தூர் நிலத்துக்கு மேல் இருக்கும் மரத்தின் அடிப் பாகம்."வேர், தூர் ஒண்டும் இல்லாமல் துப்பரவாக்கினர்"
பதிவை விட பின்னூட்டம் பெருத்து விட்டது போல!