Author: Admin
•4:28 AM
ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை சேர்ப்பதாக இருக்கின்றன.

மட்டக்களப்பைப் பொறுத்தவரை சில சொற்களோடு "கா" சேர்த்து பயன் படுத்தும் வழக்கம் இருக்கின்றது. உதாரணமாக நாம் என்ன நடக்கிறது என்று கேட்பதனை என்னாகா நடக்கிறது என்று பேசுவார்கள். யார் - யாருகா, எப்போ - எப்போகா, வா - வாகா, தெரியுமா - தெரியுமாகா, சாப்பிட்டாச்சா - சாப்பிட்டாச்சாகா போன்று "கா" சேர்த்து பயன் படுத்தப்படுகிறது.

இங்கே பேசுகின்ற போது ஆணுடனோ, பெண்ணுடனோ பேசுவதாக இருந்தாலும் கா போட்டே பேசுகின்றனர். இப்போது இவ்வாறு கா போட்டுப் பேசுவது இளைய சமுதாயத்திடம் குறைவான பயன்பாட்டில் இருந்தாலும். வயது வந்தவர்களாலும், கிராமப்புறங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

என்ன என்பதற்கும் என்னகா என்பதற்கும் இடையிலே ஒரு அன்பு அல்லது பாசப்பிணைப்பு வித்தியாசங்கள் இருப்பதாக உணரப்படுகின்றது. என்ன என்பதனைவிட என்னகா என்பது பேசுபவர்களுக்கிடையே ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்துகின்றது. என்ன என்பது நாம் பேசும் தொனியிலே வித்தியாசப் படுகிறது. என்ன என்று கோபமாகவும் கேட்கலாம் சந்தோசமாகவும் கேட்கலாம். என்னகா எனும்போது பெசுபவர்களுக்குள்ளேயான உறவு அல்லது அன்பு நெருக்கமடைவதாக உணர்கின்றனர்.

இன்றும் கிராமப் புறங்களிலும், முதியவர்களாலும் கா சேர்த்து சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பல பிரதேச பேச்சு வழக்குச் சொற்கள் இருக்கின்றன அவற்றையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

சந்ரு
This entry was posted on 4:28 AM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On December 28, 2009 at 4:30 AM , கானா பிரபா said...

வணக்கம் சந்ரு

ஈழத்து முற்றத்தில் நல்லதொரு இடுகையோடு உங்களை வரவேற்கின்றேன்

 
On December 28, 2009 at 6:39 PM , thiyaa said...

அருமை

 
On December 29, 2009 at 6:45 AM , வர்மா said...

மட்டக்களப்புபேச்சுப்ப்பற்றி உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். மட்டக்களப்புதமிழுக்கும் முஸ்லிம்கள்பேசும்தமிழுக்கும் உள்ளவேறுபாட்டையும் தந்தால் நல்லது.
அன்புடன்
வர்மா

 
On December 29, 2009 at 8:38 AM , Admin said...

//கானா பிரபா said... //

நன்றி அண்ணா.. அவ்வப்போது பல விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

 
On December 29, 2009 at 8:42 AM , Admin said...

//வர்மா said... //

மட்டக்களப்பு பேச்சுத்தமிழ் தொடர்பாக பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். முஸ்லிம்களின் பேச்சுத்தமிழிலே பல வித்தியாசங்கள் இருக்கின்றன அவற்றையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்கின்றேன்.